Total Pageviews

Blog Archive

Thursday, 19 April 2012

சீனாவின் பிரம்மாண்ட அணைக்கு தொடரும் ஆபத்து: மேலும் ஒரு லட்சம் பேரை வெளியேற்ற திட்டம்



பெய்ஜிங்: சீனாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவினால் அப்பகுதியில் இருந்து மேலும் 1 லட்சம் பேரை அடுத்த 5 ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது. இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது முன்பைவிட அதிக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மேலும் ஒரு லட்சம் பேரை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் நிரந்தரமாக வெளியேற்றிவிடுவது என்று அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள 5386 இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.







China Dam








சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல : சீன வெளியுறவுத்துறை அக்னி குறித்து



சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல இரண்டு நாடுகளும் ஒத்துழைக்கும் பங்காளிகள் என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் லுயூ வெய்மின் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிகையில், டில்லியில், சமீபத்தில் நடந்த “பிரிக்ஸ்’ மாநாட்டின் மூலம், இந்த உறவு மேலும் வலுவடைந்துள்ளது. அமைதியான சூழல் தொடர்ந்து நீடிப்பதற்கு, ஆசிய நாடுகள் அனைத்தும், முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.
இந்தியா அக்னி 5 ஏவுகணைச் சோதனையை நடத்தியிருப்பது குறித்து சீன நளிதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அணு சக்தி ஆழிவுகளை ஏற்படுத்தவல்ல இவ்வாறான ஏவுகணைகளை சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா, அமரிக்கா ஆகிய நாடுகளில் ஏற்கனவே காணப்பட்கின்றன. உலகத்தின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான் இந்தியா தெற்காசியாவில் ஏவுகணையைக் கொண்டிருக்கும் முதலாவது நாடு







Wednesday, 11 April 2012

இந்தோனேசியாவில் 8.7 ரிக்டர் பூகம்பம் ஏற்பட்டும் சுனாமி தாக்காதது ஏன்?

ஜகார்தா : அடுத்தடுத்த பூகம்பங்கள்... அதை தொடரும் சுனாமி என ஜப்பானை போல ஆபத்தை எதிர்கொண்டு வாழ பழகி விட்டது இந்தோனேசியா. நேற்று மதியம் 2.08 மணிக்கு அங்கு ஏற்பட்ட 8.7 ரிக்டர் பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு உயிர் சேதம், பொருட் சேதம் இல்லாமல் நிம்மதி பெருமூச்சு விட்டது.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதி. தலைநகரம் பண்டா ஏச். 2004 டிசம்பர் 26ம் தேதியை மறக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு நேற்று அதே ஆபத்து மீண்டும் பயமுறுத்தியது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.08க்கு பண்டா ஏச் நகரில் இருந்து 454 கி.மீ. தூர கடலின் 33 கி.மீ. ஆழத்தில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.

ரிக்டரில் அது 8.7 புள்ளியாக பதிவானதாக (முன்னதாக அது 8.9 புள்ளி என தகவல் வெளியானது) அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பூகம்பத்தால் பண்டா ஏச் நகரின் கட்டிடங்கள் குலுங்கின. உணவு இடைவேளையை முடித்த அலுவலக ஊழியர்கள் கட்டிடம் ஆடுவதை கண்டு அலறி அடித்து வெளியேறினர்.

சாலைகளில் பிளவு ஏற்பட, கட்டிடங்களில் விரிசல் விழுந்தது. வீடுகளில் பொருட்கள் கீழே உருண்டோட, குழந்தைகள், முதியவர்களுடன் மக்கள் வெட்டவெளியை தேடி ஓடினர். ஒரு மணி நேரம் வரை காத்திருந்த மக்கள் தயக்கத்துடன் மீண்டும் வீடு, அலுவலகம் செல்ல, மீண்டும் 4.13க்கு பூமி குலுங்க, வீறிட்டு அலறி வெளியேறினர். இந்த முறை ரிக்டரில் 8.2 புள்ளியாக பூகம்பத்தை தொடர்ந்த அதிர்வு பதிவானது.

அடுத்தடுத்து பீதி ஏற்படுத்திய இரு பூகம்பத்தால் உயிர் சேதம் ஏற்படாதது ஆறுதல். ஆனால், கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டதால் சுனாமி தாக்கும் என பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஆகியவை எச்சரித்தன.

இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், சுற்றுலா பயணிகள், மீனவ குடும்பங்கள் அவசரமாக மேடான பகுதிகளை நோக்கி அப்புறப்படுத்தப்பட்டனர்.
எனினும், பூகம்பத்தின் மையப் பகுதியை 3 மணி நேரம் துல்லியமாக கண்காணித்த பசிபிக் சுனாமி மையம், பெரிய அலை ஏதும் எழாததால் சுனாமி ஆபத்து நீங்கியதாக மாலை 6.15 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுபற்றி இந்தோனேசிய புவியியல் ஏஜென்சி தலைவர் கிறிஸ்டியவான் கூறுகையில், ‘‘பூகம்ப மையப் பகுதியில் 80 செ.மீ. உயர அலைகளே எழுந்ததால், கடலோரத்தில் சிறிய அளவில் மட்டுமே அலைகள் உயர்ந்தன. 8.7 புள்ளி சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டிருந்தாலும் அது ஸ்டிரைக்,ஸ்லிப் (பெட்டி செய்தி) என்பதால் சுனாமி ஏற்படவில்லை’’ என்றார்.
எனவே, டிசம்பர் 26, 2004 சுனாமியின் காயத்தை மறக்காத இந்தோனேசிய மக்கள், நேற்றைய பூகம்பம் சேதம் ஏற்படுத்தாததை நினைத்து நிம்மதி அடைந்தனர்.

‘ஸ்டிரைக்,ஸ்லிப்’ பூகம்பம்

2004ல் ஏற்பட்டது 9.1 ரிக்டர் பூகம்பம். இதில், 2 லட்சத்து 20,000 பேர் பலியானார்கள். இந்த முறை அது 8.7 புள்ளிகள் என்பதால் சுனாமி ஏற்படுத்தும் அளவு என்ற அச்சம் இருந்தது. ஆனால், பூகம்ப மையம் இருந்த இந்தோனேசியா, அந்தமான் பகுதிகளில் கூட சுனாமி தாக்காததற்கு காரணம் இருக்கிறது. இது சுனாமி ஏற்படுத்தாத பூகம்பம் என்பதே காரணம். இதுபற்றி இங்கிலாந்து புவியியல் விஞ்ஞானி சுசானே சர்ஜென்ட் கூறுகிறார்:


பூகம்பத்தில் 3 வகைகள். பூமிக்கு அடியில் உள்ள நில தட்டுகளில் (டிஸ்க் ப்ளேட்) ஏற்படும் வழக்கமான தவறு (நார்மல் ஃபால்ட்) (முதலாவது படம் பார்க்க). நில தட்டுகளில் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டு கீழ் நோக்கி செங்குத்தாக நகரும். இதனால், நில தட்டுகளின் மேல் இருக்கும் பாறைகள் கீழிறங்கும். இந்த பூகம்பத்தால் கடலின் அடிப்பகுதி இடம்மாறும். சுனாமி ஏற்படுத்தும்.

அடுத்தது, த்ரஸ்ட். (2வது படம் பார்க்க) இதில் நில அடுக்குகளில் ஏற்படும் அதிக அழுத்ததால் பிளவு ஏற்பட்டு மேல் நோக்கி நகரும். இதனால், கீழிறங்கும் பக்கத்து நில தட்டின் மீது பாறைகள் கீழிறங்கும். இந்த பூகம்பத்தாலும் சுனாமி ஆபத்து அதிகம். ஆனால், நேற்று நடந்த ‘ஸ்டிரைக்,ஸ்லிப்’ வகை பூகம்பத்தில் (3வது படம் பார்க்க) இரண்டு நில அடுக்குகள் பக்கவாட்டில் உரசியபடி நகரும். இதனால், கடலுக்கு கீழ் தரையில் பெரிய மாற்றம் ஏற்படாது. அதனால், சுனாமி ஏற்பட வாய்ப்பு குறைவு என்கிறார் சுசானே சர்ஜென்ட்.


* 2004 பூகம்பம் ஏற்பட்ட அதே சுமத்ரா தீவின் பண்டா ஏச் நகரத்தை அடுத்த கடல் பகுதியிலேயே நேற்றும் பூகம்பம் ஏற்பட்டது.
* பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட 28 நாடுகள்: இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, மியான்மர், தாய்லாந்து, மாலத்தீவு, இங்கிலாந்து, மலேசியா, மொரிஷியஸ், இந்திய பெருங்கடலின் பிரான்ஸ் பகுதியான ரீயூனியன், செஷல்ஸ், பாகிஸ்தான், சோமாலியா, ஓமன், மடகாஸ்கர், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட், ஏமன், காமோரஸ், வங்கதேசம், தான்சானியா, மொசாம்பிக், கென்யா, க்ரோசெட் தீவு, கெர்குலன் தீவு, தென்ஆப்ரிக்கா, சிங்கப்பூர்.






சென்னையில் நிலநடுக்கம் ஏன்? வானிலை அதிகாரி விளக்கம்

இந்தோனேசியா அருகே (11.04.2012) கடலில் 8.7 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை செயற்கைகோள் இயக்குனர் டபிள்யூ.பி.கோபால் பூகம்பம் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது: 

சுமத்ரா தீவில் வடக்கு பகுதியில் பகல் 2 மணி 8 நிமிடத்திற்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பகல் 2 மணி 31 நிமிடத்திற்கு இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியிலும் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

சுமத்ரா தீவில் அதிகபட்சமாக 8.7 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அந்த நிலநடுக்கத்தை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் உணர்ந்துள்ளனர்.

சென்னையில் நடந்த பூமி அதிர்ச்சி சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் எதிரொலிதான். அதைத்தான் சென்னை நகர மக்களும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் உள்ள மக்களும் உணர்ந்துள்ளனர்.

இவ்வாறு இயக்குனர் கோபால் தெரிவித்தார்.

யூரோ பிரச்னையை தீர்க்க புது தீர்வளித்த 11 வயது சிறுவன்

ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கென்று தனித்தனி நாணயங்களை வைத்திருந்தன.
ஒரே நாணயமாக இருப்பது வசதி பொருளாதாரமும் மேம்படும் என்பதால் யூரோ என்ற பொது நாணயம் கடந்த 1999ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 17 நாடுகளில் யூரோ நாணயம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. கிரீஸ் உட்பட பல்வேறு நாடுகள் யூரோ நாணயத்தில் இருந்து விலக வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இந்த பிரச்னைக்கு தீர்வு தெரிந்தால் சொல்லுங்கள் என்று இங்கிலாந்தை சேர்ந்த நெக்ஸ்ட் சில்லரை வர்த்தக நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் பிரபல தொழிலதிபருமான சைமன் உல்ப்சன் கடந்த அக்டோபரில் அறிவித்தார். ரூ.20 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் இருந்து பொருளாதார நிபுணர்கள், நிதித்துறை பேராசிரியர்கள், வணிக, வர்த்தக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ஏராளமான ஐடியாக்கள் குவிந்தன.
அதில் மிக மிக இளமையான நிபுணர் ஹாலந்தை சேர்ந்த ஜூர் ஹெர்மன்ஸ். வயது 11. யூரோ நாணயம் சிக்கல் சாதாரண விஷயம் என்ற பீடிகையுடன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறான்.
நாணயம் மாற்றும் இயந்திரத்தின் உதவியுடன் கிரீஸ் மக்கள் எல்லாரும் தங்களிடம் இருக்கும் யூரோக்களை டிராச்மாவாக(யூரோவுக்கு முன்பு இருந்த கிரீசின் நாணயம்) முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சேரும் மொத்த யூரோவையும் பெரிய பீட்சாவை பீஸ் போடுவது போல அரசு பீஸ் போட்டு, கடனை அடைக்க வேண்டும். யூரோவை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள ஜூர், பீட்சா படம் வரைந்து விளக்கம் கொடுத்திருக்கிறான்.
அவனது இந்த யோசனை மற்றும் விளக்கிய விதத்தை பார்த்து வியந்து போன அதிகாரிகள் குழு அவனை பாராட்டி ரூ.6 ஆயிரம் செக் அனுப்பியிருக்கிறது. நல்ல யோசனை எது என்று ஜூலை 5-ம் திகதி அறிவிக்க உள்ளார்கள். கலந்து கொண்டதே பெருமைக்குரிய விஷயம் என்கிறான் ஜூர்.

உலகில் ஆபாச இணையத்தள தேடல் அதிகரிப்பு

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இணையத்தள தேடலில் 3ல் ஒன்று ஆபாச இணையத்தள தேடல் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
எக்ஸ்ட்ரீம்டெக் என்ற இணையத்தளம் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, இணையத்தள பயன்பாட்டில் சுமார் 30 சதவீத தேடல்கள், ஆபாச இணையத்தளங்களை கொண்டுள்ளன.
உலகின் மிகப் பெரிய ஆபாச இணையத்தளத்தின் 400 கோடி பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன. மாதத்துக்கு 35 கோடி புதிய பார்வையாளர்கள் அதை காண்கின்றனர்.
ஆபாச இணையத்தளங்களில் அதிக பார்வையாளர்கள், பக்கங்கள் கொண்டவை அடிப்படையில் முதலிடம் பெறும், இணையத்தளத்தை ஒவ்வொருவரும் பார்க்க சராசரியாக 15 நிமிடம் செலவிட்டுள்ளனர்.
ஆபாச இணையத்தளத்தின் எவ்வளவு தகவல்கள் இடம் மாறின என்பது குறித்து அதன் சர்வரில் இருந்து பெறப்பட்ட தகவல்படி, விநாடிக்கு 50 ஜிகாபைட் அல்லது மாதத்துக்கு 29 பீட்டாபைட் அளவு ஆபாச படங்கள், தகவல்கள் இடம்மாற்றப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

அணு ஆயுத பலத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருவதாகவும், இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகளவு அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமைதி மற்றும் விடுதலைக்கான சர்வதேச பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள "என்றென்றும் அழிவைத் தேடி: உலகைச் சுற்றி அணு ஆயுத நவீனமயமாக்கல்” எனும் அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ. 12,500 கோடி அளவுக்கு அந்நாடு செலவிடுகிறது.
குறிப்பாக புளுட்டோனியம் உற்பத்தியை அதிகரிப்பது, அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணைகளைத் தயாரிப்பது, அவற்றை சோதனை செய்வது ஆகியவற்றில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் இலகுரக மற்றும் புளுட்டோனியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு ஆயுதத் தயாரிப்பில் அந்நாடு கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக புளுட்டோனியம் உற்பத்தித் திறனை பாகிஸ்தான் விரிவுபடுத்தியுள்ளது.
விமானத்திலிருந்து போடப்படும் அணு குண்டுகளுக்குப் பதிலாக அணு ஆயுதத்தை கொண்டுசெல்லும் நடுத்தர ஏவுகணைத் தயாரிப்புக்கு அந்நாடு முக்கியத்துவம் தருகிறது. அணு ஆயுத ஆய்வில் வளர்ந்துவரும் நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது.
உத்தேசமாக 90 முதல் 110 அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வைத்திருக்க வாய்ப்புள்ளது. பாகிஸ்தானிடம் சிறிய ரக, நடுத்தர, தொலைவு ரக சாலை வழியே எடுத்துச் செல்லத்தக்க நிலத்திலிருந்து நிலப் பகுதிகளைத் தாக்கும் ஏவுகணைகள் உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக 2வது தலைமுறை ஏவுகணைகளை அந்த நாடு தயாரித்து வருகிறது. இதுவரை 140 கிலோ புளுட்டோனியத்தை பாகிஸ்தான் தயாரித்துள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு நிதி வழங்குவது யார் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.