வாஷிங்டன், செப்.16: இரு சூரியன்களைச் சுற்றிவரும் கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்ததாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கார்ல் úஸகன் வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா விண்ணில் செலுத்திய கெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்களிலிருந்து இரு சூரியன்கள் உள்ள கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இந்த கிரகம் பூமியிலிருந்து 200 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது. ஒளி வருடம் என்பது ஒளியானது ஒரு வருடத்தில் கடக்கும் தூரமாகும். அதாவது ஏறத்தாழ ஒன்பதரை லட்சம் கோடி கிலோமீட்டராகும்.
இரண்டு சூரியன்களைச் சுற்றி வர இந்த கிரகம் எடுத்துக் கொள்ளும் காலம் 229 நாள்களாகும். இரண்டு சூரியன்கள் இருந்தாலும் இவை ஒரே திசையில் இருப்பதால் பூமியைப் போலவே இங்கு பகல் இரவு இருந்து வருகிறது.
ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இதனால் 20 நாள்களுக்கு ஒரு முறை கிரகணம் ஏற்படுகிறது. இவை இரண்டும் நம்முடைய சூரியனை விடச் சிறியவை. ஒன்று நம் சூரியனைவிட முக்கால் பங்குக்கும் குறைவான அளவுள்ளது. மற்றொன்று கால் பங்குக்கும் குறைவான அளவுள்ளது.
இந்தப் பிரபஞ்சத்தில் பல வகை சூரியன்களும், அதாவது நட்சத்திரங்களும், கிரகங்களும் உள்ளன என்பதையே இது காட்டுகிறது என்று ஒரு விஞ்ஞானி குறிப்பிட்டார்.