டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தின், 2ம் உலையில் கதிர்வீச்சு ஒரு கோடி மடங்கு அதிகரித்துள்ளது. ஜப்பானில் கடந்த 11ம்தேதி ஏற்பட்ட, சுனாமியால் சென்டாய் உள்ளிட்ட நகரங்கள் அழிந்துவிட்டன. புக்குஷிமா டாய்ச்சி பகுதியில் உள்ள, ஆறு மின் நிலையங்களில் நான்கு மின் நிலையங்களின் அணு உலைகள் சுனாமியால் சேதமடைந்தன. இந்த அணுமின் நிலையங்களிலிருந்து கதிர்வீச்சு பரவி வருகிறது. 2 மற்றும் 3ம் அணு மின் நிலையங்களில் கதிர்வீச்சு ஆயிரம் மடங்கு -----அதிகரித்துள்ளதால் அருகே உள்ள, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 3ம் அணு மின் நிலையத்தில் 10 ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு பரவியதால், மூன்று ஊழியர்கள் கடந்த வாரம் காயமடைந்தனர். இந்நிலையில், 2ம் மின் நிலைய உலையில் வெளியாகும் தண்ணீரில் சாதாரண அளவை விட, கதிர்வீச்சின் அளவு ஒரு கோடி மடங்கு அதிகரித்துள்ளதால் அணு உலையை குளுமைபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அவசர கால ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
