Total Pageviews
Blog Archive
Thursday, 24 March 2011
லிபியா சி்க்கலை தீர்க்க லண்டனில் 29-ம் தேதி சர்வதேச மாநாடு
டிரிபோலி:லிபியா விமானப்படை தாக்குதலை முறியடித்துள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள், தற்போது அந்நாட்டின் தரைப்படைகளை தாக்க வியூகம் வகுத்துள்ளன.லிபியாவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும் கடாபியை பதவி விலகக்கோரி, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். லிபியாவில் சிக்கலுக்கு தீர்வுகாணும்விதமாக சர்வதேச மாநாடு வரும் மார்ச் 29-ம் தேதி லண்டனில் துவங்கவுள்ளது. இதில் அரபு, ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறுநாடுகள் கலந்து கொள்ளவுள்ளன என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சபையில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹோக் நேற்று தெரிவித்தார். மேலும் விரைவில் லிபியாவை நேட்டோ படைகள் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார். அதற்குள் கடாபி தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
குத்தகைக்கு குட்டித் தீவுகள்

இலங்கையின் வடமேற்குக் கரையோரமாக புத்தளம் மாவட்டம் கற்பிட்டிப் பகுதியில் இரு தீவுகளை வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட சுற்றுலா நிருவனங்களுக்கு 30 வருட குத்தகைக்கு விட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெள்ளைத்தீவு மற்றும் இன்பத்தீவு ஆகியன இலங்கை, சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளை தளமாகக் கொண்ட சுற்றுலா நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த இலங்கை பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சரான லக்ஷ்மன் யாப்ப அபயவர்த்தன அறிவித்துள்ளார்.
ஆனால் இந்த தீவுகள் தம்மால் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகின்ற அப்பகுதி மீனவர்கள், இவ்வாறு தனியாருக்கு குத்தகைக்கு விடுவத்டு தமது வாழ்வியலைப் பாதிக்கும் என்று கூறுகின்றனர்.
இது தொடர்பாக தமிழோசையுடன் பேசிய தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பு என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் கற்பிட்டிப் பிராந்திய இணைப்பாளரான ஜே. பத்மநாதன், சுமார் 600 மீனவ குடும்பங்கள் வரை இந்தத் திட்டத்தினால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் கூறுகிறார்.
தண்ணீர், கீரை எல்லாவற்றிலும் கதிர்வீச்சு பாதிப்பு அபாயம்

டோக்கியோ:ஜப்பானின் புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குடிநீர் குழாய்களில் கலந்துள்ளதால், பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால், தண்ணீர் பாட்டில்களுக்கு ஜப்பானில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.புக்குஷிமா அணு மின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளுக்கும் தற்போது மின் இணைப்பு கொடுக்கப்பட்டு அதன் மூலம், நீரை உட்செலுத்தி குளிரூட்டும் முறைகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், அணு உலைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறி வரும் கதிர்வீச்சு, 240 கி.மீ., தெற்கில் உள்ள டோக்கியோ நகரம் வரை பரவியுள்ளது. குழந்தைகளுக்கான எச்சரிக்கை அளவை விட குடிநீரில் இரண்டு மடங்கு கதிர்வீச்சு அயோடின் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, குழாயில் வரும் குடிநீரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என, எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் மக்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, பல நகரங்களில் தண்ணீர் பாட்டில்கள் கிடைக்காததால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.புக்குஷிமா அணு மின் நிலையத்தில் கேபிள்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்கள், அதிகப்படியான கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
கீரை உள்ளிட்ட காய்கறிகளிலும் கதிர்வீச்சு கலந்திருப்பதால், பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்ய நாடுகள் தடை விதித்துள்ளன.
லிபியாவை தகர்க்கஅடுத்த திட்டம்

டிரிபோலி:லிபிய விமானப்படை தாக்குதலை முறியடித்துள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள், தற்போது அந்நாட்டின் தரைப்படைகளை தாக்க வியூகம் வகுத்துள்ளன.லிபியாவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும் கடாபியை பதவி விலகக்கோரி, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது லிபிய விமானப்படை விமானங்கள் குண்டு வீசியதால் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். கடாபியை பதவி விலகும் படி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தின.
இதற்கிடையே ஐ.நா.,வின் ஒப்புதலோடு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாட்டு படைகள், லிபியா மீது தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் லிபியாவின் விமானப்படை தாக்குதல் ஒடுக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் பீரங்கி மற்றும் ஏவுகணைகளை தவிடுபொடியாக்க அமெரிக்கா தலைமையிலான படைகள் திட்டமிட்டுள்ளன. ஐந்தாவது நாளாக ஜின்டான், ஜாவியா, மிஸ்ரட்டா, அஜ்தாபியா ஆகிய நகரங்களில் கடாபி ராணுவத்தின் தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது.
சிரியா மக்கள் கிளர்ச்சியில் 100 பேர் பலி


24.03.2011: சிரியாவில் அரசுக்கெதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று நாட்டின் தென்பகுதி நகரான தாராவில் ஐய்மான்-அல்-அஸ்வாத் என்ற மனித உரிமை அமைப்பினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர் அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்புப்புபடையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18-ம் தேதி முதல் பொதுமக்கள் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தாஹரா நகரில் ஏற்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து , நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸிலும் மக்கள் போராட்டம் பரவியுள்ளது. இதில் 75 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் புதிய சீர்திருத்த சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும் எனவும் அதிபர் பஷீர் ஆசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
Subscribe to:
Comments (Atom)