Total Pageviews

Blog Archive

Saturday, 26 March 2011

மரம் நடும் நடவடிக்கைகள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையின் கீழுள்ள வாரியங்கள், அமைச்சகங்கள் உள்ளிட்ட துறைகளின் 197 அமைச்சர் நிலை அலுவலர்கள் 26ம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் மரம் நடும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நடப்பு குடியரசின் அமைச்சர்கள் தன்னார்வ மரம் நடும் நடவடிக்கை பெய்ஜிங் மாநகரின் தொஞ்சோ மாவட்டத்திலுள்ள பிங்ஹோ பூங்காவில் நடைபெற்றது. அலுவலர்கள் மரக் கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றியுள்ளனர். பல்வகை மரங்கள் நடப்பட்டுள்ளன. மாசற்ற பெய்ஜிங்கிக்கு மீண்டும் உத்தரவாதம் கிடைத்துள்ளது.

இவ்வாண்டு மக்கள் அனைவரும் மரம் நடும் தன்னார்வ நடவடிக்கையில் கலந்து கொண்ட 30வது ஆண்டாகும். இவ்வாண்டு ஐ.நா நிர்ணயித்த சர்வதேச வனவள ஆண்டும் ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் 1270 கோடி மக்கள் தன்னார்வ மரம் நடும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 5890 கோடி மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : Earth Hour!

இன்று (மார்ச் 26ம் திகதி), இரவு 8.30 க்கு, 2011 இன் Earth Hour எனும் உலகின் மாபெரும் தன்னிச்சையான பொதுமக்கள் நிகழ்வு இடம்பெறுகிறது.
சரியாக இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை, உலகின் பல்லாயிரக்கணக்கான வர்த்தக நகரங்கள் அனைத்தும் தமது மின் ஒளிவிளக்குகளை நிறுத்தி பூமியை குளிர்விக்க சம்மதம் தெரிவித்துள்ளன. மில்லியன் கணக்கான மக்கள் கைகளில் மெழுகு வர்த்திகளுடன் சாலைகளின் ஒன்றிணைந்து Earth Hour ஐ கொண்டாட தயாராகிவிட்டனர். நீங்களும் தயாரா? உங்கள் வீடுகளிலும் மின் விளக்குகளை இந்த ஒரு மணி நேரத்திற்கு அனைத்து வைப்பீர்களா?
மின்சக்தியை நிறுத்தி வைக்க மனித சக்தியால் முடியாதா என்ன?

ஆஸ்திரேலியாவில் இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு 2007 ம் ஆண்டு சிட்னி நகரில் ஒரு சிறிய நிகழ்வாக தொடங்கப்பட்ட இந்த Earth Hour , உலகின் மாபெரும் தன்னிச்சையான தொண்டு நிகழ்வாக 2010 இல் சாதனை படைத்து, இன்று 128 நாடுகளில் இந்நிகழ்வை நடத்த சம்மதம் வாங்கப்பட்டுள்ளது.

மாபெரும் கைத்தொழில், வர்த்தக நகரங்கள் தமது உற்பத்திகளுக்காக ஒரு மணி நேரமென்ன, ஒரு 60 செக்கன் மின்சார வசதியில்லையென்றாலும், பல பில்லியன் கோடிக்கணக்கான பண நஷ்ட்டத்தை எதிர்கொள்ளும். ஆனால் ஒரு மணி நேர மின்சார சேமிப்பினால், எதிர்கால சந்ததியினரினதும், எதிர்கால பூமித்தாயின் நல்வாழ்வுக்குமாக இந்த சம்மதத்தை மனமுவந்து அளித்துள்ளன. இன்று யூடியூப் வீடியோ தளமும் தனது லோகோவில் Earth Hour க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

WWF மற்றும் earthhour.org ஆகிய இணைந்து இந்த Earth Hour நிகழ்வை நடத்துகின்றன. நீங்களும் earthhour.org இணைவதன் மூலம் இந்நிகவில் உங்களது நேரடியான பங்களிப்பை வழங்கலாம்! உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்நிகழ்வை பற்றி அறிவித்து, ஒன்றாக கொண்டாடலாம்!

எங்கே நீங்கள் தயாரா? மறந்துவிடாதீர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு! (உலக கோப்பை போட்டி தொலைக்காட்சியில் சென்றாலும் பார்ப்பதை தவிருங்கள்)
இதோ Earth Hour பற்றிய மேலதிக தகவல்களுக்கு: http://www.earthhour.org/Homepage.aspx

அதிபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் யேமன் போட்டி ஆர்ப்பாட்டங்கள்'



 



யேமனின் தலைநகர் சனா'ஆவில் அந்த நாட்டின் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹ் அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் என எதிரெதிர் போராட்டங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
 
 
அரசாங்க தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் சாலிஹ், இரத்தக்களரியை தடுக்கும் நோக்கில் தான் பதவி விலகத்தயாராக இருப்பதாகவும், ஆனால், மிகவும் பாதுகாப்பானவர்கள் என்று நம்பக்கூடிய தரப்பிடமே தான் ஆட்சியை ஒப்படைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
தனது அதிகார மாற்றம் அமைதியானதாகவும், மக்களை நோக்கியதாகவும் இருக்க வேண்டும் என்றும், ஆனால் ஊழல் பேர் வழிகளிடம் ஆட்சி சென்று சிக்க அது காரணமாகிவிடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இளைஞர்கள் தாமே தமக்கான சொந்த அரசியல் கட்சியை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களோ அவரது கூற்று அர்த்தமற்றது என்று கூறியிருக்கிறார்கள். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். 

தீவிர பாதுகாப்பு
இன்று இரு தரப்பு ஆர்ப்பபாட்டங்களும் மிகவும் பெரியவையாக இருந்ததால், தலைநகரில் பாதுகாப்புப் படையினர் மிகுந்த உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
இரு தரப்பினரிடமும் ஆயுதங்கள் இருந்தன. இரு தரப்பும் பின்வாங்குவதற்கான சமிக்ஞை எதனையும் காண்பிக்கவும் இல்லை.
இந்த நிலைமை அங்கும் உள்நாட்டுப் போருக்கு வித்திட்டு விடுமொ அன்ற அச்சம் பலரிடமும் காணப்படுகின்றது.
சிரியா நிலவரம்
அதேவேளை, மத்திய கிழக்கின் ஏனைய இடங்களிலும் அமைதியீனங்கள் தொடருகின்றன.
சிரியாவில் வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து தேசிய மட்டத்திலான ஒரு வேலை நிறுத்தத்துக்கு எதிர்த்தரப்புச் செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
சிரியாவின் அதிபர் அஸத்துக்கு அவரது 11 வருட ஆட்சியில் அவர் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய சவாலாக இது உருவெடுத்துள்ளது.
1963 ஆம் ஆண்டு முதல் அங்கு அமலில் இருந்துவரும் அவசர நிலையை நீக்குவதாக வியாழனன்று அவர் அறிவித்திருந்தார்.
போராட்டங்களுடன் சம்பந்தப்பட்ட பலர் தலைநகர் டமாஸ்கஸில் கைது செய்யப்பட்டும் உள்ளார்கள்.

கடல் நீரில் கதிர் வீச்சு

 
பாதிப்புக்குள்ளான அணுமின் நிலையம்
பாதிப்புக்குள்ளான அணுமின் நிலையம்
ஜப்பானின் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் அருகே கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் அணு சக்தி பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.
ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆரம்ப அளவை விட 250 மடங்கு அதிகமாக இப்பகுதி கடல் நீரில் கதிரியக்க அயோடினின் அளவு காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கரையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர்கள் தள்ளி கடல் நீரில் கதிரியக்கம் அளக்கப்பட்டிருந்தது.
கதிரியக்கம் கடலில் கலந்ததன் காரணமாக அப்பகுதி கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை என ஜப்பானிய அமைச்சரவையின் செயலர் யுகியோ எதானோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இப்பகுதி கடல்நீரில் காணப்பட்ட கதிரியக்க அயோடினின் அளவை விட தற்போது எட்டு மடங்கு அதிகமான அளவில் இது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கடல் நீரை யாரும் குடிக்கவோ அல்லது இப்பகுதியில் நீந்தவோ மீன்பிடிக்கவோ போவதில்லை என்பதால் கடலில் அதிக கதிரியக்கம் கலந்திருந்தாலும் மனிதர்களின் உடல் நலத்துக்கு அதனால் ஆபத்து ஒன்றும் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
எங்கிருந்து வருகிறது கதிரியக்கம்?
ஆனால் கடலில் கலக்கும் இந்தக் கதிரியக்கம் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிய முடியாமல் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேதமடைந்த அணு உலைகளில் ஒன்றிலிருந்து கசியும் கதிரியக்கம் நிலத்தடி நீரில் கலந்து அதன் வழியாக கடலுக்குள் வருகிறது என்பதற்கான சாத்தியம் உண்டு.
ஏனென்றால் சாதாரணமாகக் காணப்படும் கதிரியக்கத்தை விட பத்தாயிரம் மடங்கு அதிகமான கதிரியக்கம் கொண்ட நீர் முதலாவது மற்றும் மூன்றாவது அணு உலைகள் அருகே காணப்பட்டுள்ளது.
இதேயளவு கதிரியக்கம் கொண்ட தண்ணீர் அணுவுலைகள் இரண்டாம் மற்றும் நான்காம் இலக்க அணு உலைகள் அருகிலும் காணப்பட்டுள்ளது.
இந்தத் நீர் அணு உலைகளில் இருந்து வருகிறதா அல்லது பயன்பாட்டுக்குப் பின்னர் சேமித்துவைக்கப்பட்டுள்ள அணு எரிபொருள் கழிவுத் தேக்கத்திலிருந்து வருகிறதா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.
கதிரியக்க நீரை அகற்றுவதிலும், அணு உலைகளின் சூட்டைத் தணிப்பதற்காக கடல் நீர் அல்லாமல் வேறு இடத்திலிருந்து நீர் கொண்டு வந்து ஊற்றுவதிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

லிபியாவில் தாக்குதல் நடத்தாமல் கனடிய போர் விமானங்கள் திரும்பின



லிபியாவில் தாக்குதல் நடத்தாமல் கனடிய போர் விமானங்கள் திரும்பின
[ புதன்கிழமை, 23 மார்ச் 2011, 04:06.51 மு.ப GMT ]   
லிபியா மீது கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. லிபிய மக்கள் மீது கர்னல் கடாபி ஆட்சியாளர்களே தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தவும், பொது மக்களை காப்பாற்றவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் லிபிய வான் எல்லையில் விமானம் பறக்க தடை விதித்துள்ளது. இந்த தடையை செயல்படுத்தும் விதமான லிபியா போர் விமானங்களை வீழ்த்தவும், தரைப்படைகளை ஒடுக்கவும் கூட்டுப்படைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளன.
இந்த தாக்குதலில் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்க படைகள் உள்ளன. இந்தக் கூட்டுப்படையில் கனடிய போர் விமானங்களும் உள்ளன. செவ்வாக்கிழமை காலை இரு கனடிய சி எப் 18 போர் விமானங்கள் இலக்கை தாக்காமல் திரும்பின.
குண்டு வீச்சில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்கிற அச்சம் இருந்ததால் அந்த விமானங்கள் குண்டு வீசாமல் திரும்பின. லிபியா போர் விமானங்களை வீழ்த்த கனடிய போர் விமானங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது என ஒட்டாவாவில் மேஜர் ஜெனரல் பாம் லாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
லிபியாவில் குறிப்பிட்ட இலக்கில் கனடிய போர் விமானம் தாக்குதல் நடத்தாமல் திரும்பியது குறித்து அவர் கூறுகையில்,"பொதுமக்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது என குண்டு வீச்சை தவிர்த்தோம்" என்றார். கனடிய போர் விமானத்திற்கு எந்த வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க விமானம் சுட்டு விழ்த்தப்பட்டது - லிபிய தளபதி குண்டுவீச்சில் பலி

அமெரிக்காவின் வான் தாக்குதல்களில் ஈடுபடட்ட F15 விமானம் வீழ்ந்து நொருங்கியுள்ளது. விமானிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் இது தாக்குதல் அல்ல விபத்தாக இருக்கலாம் என்று அமரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் லிபிய வான் பாதுகாப்புப் படையினரிடமிருக்கும் S4 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தமக்குச் சவாலாக இருக்குமென்று இதே அமெரிக்க இராணுவ உயரதிகாரிள் சில நாட்கள் முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம். எனவே இது தாக்கப்பட்டே அழிக்கப்படடிருக்லாம் என இராணுவ அவதானிகள் கருதுகின்றனர்.

கடாபியின் லிபியப் படைகளின் ஒரு பிரிவின் தளபதியாள Hussein El Warfali இன்று கூட்டுப்படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். லிபியத் தலைநகர் Triploi க்கருகில் இடம்பெற்ற தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளார்.
கூட்டுப்படைகள் தமது தாக்குதல்களை லிபிய இராணுவ  மற்றும் வான் எதிர்ப்புக் கேந்திர நிலையங்களைக் குறி வைத்துத் தாக்கிவருகின்றனர். கூட்டுப்படைகளை லிபிய இராணுவத் தளபதிகளையும் கடாபியையும் குறிவைத்து தமது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர்.
கூட்டுப்படைகளின் தாக்குதலை ஒருங்கிணைக்கவும் விமானத் தாக்குதல்களின் கட்டளை மையமாகவும் செயற்பட Charles du Gaule மிதக்கும் கட்டளை மையம் தனது பணியை லிபியாவில் ஆரம்பித்துள்ளது.

லிபியா: குண்டு வீசிய அமெரிக்க போர் விமானம் நொறுங்கியது


லிபியாவில் அந்நாட்டு இராணுவ நிலைகள் மீது குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க போர் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக அந்நாட்டு இராணுவ நிலைகள் மீதும், கடாபியின் மாளிகை மீதும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ எனப்படும் கூட்டு படைகள் ஏவுகணைகள் மற்றும் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தி வருகின்றன.

மேலும் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து இராணுவம் மீட்ட மிஸ்ரதா, அஜ்தாபியா நகரங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் பிடியில் இருக்கும் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் அமெரிக்காவின் எப்-15ஜி ரக போர் விமானம் பறந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராவிதமாக திடீரென அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. அதில், விமானி உள்பட 2 பேர் இருந்தனர்.அவர்கள் சாதுரியமாக வெளியே குதித்து உயிர் தப்பினர். 

pls click this path for  related video





http://www.youtube.com/watch?v=nzKjaT4uQ8g&feature=player_embedded


http://www.youtube.com/watch?v=gm5agXD_2w0&feature=player_embedded

ஜப்பான் கதிர்வீச்சு 1,250 மடங்கு அதிகரித்துள்ளது




ஜப்பான் பூகம்பத்தால் செயலிழந்த அணு உலைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, அது அமைந்துள்ள பகுதியை ஒட்டியுள்ள கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,250 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஜப்பான் அரசு கூறியுள்ளது.

இந்த அளவு, அணு உலையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் கடற்பரப்பில் பதிவாகியுள்ளது. இதனால் கடற்வாழ் உயரினங்கள் மட்டுமின்றி, நிலத்தடி நீரும் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதென ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாய்ச்சா அணு உலைகளைச் சுற்றியுள்ள நீர் நிலைகளிலும் அணுக் கதிர் வீச்சு அதிகரித்துள்ளது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட இரண்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க கடல் நீருக்கு பதிலாக நிலத்தடி நீரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது கடல் நீரை விட அணு உலைகளை வேகமாக குளிர்விக்கும் என்று கூறப்படுகிறது.

அணு உலைகளை ஒட்டிய கடற்பகுதியில் கடந்த வாரம் இருந்த அணுக் கதிர் வீச்சு அளவைக் காட்டிலும் இந்த வாரம் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள ஜப்பான் அரசு அதிகாரிகள், இதனால் கடல் வாழ் உயரினங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ளனர்.

ஜப்பான் அணு உலை பாதுகாப்பு முகமையின் பேச்சாளர் ஹிடேஹிக்கோ நிஷியாமா, கடல் நீரில் கலக்கும் கதிர் வீச்சு அலைகளி்ன் மூலம் பரவும் என்றும், அவைகளை கடலில் உள்ள பாசிகளும், உயிரினங்களும் செரிமானித்துக்கொள்ளும் என்றும், அது ஐயோடின் கதிர்வீச்சு ஆகையால், 8 நாட்களுக்கு மேல் தாக்கம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அணு உலைகளால் ஏற்பட்டுள்ள ஆபத்தை மிக வெளிப்படையாகவே பேசிவரும் ஜப்பான் பிரதமர் நவோட்டோ கேன், “இப்போதுள்ள சூழ்நிலை அனுமானிக்க முடியாத நிலை இருக்கிறது. அது மோசமாகிவிடாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு, பகலாக பணியாற்றிவரும் ஊழியர்களை பிரதமர் கேன் மிகவும் பாராட்டியுள்ளார்.

“டாய்ச்சா அணு உலைகள் 1,3 ஆகியவற்றின் மின்சாரக் கூடங்களில் அணுக் கதிர் வீச்சின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. இந்த அளவிற்கு அணுக் கதிர் வீச்சு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து வருவகிறோம்” என்று ஜப்பான் அரசு அமைச்சரவைச் செயலர் யூகியோ ஈடேனோ கூறியுள்ளார்.

அணு உலைகளில் ஒன்று முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள ஜப்பான் அணு உலை பாதுகாப்பு முகமை, அதன் எரிபொருள் மையத்தில் விரிசல் ஏற்பட்டிருக்குமா என்பதை உறுதி செய்யவில்லை.

ஜப்பான் உணவு இறக்குமதிக்கு பல நாடுகள் தடை

ஜப்பானில் இருந்து காய்கறிகள், கடல் உணவுகள், பால் பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்த நாடுகளான சீனா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகள் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளன.

இவைகளைத் தொடர்ந்து ஆஸ்ட்ரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இரஷ்யா ஆகிய நாடுகளும் ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளன.

இந்த நிலையில், கதிர் வீச்சு உள்ள ஜப்பானின் பல மாகாணங்களில் இருந்து வரும் உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்று ஜப்பான் அரசே எச்சரிக்கை விடுத்துள்ளது.