Total Pageviews

Blog Archive

Tuesday, 21 June 2011

தானாகவே இதயத்தைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


மாரடைப்பு நோயால் இதயத்தசை இறந்துவிடுகிறது; காலப்போக்கில் இறந்த இவ்விடத்தில் தசைப்பகுதிக்குப் பதிலாக நார் இழையங்கள் வளருகின்றன; இதனால் இதயம் தனது இயல்பான சுருங்கிவிரியும் தொழிலைப் புரிவதில் சிரமம் ஏற்படுகின்றது. இதய இலயமின்மையால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, திடீர் இதய நிறுத்தம், இறுதியில் இதயச் செயலிழப்பு போன்ற உயிர்த் தீவிளைவுகள் ஏற்படுகின்றன.

மாரடைப்பால் இறந்துபோன இதயத்தசையை மீண்டும் குறிப்பிட்ட இடத்தில் உருவாக்கினால் இதயச் செயலிழப்பு ஏற்படாது, மாரடைப்பின் பின்னரும் குறிப்பிட்ட நபர் ஆரோக்கியமாக வாழலாம், எனினும் இயல்பான நிலையில் இறந்த இதயத்தசை இறந்ததாகவே இருக்க அவ்விடத்தில் நார் இழையங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்குத் தீர்வே இல்லையென்று நினைத்திருந்த காலம் இப்பொழுது மலையேறிவிட்டது. அறிவியலாளர்கள் புதிதாக மருந்தொன்றைக் கண்டுபிடித்து உள்ளனர், இது இறந்த இதயத்தசையை மீண்டும் உருவாக்குகின்றது.

இதயம் ஒரு தசையால் உருவாக்கப்பட்ட உறுப்பு என்பது பெரும்பாலும் அறியப்பட்ட ஒரு விடயம். இதயத்தின் இத்தசைப்பகுதியைச் சுற்றி மென்சவ்வு உள்ளது; இது இதய மேற்சவ்வு (epicardium) எனப்படும். இதயத்தசையை மீண்டும் புதுப்பிக்கத் தேவையான உயிரணுக்கள் இந்த இதய மேற்சவ்வில் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புறத்தூண்டல் ஏற்படுத்தப்படுவதன் மூலம் இவை அங்கிருந்து இதயத்தசைப் பகுதிக்கு அசைந்து பின்னர் இதயத்தசை செப்பனிடப்படுகின்றது. ஏற்கனவே பரிச்சயமான தைமொசின் பீட்டா4 (thymosin β4) எனும் புரதம் இத்தூண்டலை ஏற்படுத்தவல்லது என அறியப்பட்டது; சுண்டெலியில் இப்புரதம் கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, விளைவு வெற்றிகரமானதாக அமைந்தது. சுண்டெலி ஒன்றுக்கு இப்புரதம் மருந்துவடிவில் கொடுக்கப்பட்ட பின்னர் செயற்கையான மாரடைப்பு உண்டாக்கப்பட்டது, இதனால் இறந்த தசை இழையங்கள் சிலநாட்களில் மீண்டும் உருவாகின.

இலண்டன் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் போல் ரைலி இது குறித்து உரையாடுகையில், மாரடைப்பு வருவதற்கு முன்னரேயே இம்மருந்து உபயோகித்தல் வேண்டும் எனத் தெரிவித்தார். இப்புரதம் மருந்துவடிவில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் மாந்தரின் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னமும் ஆய்வுகள் தேவை; இன்னும் பத்து வருடத்தில் இம்மருந்தின் முழுமையான பயன்பாட்டைப் பெறலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பிரணாப் அலுவலகத்தை உளவுப் பார்க்க ரகசிய கேமராக்கள்?

புது தில்லி, ஜூன் 21: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ரகசிய மைக்குகள், கேமராக்கள் பொருத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  இது தொடர்பாக 2010 செப்டம்பர் 7-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தில், இந்த விவகாரம் குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  நிதியமைச்சக அலுவலகத்தில், 16 இடங்களில் கேமரா அல்லது மைக்குகளை ஒட்ட முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதைச் செய்தது யார் என்பது குறித்து ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று பிரணாப் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் தில்லி நார்த் பிளாக்கில் உள்ளது. அவரது அலுவலகத்திலும், அவரது தனி உதவியாளரின் அறை, அவரது செயலரின் அறை, இரு கருத்தரங்க அறைகள் ஆகியவற்றில் உளவு முயற்சி நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  ஆனால், 16 இடங்களிலும் மைக்ரோபோன்களோ, கேமராக்களோ சிக்கவில்லை. அவற்றைப் பொருத்த பசை தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என தனது கடிதத்தில் பிரணாப் தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு செப்டம்பரில் நிதித்துறை அமைச்சகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் உளவுப் பார்க்கும் முயற்சி நடைபெற்றதா என்பது குறித்து தனியார் நிறுவனத்தின் உதவியோடு ஆய்வு நடத்தப்பட்டபோதுதான் உளவு முயற்சி குறித்து தெரியவந்தது. இதையடுத்தே பிரதமருக்கு பிரணாப் கடிதம் எழுதியுள்ளார் எனத் தெரிகிறது.  இது குறித்து தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரணாப் முகர்ஜி, இப் பிரச்னை குறித்து, மத்திய உளவுத் துறையான ஐ.பி., முழு அளவில் சோதனை நடத்திவிட்டு, அலுவலகம் எந்த வகையிலும் உளவு பார்க்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.  ஆனால், பசை ஒட்டப்பட்ட இடங்களில் சிறிய துளைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, அந்த இடங்களில் கேமராக்களோ, ரகசிய மைக்ரோபோன்களோ வைக்கப்பட்டு, பின்னர் அவை நீக்கப்பட்டிருக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத் துறையினர் கூறினர்.  பாஜக கருத்து: இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, நிதியமைச்சர் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பு நிகழ்வதாக நிதியமைச்சரே கடிதம் எழுதியிருப்பது மிகவும் முக்கியமான பிரச்னையாகும். இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.  மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த அமைச்சர் பிரணாப்.  அவரது அலுவலகத்திற்குள் ஒட்டு கேட்கப்படுவதாகக் கூறப்படுவது மிக முக்கியமான பிரச்னையாகும். பல்வேறு நிதி முறைகேடுகள் குறித்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிவரும் நிலையில் இந்த பிரச்னையில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இன்று காலை ஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடிப்பு: 22 பேர் பலி

பாக்தாத்: தெற்கு பாக்தாத்தில் ஆளுநர் மாளிகைக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பி்ல 22 பேர் பலியாகியுள்ளதாக ஈராக் அதிகாரிக்ள் தெரிவித்தனர்.

இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது,

திவானியா நகரில் கவர்னர் அலுவகம் உள்ளிட்ட கட்டிடடயங்களுக்கு அருகே வெடிகுண்டுகள் நிறைந்த 2 வாகனங்களில் தற்கொலைப் படையினர் வந்தனர். அவர்கள் அந்த வண்டிகளை வெடிக்கச் செய்தனர். இன்று காலை நடந்த இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.

தெற்கு பாக்தாத்தில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ளது திவானியா நகரம்.

அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக வீட்டு பணிப்பெண் வழக்கு

நியூயார்க், ஜூன் 21-
அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக அவரது வீட்டின் முன்னாள் பணிப்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பிரபு தயாள் தூதராக பணிபுரிகிறார். அவரது வீட்டில் பர்த்வாய் (45) என்பவர் பணிப்பெண்ணாக முன்பு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பிரபு தயாள் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மாதம் 300 டாலர் சம்பளத்திற்கு, தன்னை பிரபு தயாள் நீண்ட நேரம் வேலை வாங்கியதாகவும், தனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு அவர் தர மறுப்பதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.மேலும், வீட்டில் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அறையில் தான், தனக்கு தூங்குவதற்கு இடம் ஒதுக்கினர் என்றும், பாலியல் ரீதியான முயற்சிகளையும் பிரபு தயாள் மேற்கொண்டார் என்றும் பர்த்வாய் தனது மனுவில் கூறியுள்ளார்.பர்த்வாய்க்கு உதவி வரும் சட்ட உதவி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.எனினும், பர்த்வாயின் புகாரை இந்தியத் தூதர் பிரபு தயாள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "பர்த்வாயின் புகார் முழு முட்டாள்தனமானது" என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் இலங்கை

உலகில் தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் இலங்கை 29 ஆவது இடத்தில் உள்ளது.

கௌரவமான வெளிநாட்டு கொள்கைகளுக்கான பத்திரிகை ஒன்று இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் சூடான் முதலாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், மியன்மார், பங்களாதேஸ், பூடான், இலங்கை போன்ற நாடுகள் இந்த பட்டியலில் முதல் 50 நாடுகளுள் உள்ளன.

மேலும் இந்தியா தமது அண்டைய நாடுகளை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

லிபியாவில் நேட்டோ தாக்குதலில் அப்பாவிகள் பலி

திரிபோலி, ஜூன். 21-

திரிபோலியில் நிகழ்ந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் ஒன்பது பேர் பலியானதற்கு பொறுப்பேற்று, நேட்டோ படை வருத்தம் தெரிவித்துள்ளது.
லிபியா தலைநகர் திரிபோலியில் நேற்று முன்தினம், நேட்டோ படையினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். இதற்கு பொறுப்பு ஏற்று, நேட்டோ வருத்தம் தெரிவித்து இருப்பதாக லிபியா தூதுக் குழு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் பவ்சார்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சம்பவம் குறித்து நாங்கள் இன்னும் இறுதி முடிவிற்கு வரவில்லை. ஆயுதங்களை தவறாகக் கையாண்டதால் இச்சம்பவம் நடந்திருக்கலாம்" என்றார்.
நேட்டோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "லிபியாவில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மிகவும் கவனத்துடன் கையாளப்படுகிறது. பிரிகா பகுதியில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில், எதிரிகளின் ரோந்து வாகனங்கள் தான், பாதி அளவிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்பாராமல் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்காக வருத்தம் தெரிவிக்கிறோம்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் போர் செய்து களைத்து போய்விட்டனர்: ராபர்ட் கேட்ஸ்

வாசிங்டன், ஜூன். 21
அமெரிக்கர்கள் போர் செய்து களைத்துப்போய் விட்டனர் என்று அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க மக்கள் போர் செய்து களைத்து போய்விட்டார்கள் என்பதை நான் அறிவேன். 2008-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு மிக குறைவான பொறுப்பு தான் இருந்தது. ஆப்கானிஸ்தானில் 2010-ம் ஆண்டு கோடை வரை நம்மிடம் சரியான போர் தந்திரம் இல்லை. சரியான வசதி வாய்ப்பு இல்லை. இந்த போருக்கு தேவையான அளவுக்கு போதுமான வசதி கிடைக்கவில்லை. 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் நாம் ஆப்கானிஸ்தான் போரில் வெற்றி பெற்றோம். பிறகு நம் கவனம் ஈராக் மீது திரும்பியது. இதனால் பல ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தான் அலட்சியப்படுத்தப்பட்டது. நான் 2006-ம் ஆண்டு ராணுவத்தலைமை பொறுப்பை ஏற்றபோது 5 ஆண்டு யுத்தத்தில் 194 அமெரிக்கர்கள் தான் பலியாகி இருந்தனர். நாம் 10 ஆண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டு இருந்தோம். ஆனால் ஆப்கானிஸ்தானில் முழு அளவில் யுத்தத்தில் ஈடுபடவில்லை. இவ்வாறு ராபர்ட் கேட்ஸ் கூறினார்.



ரஷ்யாவில் பயங்கர விமான விபத்து-44 பேர் பலி

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் நடந்த பயங்கர விமான விபத்தில் 44 பேர் பலியாயினர்.

பெட்ரோசவோட்ஸ்க் நகரில் கடும் பனி மூட்டத்துக்கு இடையே தரையிறங்க முயன்ற விமானம் ரன்வேக்கு முன்னதாகவே தரையில் மோதி வெடித்துச் சிதறியது. அதில் விமானத்தில் இருந்த 44 பேர் பலியாயினர். 10 வயது சிறுவன், ஒரு பெண் விமான சிப்பந்தி உள்ளிட்ட 8 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து நடந்தபோது விமான நிலைய ரன்வேயில் பனி மூட்ட விளக்குகள் (fog lights) விளக்குகள் எரியவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் ரன்வே என்று நினைத்து அதற்கு 2 கி.மீ. தூரத்துக்கு முன்னதாகவே விமானிகள் விமானத்தை தரையில் இறக்கியதாகவும், இதையடுத்தே விமானம் தரையில் மோதி வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகறது.

விபத்துக்குள்ளான விமானம் சோவியத் தயாரிப்பான பழைய டி.யு.-134 ரக விமானமாகும். இது ரஷ்ஏர் ஏர்லைன்ஸ் நிறுவனத்ததுக்குச் சொந்தமானது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து பெட்ரோசவோட்ஸ்க் நகருக்கு வந்து கொண்டிருந்தது.

பின்லாந்து எல்லைக்கு அருகே உள்ள இந்த நகரில் கடும் பனிப் பொழிவு நிகழ்ந்து கொண்டுள்ளது. விமானம் ரன்வேக்கு 2 கி.மீ. முன்னதாகவே தரையைத் தொட்டதால் அது உடைந்து சிதறியுள்ளது.


விமான நிலையத்துக்கு வெளியே உள்ள சாலை முழுவதும் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன.