Total Pageviews

Blog Archive

Monday, 20 June 2011

புகுஷிமா அணு உலை: சிக்கல் நீடிக்கிறது

டோக்கியோ, ஜூன் 18: ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணு உலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் நீடிக்கிறது.ஃபுகுஷிமா அணு உலையில் வெள்ளிக்கிழமை அணுக்கதிர் வீச்சினால் பாதிப்புக்குள்ளான நீரை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. இந்த நீரை சுத்தப்படுத்தும் இயந்திரத்திலுள்ள ஒர் அமைப்பு அணுக்கதிர் வீச்சினால் பாதிப்புக்குள்ளான நீரிலுள்ள சீசியம் அணுப்பொருளை உறிஞ்சும் தன்மையுடையது.வேலை செய்ய ஆரம்பித்த 5 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த அமைப்பு தனது அதிகபட்சத் திறனை அடைந்துவிட்டதால் முழுமையாக நீரை சுத்தப்படுத்த முடியவில்லை என அணு உலையைப் பராமரிக்கும் டோக்கியோ மின் கார்ப்பரேஷனின் அதிகாரி ஜுனிச்சி மட்ஸýமோட்டோ தெரிவித்தார். கதிர்வீச்சுக்குள்ளான நீரை சுத்தப்படுத்தும் பணி மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மார்ச் 11-ம் தேதி சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணு உலையை குளிர்விக்க உபயோகப்படுத்தப்பட்ட 1,00,000 டன்னிற்கும் மேற்பட்ட நீர் கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளானது. இதில் சிறிதளவு நீர் கடலுக்குள் செலுத்தப்பட்டது. மீதமுள்ள நீரை மீண்டும் அணு உலையைக் குளிர்விக்கவோ அல்லது வேறு பயன்பாட்டுக்கு மறுசுழற்சி செய்யவேண்டுமானால் அதிலிருக்கும் கதிர்வீச்சு நீக்கப்படவேண்டும். இல்லையெனில் அந்நீர் அணு உலையின் குளிர்விப்பு அமைப்பை பாதிக்கும்

சீனக் கடற்பரப்பில் சுதந்திரமான கடற் பிரயாணத்துக்கு அமெரிக்கா, வியட்நாம் அழைப்பு

வாஷிங்டன்:  சீனாவுக்கும் அயல் நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து காணப்படும் நிலையிலும் தென் சீனக் கடற்பரப்பில் அழுத்தங்களை பிரயோகிப்பதை நிராகரித்துள்ள அமெரிக்காவும் வியட்நாமும் சுதந்திரமான கப்பல் பிரயாணத்துக்கு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

வாஷிங்டனில் இடம்பெற்ற பேச்சுகளைத் தொடர்ந்து கருத்துக் கூறிய முன்னாள் எதிரி நாடுகளான அமெரிக்காவும் வியட்நாமும் சமாதானம், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் தென்சீனக் கடலில் சுதந்திரமான கப்பற் பிரயாணத்தை தக்கவைத்துக்கொள்வது சர்வதேசத்தின் பொது நலன்களென கூறியுள்ளன.

தென்சீனாக் கடற்பரப்பிலுள்ள சகல பிராந்திய எல்லைப் பிரச்சினைகளும் எந்தவித அழுத்தங்களும் பலவந்தமும் இன்றி கூட்டமாகவும் இராஜதந்திர செயன்முறை ஊடாகவும் தீர்த்துக்கொள்ளப்படவேண்டுமெனவும் அமெரிக்காவும் வியட்நாமும் வெளியிட்டுள்ள கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. வியட்நாம் எண்ணெய் அகழ்வுக் கப்பல் ஒன்றினதும் ஆராய்வுக் கப்பல் ஒன்றினதும் கேபிள்களை சீனக் கப்பல்கள் துண்டாடியதாக கூறப்பட்டதை அடுத்து வியட்நாம் இராணுவ ஒத்திகைகளை நடத்தியதுடன் அண்மைக்காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதேவேளை சீனாவும் தென்சீனக் கடலில் மூன்று நாள் இராணுவ ஒத்திகையை நடத்தியுள்ளது. கடற்பாதுகாப்புப் படைகளை பலப்படுத்தும் நோக்கிலேயே சீன அரசு இப்பயிற்சிகளை மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.  சீனப் பிராந்தியத்தில் நிகழும் அண்மைக் காலச் சம்பவங்கள் சமாதானத்துக்கும் ஸ்திரத்தன்மைக்கும் வலுச் சேர்க்கப்போவதில்லையென அமெரிக்கத் தரப்பு கூறியிருப்பதாகவும் கூட்டறிக்கை கூறுகின்றது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்

அருணாச்சலம் தகராறுக்குட்பட்ட பகுதியே: சீனா

இந்திய - சீன எல்லைப் பகுதியிலுள்ள அருணாச்சல பிரதேச மாநிலம், இரு நாடுகளும் உரிமை கோரும் தகராறுக்குட்பட்ட பகுதியே என்று சீனா கூறியுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள், சீனத்தின் ஃபிஜியான் மாகாணத்தில் நடைபெறவுள்ள கிராண்ட் பிரீ எடைத் தூக்கும் போட்டியில் கலந்துகொள்ள விசா கேட்டபோது, அவர்களுடைய இந்திய கடவுச் சீட்டில் விசா முத்திரை பதிக்காமல், தனிக் காகிதத்தில் விசா முத்திரையிட்டு, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி அளித்தது சீனா.

இதற்கு வன்மையான கண்டனத்தை இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில் இப்பிரச்சனை குறித்து சீனத் தலைநகரிலுள்ள பிடிஐ செய்தியாளரிடம் விளக்கமளித்துள்ள சீன அயலுறவு அமைச்சக பேச்சாளர், “இந்திய - சீன எல்லைப் பிரச்சனையில் சீனத்தின் நிலை தொடர்ந்து தெளிவாகவே உள்ளது. கிழக்குப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதிதான் என்பது எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளோம். அதனை இந்தியா நன்கு அறியும். எங்களது அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை” என்று கூறியுள்ளார்.

இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இதுவரை 14 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதில் கிழக்குப் பகுதியான அருணாச்சல பிரதேசத்தை தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் தெற்குப்பகுதி என்றே சீனா கூறி வருகிறது.

ஆனால், தங்களது நாடான திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவிற்கு அருணாச்சல பிரதேசத்தின் மீது சொந்தம் கொண்டாட எந்தத் தகுதியும் இல்லை என்று தலாய் லாமாவும், திபெத் விடுதலைக்காக போராடிவரும் இதர திபெத்திய அமைப்புகளும் கூறி வருகின்றன.

சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் பணம் சேமிப்பு குறைந்தது

ஜூன் 19: சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்கள் சேமித்து வைத்துள்ள பணம் கடந்த ஆண்டில் குறைந்துள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிச் சட்டங்களின் ரகசியத் தன்மையினால் உலகெங்கும் உள்ள பணக்காரர்கள் அந்நாட்டு வங்கிகளில் பணத்தை சேமித்து வைக்கின்றனர். இதில் பெரும்பாலும் அவரவர் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து திரட்டிய கறுப்பு பணம் என்பது குறிப்பிடத் தக்கது.பல நாடுகள் இந்தக் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதற்காக சுவிஸ் வங்கிகளிடம் வற்புறுத்தி வந்தாலும் ரகசியத் தன்மைவாய்ந்த சட்டங்களைத் திருத்த வங்கிகளும் அந்நாட்டு அரசும் ஆர்வம் காட்டாமல் மறுத்து வந்தன.இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல மேற்கத்திய நாடுகள் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு இந்தப் பிரச்னை குறித்து நெருக்குதல் கொடுத்து வருகின்றன.இந்தியாவிலும் இந்தப் பிரச்னை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றமும் இப்பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த நிதியாண்டுக்கான சுவிஸ் வங்கிக் கணக்குகள் இப்போது வெளியாகியிருக்கின்றன. இதில், வெளிநாட்டவர் சேமித்து வைத்துள்ள பணத்தின் அளவு குறைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த தொகை குறைந்துள்ளது என்று தெரிகிறது. 2009-ம் ஆண்டில் ரூ. 1 கோடி 30 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டவர் சேமிப்பு இருந்தது. ஆனால் 2010-ம் ஆண்டுக்கான கணக்கின்படி, வெளிநாட்டவர் சேமிப்பு ரூ.1 கோடி 25 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் கறுப்புப் பணம் பதுக்குவதைத் தடுக்கும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர சர்வதேச அளவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வங்கிகளில் பணத்தை சேமிப்பது குறைந்து வருகிறது என்ற கருத்து நிலவுகிறது.அதே வேளையில், உலகப் பொருளாதாரம் சரிவுற்ற நிலையில் டாலர், யூரோ முதலான கரன்சிகளின் மதிப்பு குறைந்ததால் வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தின் மதிப்பு குறைவாகத் தெரிகிறது என்று சுவிஸ் வங்கி அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.இங்கு சேமிப்புத் தொகை குறைந்துள்ளதற்குக் காரணம், பணத்தை வங்கியிலிருந்தது எடுப்பது மட்டுமல்ல. பங்கு முதலீடுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களும் வங்கியின் மொத்தத் தொகையில் குறைவு வந்ததாகக் காட்டும் என்று அவர் தெரிவித்தார்.

சுவிஸ் வங்கி ரகசிய கணக்கு விவரம் விக்கிலீக்சிடம் ஒப்படைப்பு

 உலகெங்கிலும் உள்ள பெரும் செல்வந்தர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தனி நபர்கள் ஆகியோர் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள ரகசிய கணக்கு விவரங்களைத் தான் பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பலநாடுகளின் அரசு சார் ரகசிய உத்தரவு கேபிள்களை உலகிற்கு வெளிப்படுத்திய விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சிடம் சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துள்ள 2000 பேர்களின் விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

ருடால்ஃப் எல்மர் என்ற முன்னாள் சுவிஸ் வங்கி அதிகாரி 2000 ரகசிய வங்கிக் கணக்குகள் அடங்கிய வட்டுகளை அசாஞ்சிடம் கையளித்தார்.

இந்த 2000 கணக்குகளில் இந்தியத் தொழிலதிபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கணக்குகள் இருக்குமா என்பதில்தான் இப்போது ஆர்வம் பிறந்துள்ளது.

1990ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சுவிஸ் வங்கியில் கணக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலநாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், செல்வந்தர்கள், நிதிநிறுவனங்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் விவரங்கள் இந்த வட்டுகளில் இடம்பெற்றிருப்பதாக சுவிட்சர்லாந்து பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

"நான் சுவிஸ் வங்கி கணக்கிற்கு எதிரானவன், அங்கு எவ்வாறு அனைத்தும் நிகழ்கிறது என்பதை நான் அறிவேன். ஒரு பெரிய வலைப்பின்னலே இந்த சட்டவிரோத கணக்குகளை உருவாக்குவதில் செயல்பட்டு வருகிறது.

நான் அங்கு வேலை செய்துள்ளேன், அங்கு தினசரி வர்த்தக நடவடிக்கைகள் என்னவென்பது எனக்கு முழுதும் தெரியும்." என்று எல்மர் லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த 2000 ரகசிய கணக்குகளில் 40 அரசியல்வாதிகளின் கணக்குகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்- அசாஞ்ஜே

அயல்நாட்டு வங்கிகளில் சேர்ந்து கொண்டே போகும் இந்திய கறுப்புப் பணம் குறித்து இந்திய அரசு அசிரத்தை காட்டி வரும் நிலையில், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ஜே, சுவிஸ். வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறியுள்ளார்.

"வேறு எந்த நாட்டுக்காரர்களின் பணத்தை விடவும் சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமஅதிகம் உள்ளது." என்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

"ஆம், பட்டியலில் இந்தியர்கள் பெயர்கள் உள்ளன. இந்திய அரசு அயல்நாட்டு வங்கிகளில் பெருகி வரும் இந்திய கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதில் விரைவில் ஆக்ரோஷம் காட்டுவது அவசியம், இத்தகையக் கறுப்புப் பணத்தினால் ரூபாயின் மதிப்பு சீரழிந்து வருகிறது." என்றார் அசாஞ்ஜே.

அதே போல், 'தங்கள் இணையதளம் வெளியிட்டு வரும் செய்திகளுக்கு இந்திய அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கு ஏமாற்றம் அளிக்கிறது'. "உலகிலேயே நாங்கள் வெளியிட்டுஅள்ள தகவல்களுக்கு வினையாற்றுவதில் இந்திய அரசுதான் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. இந்திய அரசு இந்திய மக்களுக்கு தவறான கருத்துக்களைக் கூறிவருகிறது. என்னிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஊழலற்றவர் என்று கூறினார்கள். ஆனால் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை மீட்க அவரது நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக உள்ளது." என்றார் அசாஞ்ஜே.

மேலும் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்திற்கு சுவிஸ்.வங்கியுடன் புரிந்துணர்வு கொண்டு இரட்டை வரி விதிப்பு முறை செய்யலாம் என்ற திட்டத்தை அசாஞ்ஜே நேரடியாக நிராகரித்தார். இதனால் இந்தியாவுக்கு அந்தப் பணங்களை திருப்பி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என்றார் அவர்.

"இரட்டை வரிவிதிப்பு முறையால் பயனில்லை. சொத்துக்கள் மறைந்திருக்கும் நிலையில் வரி விதிப்பு முறை மட்டும் சரியாகாது. இதனால் இந்தியப் பொருளாதாரம் நசிவடைந்து வருகிறது." என்று கூறினார் அசாஞ்ஜே.

தங்களிடம் சில முக்கியஸ்தர்கள் சுவிஸ்.வங்கியின் பணப்பட்டியலைக் கொடுக்குமாறு பல்வேறு விதங்களில் பேரம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுவிஸ்.வங்கியின் வர்த்தகம் பாதிக்கும் என்பதால் அந்தப் பெயர்களை வெளியிடவேண்டாம் என்று மிரட்டல்கள் வருவதாகவும் அசாஞ்ஜே தெரிவித்தார்.

கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது: மேனகா காந்தி

வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சியினருக்கு சொந்தமானது என்று பா.ஜனதா எம்.பி. மேனகா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பரெய்லியில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் சொந்தமானது.

காங்கிரஸ் கட்சி சிபிஐ-யை அதன் லாக்கரில் வைத்துள்ளது. தேவைப்படும்போது அதை பயன்படுத்துகிறது.
பாபா ராம்தேவ் மற்றும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவிடம் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ளும் முறை கெளரவமானதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் தலைவர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளதால்தான் கறுப்புப் பணத்துக்கு எதிராக குரல் எழும்போதெல்லாம் அதை நசுக்க அக்கட்சி முற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

ராஜபக்சவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை!

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ள ஹக் உடன்படிக்கைக்கு ஏற்ப, அமெரிக்க மாகாண நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று பொது வழக்குகளில் ராஜபக்ச பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தமக்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தரவேண்டும் என்று கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி மஹிந்தவுக்கு அழைப்பாணை கிடைத்துள்ளதாக நீதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஆறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மூன்று வழக்குகள் மாணவரான ரஜிகர் மனோகரன், தொண்டர் அமைப்பின் பணியாளர் பிரீமஸ் ஆனந்தராஜா மற்றும் தவராஜா ஆகியோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இம்மாணவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கொலை செய்யப்பட்டவர் என்றும், முப்படைகளின் கட்டளைத் தளபதியான ராஜபக்சவே இதற்குப் பொறுப்பு என்றும் இவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 2006 ல் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவர் இந்த ரஜிகர் என்பதும், ஜூன் 2006 ல் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட அக் ஷன் ஃபெய்ம் நிறுவனப் பணியாளர்கள் 17 பேரில் ஒருவர் இந்த ஆனந்தராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த அழைப்பாணையால் இலங்கை அரசாங்கம் கவலைப்படவில்லை என்றும், அதற்கு அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்றும் இலங்கை நீதித்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

ரசிகர்களின் பிரார்த்தனைகளே என்னைக் காப்பாற்றியன - ரஜினி நன்றி

சென்னை : நான் நலம் அடைய ரசிகர்கள் மேற்கொண்ட பிரார்த்தனை, பூஜைகள்,ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது. என்பதுதான் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பெற்று வெளியேறி அந்த நாட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டுள்ள ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மருத்துவமனையிலிருந்து வெளியேறியவுடன் அன்பார்ந்த ரசிகர்களுக்கு பேனா,பேப்பர் எடுத்து எழுதும் போதுவார்த்தைகள் வரவில்லை எனக்கு தமிழக அரசு எந்த நேரத்திலும் உதவியையும் செய்ய எனக்கு உறுதிமொழி கொடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் என்றுமே என் மீது பாசத்தை வைத்திருக்கும் மதிப்பிற்குரிய என்னுடைய அருமை நண்பர் கலைஞருடன் பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன்

முதலில், உங்களிடம் பேசாமல் இருந்ததற்கு மன்னிக்கவும் இந்த விஞ்ஞான உலகத்தில் கூட எந்த விளையாட்டை விடையாடினாலும் காசை மேலே தூக்கிப்போட்டு ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு செய்கிறார்கள் காசை மேலே தூக்கிப்போடுவதுதான் மனிதனுடைய வேலை

பூவாக விழுவதா தலையாக விழுவதா என்பது ஆண்டவனுடைய செயல் என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம் விஞ்ஞானம் மருத்துவம், உலகத்திலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்க இன்னொரு பக்கம் நான் நலம் அடைய கடவுள் பிரார்த்தனை,பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் நம்புகிறேன்.
ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டி விட்டீர்கள் நான் இப்பொழுது குணம் அடைந்து கொண்டு இருக்கிறேன் என்றால் நீங்கள் எல்லோரும் என் மீது வைத்திருக்கின்ற அன்பு தான் காரணம். என்னை ஒரு அண்ணனாக தம்பியாக, நண்பனாக, உங்கள் வீட்டு ஒரு பிள்ளையாக நினைத்துஎனக்கு செய்த பூஜைகள் தான் காரணம்

ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய அன்பை என்றும் மறக்க மாட்டேன் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இனிமேல் உங்களை மகிழ வைப்பது தான் என்னுடைய லட்சியம் கூடிய விரைவில் ராணாவில் உங்களை மகிழ வைப்பது தான் தோன்றுகிறேன் நான் உங்களுடைய எல்லா நன்மைக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.

எகிப்து முன்னாள் அதிபரின் சொத்துக்கள் அரபு நாடுகளுக்கு மாற்றம்

எகிப்து அதிபர் பதவியிலிருந்து விலகிய ஹோஸ்னி முபாரக் தனது சொத்துக்களை ஐரோப்பிய வங்கியில் இருந்து அரபு நாடுகளுக்கு மாற்றிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முபாரக்கின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடக்க சுவிஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததையடுத்தே அவர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து முபாரக்கின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற சில அவசர உரையாடல்கள் மூலம் இது தெரியவந்ததாக புலனாய்வு துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேடு உள்ளிட்ட நட்பு அரபு நாடுகளுக்கு முபாரக் சொத்துக்களை மாற்றியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முபாரக்கின் சொத்து மதிப்பு 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கலாம் அல்லது 2 பில்லியன் டாலர் முதல் 3 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எல்லை தாண்டும் எகிப்து புரட்சி!

ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக எகிப்து நாட்டு மக்கள் நடத்திய கிளர்ச்சிக்கு கைமேல் கிடைத்த பலனை பார்த்து ஈரான், பஹ்ரைன் மற்றும் ஏமன் ஆகிய அண்டை நாட்டு மக்களின் மனதிலும் புரட்சி விதை தூவப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலால் அந்த நாட்டு தலைவர்கள் அரண்டுபோய் கிடப்பதாக மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றன.

30 ஆண்டு காலம், எகிப்து அதிபர் பதவியில் அட்டையாய் ஒட்டிக்கொண்டு முபாரக் நடத்திய அராஜக, ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை பார்த்து வெறுத்து போய்தான், இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் கொதித்து எழுந்தனர் எகிப்து மக்கள்.

முபராக் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற முழக்கத்துடன், எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தொடர்ந்து 18 நாட்களாக அவர்கள் நடத்திய போராட்டத்தின் தீவிரத்தை பார்த்துதான், இனியும் தமது பாச்சா பலிக்காது என்று மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கடந்த வார இறுதியில்,பதவியிலிருந்து விலகி தமது குடும்பத்தினருடன் ஓட்டம் பிடித்தார் முபாரக்.

அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக முதலில் கூறப்பட்டாலும்,மக்களின் போராட்டம் தந்த அதிர்ச்சி மற்றும் மன அழுத்தத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் எகிப்தின் ஷாம் எல்-ஷேக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு சில ஊடகங்கள் முபாரக்கிற்கு புற்றுநோய் என்றும்,வேறு சில ஊடகங்கள் பக்கவாதம் என்றும் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனால் முபாரக் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் உண்மை.

ஏமனிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்

வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஏமனிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஏமனில் அரசுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் காரணமாக இதுவரை 150 க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் அங்கு பணி நிமித்தமாகவும்ம், இன்ன பிற காரணங்களுக்காவும் தங்கியுள்ள இந்தியர்களை, பாதுகாப்பு கருதி உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக உதவி தேவைப்படுவோர் ஏமனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறும், தேவையான உதவிகளை செய்யுமாறு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் 39 இந்தியர்கள்

சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடியில் இந்தியர்கள் 39 பேர் இருப்பதாக மத்திய அரசு வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களின் பிடியில் இன்னமும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் உள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 39 பேர் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, சமீபத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட எகிப்து நாட்டைச் சேர்ந்த எம்.வி.சூயஸ் சரக்கு கப்பல் அரபிக்கடலில் வந்து கொண்டிருந்தபோது, பலத்த காற்று காரணமாக கவிழக்கூடிய அபாயத்தில் இருந்தது.

அந்த கப்பலில் இருந்த 6 இந்தியர்கள் உள்பட 22 சிப்பந்திகளையும் பாகிஸ்தான் கடற்படை போர் கப்பல் பி.என்.எஸ் பாபர் மீட்டது.