Total Pageviews

Blog Archive

Wednesday, 11 April 2012

யூரோ பிரச்னையை தீர்க்க புது தீர்வளித்த 11 வயது சிறுவன்

ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கென்று தனித்தனி நாணயங்களை வைத்திருந்தன.
ஒரே நாணயமாக இருப்பது வசதி பொருளாதாரமும் மேம்படும் என்பதால் யூரோ என்ற பொது நாணயம் கடந்த 1999ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 17 நாடுகளில் யூரோ நாணயம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. கிரீஸ் உட்பட பல்வேறு நாடுகள் யூரோ நாணயத்தில் இருந்து விலக வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இந்த பிரச்னைக்கு தீர்வு தெரிந்தால் சொல்லுங்கள் என்று இங்கிலாந்தை சேர்ந்த நெக்ஸ்ட் சில்லரை வர்த்தக நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் பிரபல தொழிலதிபருமான சைமன் உல்ப்சன் கடந்த அக்டோபரில் அறிவித்தார். ரூ.20 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் இருந்து பொருளாதார நிபுணர்கள், நிதித்துறை பேராசிரியர்கள், வணிக, வர்த்தக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ஏராளமான ஐடியாக்கள் குவிந்தன.
அதில் மிக மிக இளமையான நிபுணர் ஹாலந்தை சேர்ந்த ஜூர் ஹெர்மன்ஸ். வயது 11. யூரோ நாணயம் சிக்கல் சாதாரண விஷயம் என்ற பீடிகையுடன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறான்.
நாணயம் மாற்றும் இயந்திரத்தின் உதவியுடன் கிரீஸ் மக்கள் எல்லாரும் தங்களிடம் இருக்கும் யூரோக்களை டிராச்மாவாக(யூரோவுக்கு முன்பு இருந்த கிரீசின் நாணயம்) முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சேரும் மொத்த யூரோவையும் பெரிய பீட்சாவை பீஸ் போடுவது போல அரசு பீஸ் போட்டு, கடனை அடைக்க வேண்டும். யூரோவை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள ஜூர், பீட்சா படம் வரைந்து விளக்கம் கொடுத்திருக்கிறான்.
அவனது இந்த யோசனை மற்றும் விளக்கிய விதத்தை பார்த்து வியந்து போன அதிகாரிகள் குழு அவனை பாராட்டி ரூ.6 ஆயிரம் செக் அனுப்பியிருக்கிறது. நல்ல யோசனை எது என்று ஜூலை 5-ம் திகதி அறிவிக்க உள்ளார்கள். கலந்து கொண்டதே பெருமைக்குரிய விஷயம் என்கிறான் ஜூர்.