Total Pageviews

Blog Archive

Sunday, 26 June 2011

ட்ரிபோலியில் இருந்து வெளியேற லிபிய அதிபர் கடாபி முடிவு

தொடர்ந்து நேட்டோப் படைகள் கடாபியின் மாளிகைகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதால், தலைநகர் ட்ரிபோலியில் இருந்து வெளியேற லிபிய அதிபர் கடாபி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அவருக்கு லிபியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது.

லிபியாவில் கிளர்சியாளர்களுக்கும், லிபிய அரசுப் படைகளுக்கும் இடையில் தொடர்ந்து பல மாதங்களுக்கு சண்டை நடந்து வருகின்றது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நேட்டோப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக நேட்டோ விமானப்படைகள் லிபிய அதிபர் கடாபியின் மாளிகைகளை குறிவைத்து தாக்கி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர் நேட்டோப் படைகள் லிபிய அதிபர் கடாபியின் மாளிகை ஒன்றை குறிவைத்து தாக்கியதில், அதிபர் கடாபியின் மகனும், சில பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள்.

தொடர்ந்து தனது மாளிகைகள் நேட்டோப்படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால், தலைநகர் ட்ரிபோலி தனக்கு பாதுகாப்பு இல்லாத இடம் என்று தற்பொழுது கடாபி கருதுவதாகவும், எனவே தலைநகர் ட்ரிபோலியை விட்டு வெளியேறி வேறு இடத்தில் அவர் தங்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், அவருக்கு லிபியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும், அதிபர் பதவில் இருந்து விலகினால், கடாபி லிபியாவில் தொடர்ந்து தங்கி இருக்க அனுமதிப்படுவார் என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.