| பல காலங்களாக வியட்நாமை மனம் கொள்ளை கொள்ளும் வனப்புடன் கூடிய குகைகளின் நாடாகத்தான் புவியியல் ஆய்வாளர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அவற்றில் பல குகைகளுக்குள் மனிதன் இதுவரை உள் சென்றதே இல்லை. தற்போது அங்கே உலகின் மிகப்பெரும் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஹேங் சன் தூங் எனப்படும் அக்குகை, ஒப்பீட்டளவில் மொத்த நியூயார்க் நகர மக்கள் தொகையினையும் கொள்ளளவாக கொள்ளகூடியது ஆகும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஹோவர்ட் மற்றும் லிம்பர்ட் ஆகியோர் இந்த ஹேங் சன் தூங் குகைக்கு வந்த போது அதனுடைய மிகப்பெரும் பக்கசுவர் அவர்களால் தாண்ட இயலாததாக இருக்கவே, மீண்டும் இந்தக் குகையின் எல்லைகளை அளந்து கண்டுபிடிக்க தற்போது இதற்கு திரும்பி வந்துள்ளனர். பரந்து விரிந்து கிடக்கும் இந்த அற்புத பூமியில் இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் மனித தேடலுக்குக் காத்து கொண்டுள்ளதோ… |
Total Pageviews
Blog Archive
Saturday, 8 January 2011
பிரம்மாண்ட குகையினுள் பெரிய காடு
Subscribe to:
Comments (Atom)