ஜகார்தா : அடுத்தடுத்த பூகம்பங்கள்... அதை தொடரும் சுனாமி என ஜப்பானை போல ஆபத்தை எதிர்கொண்டு வாழ பழகி விட்டது இந்தோனேசியா. நேற்று மதியம் 2.08 மணிக்கு அங்கு ஏற்பட்ட 8.7 ரிக்டர் பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு உயிர் சேதம், பொருட் சேதம் இல்லாமல் நிம்மதி பெருமூச்சு விட்டது.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதி. தலைநகரம் பண்டா ஏச். 2004 டிசம்பர் 26ம் தேதியை மறக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு நேற்று அதே ஆபத்து மீண்டும் பயமுறுத்தியது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.08க்கு பண்டா ஏச் நகரில் இருந்து 454 கி.மீ. தூர கடலின் 33 கி.மீ. ஆழத்தில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.
ரிக்டரில் அது 8.7 புள்ளியாக பதிவானதாக (முன்னதாக அது 8.9 புள்ளி என தகவல் வெளியானது) அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பூகம்பத்தால் பண்டா ஏச் நகரின் கட்டிடங்கள் குலுங்கின. உணவு இடைவேளையை முடித்த அலுவலக ஊழியர்கள் கட்டிடம் ஆடுவதை கண்டு அலறி அடித்து வெளியேறினர்.
சாலைகளில் பிளவு ஏற்பட, கட்டிடங்களில் விரிசல் விழுந்தது. வீடுகளில் பொருட்கள் கீழே உருண்டோட, குழந்தைகள், முதியவர்களுடன் மக்கள் வெட்டவெளியை தேடி ஓடினர். ஒரு மணி நேரம் வரை காத்திருந்த மக்கள் தயக்கத்துடன் மீண்டும் வீடு, அலுவலகம் செல்ல, மீண்டும் 4.13க்கு பூமி குலுங்க, வீறிட்டு அலறி வெளியேறினர். இந்த முறை ரிக்டரில் 8.2 புள்ளியாக பூகம்பத்தை தொடர்ந்த அதிர்வு பதிவானது.
அடுத்தடுத்து பீதி ஏற்படுத்திய இரு பூகம்பத்தால் உயிர் சேதம் ஏற்படாதது ஆறுதல். ஆனால், கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டதால் சுனாமி தாக்கும் என பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஆகியவை எச்சரித்தன.
இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், சுற்றுலா பயணிகள், மீனவ குடும்பங்கள் அவசரமாக மேடான பகுதிகளை நோக்கி அப்புறப்படுத்தப்பட்டனர்.
எனினும், பூகம்பத்தின் மையப் பகுதியை 3 மணி நேரம் துல்லியமாக கண்காணித்த பசிபிக் சுனாமி மையம், பெரிய அலை ஏதும் எழாததால் சுனாமி ஆபத்து நீங்கியதாக மாலை 6.15 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதுபற்றி இந்தோனேசிய புவியியல் ஏஜென்சி தலைவர் கிறிஸ்டியவான் கூறுகையில், ‘‘பூகம்ப மையப் பகுதியில் 80 செ.மீ. உயர அலைகளே எழுந்ததால், கடலோரத்தில் சிறிய அளவில் மட்டுமே அலைகள் உயர்ந்தன. 8.7 புள்ளி சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டிருந்தாலும் அது ஸ்டிரைக்,ஸ்லிப் (பெட்டி செய்தி) என்பதால் சுனாமி ஏற்படவில்லை’’ என்றார்.
எனவே, டிசம்பர் 26, 2004 சுனாமியின் காயத்தை மறக்காத இந்தோனேசிய மக்கள், நேற்றைய பூகம்பம் சேதம் ஏற்படுத்தாததை நினைத்து நிம்மதி அடைந்தனர்.
‘ஸ்டிரைக்,ஸ்லிப்’ பூகம்பம்
2004ல் ஏற்பட்டது 9.1 ரிக்டர் பூகம்பம். இதில், 2 லட்சத்து 20,000 பேர் பலியானார்கள். இந்த முறை அது 8.7 புள்ளிகள் என்பதால் சுனாமி ஏற்படுத்தும் அளவு என்ற அச்சம் இருந்தது. ஆனால், பூகம்ப மையம் இருந்த இந்தோனேசியா, அந்தமான் பகுதிகளில் கூட சுனாமி தாக்காததற்கு காரணம் இருக்கிறது. இது சுனாமி ஏற்படுத்தாத பூகம்பம் என்பதே காரணம். இதுபற்றி இங்கிலாந்து புவியியல் விஞ்ஞானி சுசானே சர்ஜென்ட் கூறுகிறார்:
பூகம்பத்தில் 3 வகைகள். பூமிக்கு அடியில் உள்ள நில தட்டுகளில் (டிஸ்க் ப்ளேட்) ஏற்படும் வழக்கமான தவறு (நார்மல் ஃபால்ட்) (முதலாவது படம் பார்க்க). நில தட்டுகளில் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டு கீழ் நோக்கி செங்குத்தாக நகரும். இதனால், நில தட்டுகளின் மேல் இருக்கும் பாறைகள் கீழிறங்கும். இந்த பூகம்பத்தால் கடலின் அடிப்பகுதி இடம்மாறும். சுனாமி ஏற்படுத்தும்.
அடுத்தது, த்ரஸ்ட். (2வது படம் பார்க்க) இதில் நில அடுக்குகளில் ஏற்படும் அதிக அழுத்ததால் பிளவு ஏற்பட்டு மேல் நோக்கி நகரும். இதனால், கீழிறங்கும் பக்கத்து நில தட்டின் மீது பாறைகள் கீழிறங்கும். இந்த பூகம்பத்தாலும் சுனாமி ஆபத்து அதிகம். ஆனால், நேற்று நடந்த ‘ஸ்டிரைக்,ஸ்லிப்’ வகை பூகம்பத்தில் (3வது படம் பார்க்க) இரண்டு நில அடுக்குகள் பக்கவாட்டில் உரசியபடி நகரும். இதனால், கடலுக்கு கீழ் தரையில் பெரிய மாற்றம் ஏற்படாது. அதனால், சுனாமி ஏற்பட வாய்ப்பு குறைவு என்கிறார் சுசானே சர்ஜென்ட்.
* 2004 பூகம்பம் ஏற்பட்ட அதே சுமத்ரா தீவின் பண்டா ஏச் நகரத்தை அடுத்த கடல் பகுதியிலேயே நேற்றும் பூகம்பம் ஏற்பட்டது.
* பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட 28 நாடுகள்: இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, மியான்மர், தாய்லாந்து, மாலத்தீவு, இங்கிலாந்து, மலேசியா, மொரிஷியஸ், இந்திய பெருங்கடலின் பிரான்ஸ் பகுதியான ரீயூனியன், செஷல்ஸ், பாகிஸ்தான், சோமாலியா, ஓமன், மடகாஸ்கர், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட், ஏமன், காமோரஸ், வங்கதேசம், தான்சானியா, மொசாம்பிக், கென்யா, க்ரோசெட் தீவு, கெர்குலன் தீவு, தென்ஆப்ரிக்கா, சிங்கப்பூர்.