
அணுக்கதிர் வீச்சு இக்கு உட்பட்ட பசுவின் பாலை அருந்தும் போது அதிக பாதிப்பு வரும். கதிர்வீச்சில் உள்ள அயோடின் மூலகத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளும் பசு அல்லது எருமை அதன் பாலில் அப்படியே அதை திருப்பி தரும். இது முன் ரஷ்யாவில் உள்ள செர்னோபிளில் நடந்திருக்கிறது. மேற்கண்ட செய்தி தினமலர் செய்தி (16.03.2011).
மேற்கட செய்தி படி பார்த்தால் ஜப்பான் அணு கரு உலை வெடிப்பு நிகழ்ந்த பகுதில் இருந்து மீன் கூட்டங்கள் எந்த எந்த நாடு எல்லைக்கு சென்றாலு அந்த நாடு மக்களுக்கு உணவாகி அந்த நாடு மக்களுக்கும் புற்று நோயை உண்டு செய்யும் வாய்புகள் அதிகம் அல்லவோ . அது மட்டு இன்றி அணு கதிவீசுக்கு உட்பட்ட கடல் நீரும் அணு கழிவுக்கு உட்பட்ட கடல் நீரும் கடல் நீரோட்டத்தின் காரணமாக அண்டை நாடுகளின் கடலில் கலக்கும். இதில் உள்நாட்டு மக்களுக்கும் பதிப்பு ஏற்படும். எப்படி எனில் மக்கள் பயன் படுத்தும் சோடியம் க்ளோரிடு என்ற சமையல் உப்பு கடல் நீரில் இருந்து தயார் ஆகிறது. அதன் மூலமாக மக்களை நோக்கி கடல் நீரில் உள்ள கதிர் வீச்சுக்கு உட்பட்ட அயோடின் மூலக்கூருகள் சமையல் உப்பு மூலமும் பரவ வாய்புகள் உள்ளன. சமையல் உப்பை பயன் படுத்தினால் புற்றுநோய் என்றால் என்ன ஆவது ? இதனை பற்றி இப்போதே இந்திய விஞ்ஞாயனிகள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் .