Total Pageviews

Blog Archive

Saturday, 24 September 2011

மனிதர்களுக்கு ஆபத்து நீங்கியது பசிபிக் கடலில் விழுந்தது செயலிழந்த செயற்கைக்கோள்

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக் கோள் ஒன்று செயலிழந்து பூமியை நோக்கி வந்தது. அது நேற்று காலை பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1991ம் ஆண்டு Ôஅப்பர் அட்மாஸ்பியர் ரிசர்ச் சேட்டிலைட்Õ (யுஏஆர்எஸ்) என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. ரூ.3,525 கோடி செலவில் அனுப்பப்பட்ட அந்த செயற்கைக் கோள் ஓசோன் படலம் மற்றும் பூமியின் வளி மண்டலத்தைப் பற்றி ஆராய்ந்து வந்தது. இது நாசா விஞ்ஞானிகளால் கடந்த 2005ம் ஆண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. அதன் பிறகு அது பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
6,000 கிலோ எடை கொண்ட, பஸ் அளவிலான அந்த செயற்கைக்கோள் நேற்று முன்தினம் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஒரு நாள் முன்னதாகவோ அல்லது பின்போ வரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். 
பூமியின் தட்பவெப்ப நிலைக்குள் நுழைந்தவுடன் செயற்கைக்கோள் 26 பெரிய துண்டுகளாக உடையும். பூமியின் 75 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள கடல் பகுதியில் விழுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. தவறினால் வடக்கு கனடாவுக்கும் தென்அமெரிக்காவின் தென்பகுதிக்கும் இடையில் பூமியின் மீது விழும் அபாயமும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
பூமியில் விழுந்தால் 3,200ல் ஒரு பங்கு மனிதர்கள் மீது விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தனர். எனினும், யுஏஆர்எஸ் செயற்கைக்கோள் நேற்று அதிகாலையில் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும் அதனால், மனிதர்களுக்கு அபாயம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மேலும் நெருக்கடி

பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தாலிபான்களின் ஹக்கானி அமைப்புடனான தொடர்புகளை துண்டிக்கவேண்டும் என்றும் அதன் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என்றும் அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.

"பாகிஸ்தான் அரசு தாலிபான் அமைப்பான ஹக்கானி குழுவுடன் தங்களது தொடர்புகளை துண்டிப்பதும், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதும் அவசியம் இதன் மூலம் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள அச்சுறுத்தலை நீக்குவது உறுதி செய்யப்படுவது அவசியம்" என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜேய் கார்னி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காபூலில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அமெரிக்க ராணுவத்தினரும், ஆப்கான் தேசத்தவரகளும் உயிரிழந்தனர் இதற்குக் காரணம் ஹக்கானி குழுதான் என்று அமெரிக்க கூறியுள்ளது.

மேலும், ஹக்கானி குழு பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருந்து கொண்டு தாக்குதல்களில் ஈடுபடுவது எங்களுக்குத் தெரியும். பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அல்கய்டாவை வீழ்த்துவதில் பாகிஸ்தானின் உதவி மிகப்பெரியது, இதனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் கோபத்தை அனுபவித்து வருகிறது. இதற்காக பாகிஸ்தான் மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது என்று கூறிய கார்னி பாகிஸ்தானுடன் தங்கள் நாடு வைத்துள்ள உறவு சிக்கல் நிறைந்தது என்றார்.

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத், செப். 23:÷பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 அமெரிக்க ராணுவத் தலைமை தளபதி மைக் முல்லன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்பான ஹக்கானியுடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
 இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இதுபோன்ற விமர்சனங்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
 ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் போரை, பாகிஸ்தான் உதவியின்றி வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாது என்று பிரதமர் யூசுப் ரஸô கிலானி வெள்ளிக்கிழமை கராச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ÷
 ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் கூறுகையில், அமெரிக்கா தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வந்தால், பாகிஸ்தானைப் போன்ற மதிப்புமிக்க நண்பனை அது இழக்க நேரிடும் என எச்சரித்தார். அமெரிக்காவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செüத்ரி அகமது முக்தாரும் நிராகரித்துள்ளார்.