| ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் புகுசிமாவில் உள்ள அணு உலை பாதிக்கப்பட்டது. இந்த அணு உலையில் இருந்து கதிர்வீச்சு பரவியது. இதனால் அந்த பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அணு கதிர்வீச்சு கடலிலும் பரவி இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இப்போது கதிர் வீச்சு கடல் மீன்களிடமும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மீன்களை சாப்பிட்டால் மனிதனுக்கும் கதிர்வீச்சு பாயும் அபாயம் உள்ளது. இதனால் புகுசிமா கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடலில் வாழும் மீன்கள் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. ஒவ்வொரு பருவ நிலைக்கும் தகுந்த மாதிரி மீன்கள் மற்ற கடல் பகுதிகளுக்கும் செல்லும். புகுசிமா கடல் பகுதிகளில் வசிக்கும் மீன்கள் மற்ற பகுதி களுக்கு வரும்போது பிடிக்கப்பட்டால் அதனாலும் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும். எனவே கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது. அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
Total Pageviews
Blog Archive
Thursday, 21 April 2011
ஜப்பானில் தாய்ப்பால், கடலிலுள்ள மீன்களுக்கு கதிர்வீச்சு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Comments (Atom)
