Total Pageviews

Blog Archive

Thursday, 26 May 2011

பாக். வைத்துள்ள அணு ஆயுதங்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்-ஏ.கே.அந்தோணி

டெல்லி: பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போய் விடுமோ என்ற அபாயம் எழுந்துள்ளது. கராச்சி சம்பவத்திற்குப் பின்னர் இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த கடற்படைத் தளபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார் அந்தோணி. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பாகிஸ்தானில், கராச்சி கடற்படைத் தளத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அந்த நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். 2 விமானங்கள் அழிக்கப்பட்டன.

இந்த கடற்படைத் தளத்துக்கு அருகில் உள்ள ரகசிய இடத்தில்தான் அணுஆயுதங்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி அணுஆயுதங்களைக் கைப்பற்றினால் பெரும் ஆபத்து நேரிடும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் அணுஆயுத விவகாரத்தில் இந்திய முப்படைகள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுவதாகவும், இப்போதே அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

ஆனால், இதுகுறித்து இப்போது வெளிப்படையாக எதுவும் கூறமுடியாது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. எனவே, எந்தப் பிரச்னையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய பாதுகாப்புப் படைகள் எப்போதும் தயாராக உள்ளன என்றார் அவர்.

Sunday, 15 May 2011

ஐ.நா. அறிக்கை: இந்திய ஆதரவை கோருகிறார் இலங்கை அமைச்சர்

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு திங்கள் கிழமை நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.
 உள்நாட்டுப் போர் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக அமைந்துள்ள ஐ.நா. அறிக்கை குறித்து தங்கள் நாட்டின் நிலை குறித்து விளக்கவும், இலங்கைக்கு ஆதரவு திரட்டவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
 தில்லி வரும் அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை திங்கள்கிழமை சந்தித்து இதுகுறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மறுநாள் செவ்வாய்க்கிழமை அவர் கொழும்பு திரும்புவார்.
 கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகளை அந்நாட்டு அரசு மீறியதாகவும், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு உணவு சரிவர வழங்கப்படவில்லை, பலர் பட்டினியால் இறந்தனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
 எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலை என்று ஐ.நா. குழு குற்றம் சாட்டியது. இதை அடுத்து, அந்நாட்டு அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
 ஆனால், அந்த நாடு இது குறித்து கவலைப்படவில்லை. இனப்படுகொலை குறித்து பல நாடுகள் குரல் எழுப்பிய போதும் இந்தியாவோ அமைதி காத்தது.
 இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐ நா பாதுகாப்பு சபையில் உலக நாடுகளிடையே பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 29 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இத்தகைய பின்னணியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் தில்லியில் இந்தியாவிடம் தங்களது நிலையை விளக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஐஏவுடன் உளவுத் தகவல்கள் பகிர்வதை நிறுத்தியது ஐஎஸ்ஐ

அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்றதைத் தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுடன் உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்வதை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ நிறுத்திவிட்டது.பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்த தாங்கள் உதவியதாகவும், சிஐஏவுக்கு தகவல்கள் அளித்ததாகவும் முன்பு கூறிவந்த ஐஎஸ்ஐ முகவர்கள், இப்போது பயங்கரவாதிகள் குறித்து சிஐஏவுக்கு தகவல்கள் அளிக்க மறுத்துவருவதாக சண்டே டெலிகிராப் தெரிவித்துள்ளது.அபோட்டாபாதில் மே 2-ம் தேதி அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொன்றனர். இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தானிடம் முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை என அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.இதனால் கடும்கோபத்தில் உள்ள ஐஎஸ்ஐ, சிஐஏவுடன் உள்ள உறவை துண்டித்துவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday, 14 May 2011

ஒசாமா கொலைக்கு பழி: பாகிஸ்தானில் தாலிபான்களின் இரட்டை தாக்குதலில் 73 பேர் பலி

இஸ்லாமாபாத்: ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக தாலிபான்கள் இன்று துணை ராணுவப் பயிற்சி முகாம் மீது நடத்திய தாக்குதலில் 73 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.



கடந்த 2-ம் தேதி அமெரி்ககப் படைகள் ஒசாமா பின்லேடனை அப்போதாபாத்தில் வைத்து சுட்டுக் கொன்றன. அதற்கு பழி வாங்கும் விதமாக தாலிபான்கள் பாகிஸ்தானில் உள்ள சப்கதார் துணை ராணுவப் பயிற்சி முகாம் மீது இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஒரு வருட ராணுப் பயிற்சி முடித்த துணை ராணுவ வீரர்கள் 10 நாள் விடுமுறையில் செல்வதற்காக பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த தற்கொலைப் படை நபர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

இதில் பலியானவர்கள், காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கையில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தவன் தான் வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதல்கள் சரியாக 8 நிமிட இடைவெளியில் நடந்தன.

இந்த தாக்குதல்களில் 73 பேர் பலியாகினர், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

60,000 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆயத்தம்



பெங்களூர்: உலகிலேயே அதிக அளவில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் நாடாக சிங்கப்பூர் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் வேறு எந்த நாட்டையும் விட சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் அதிக அளவிலான ஆட்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் ஜாக்பாட் அடிக்கப் போகிறது. அதாவது 60,000 இந்தியர்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாம்.

2011ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் பேரை வேலைக்கு தேர்வு செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. இதில் 50 சதவீதத்தினர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 20 சதவீதத்தினர், அதாவது 60,000 பேரை இந்தியாவிலிருந்து தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

சிங்கப்பூரில் அனைத்துத் துறைகளிலும் நல்ல வளர்ச்சி இருப்பதால் ஆளெடுப்பில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதே இதற்குக் காரணம். மேலும் பல நிறுவனங்களும் இந்தியர்களை அதிகம் விரும்புகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு வங்கிகளின் பிராந்திய தலைநகராக சிங்கப்பூர்தான் விளங்குகிறது. இது போக முன்னணி நிதி நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள், சுகாதாரம், எண்ணை நிறுவனங்கள் என பல தரப்பு நிறுவனங்களும் சிங்கப்பூரில்தான் தங்களது பிராந்திய தலைமையிடங்களை வைத்துள்ளன.

இவை அனைத்தும் தற்போது சிங்கப்பூரில் தங்களது பணிகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளன.

புதிதாக இந்த ஆண்டு தேர்வு செய்யப்படவுள்ள 3 லட்சம் பேரில் 40 சதவீதத்தினர் சிங்கப்பூரிலேயே பணியமர்த்தப்படுவர். மற்றவர்கள் ஆசியா பசிபிக் பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பப்படுவர்.

அப்பாவிகளை அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் அமெரிக்கா-குவான்டனாமோ மர்மம் அம்பலம்

வாஷிங்டன்: குவான்டனாமோவில் அமெரிக்கா அமைத்துள்ள சித்திரவதை சிறைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பல கைதிகள் எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் என்பது விக்கிலிகீஸ் வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சின்னச் சின்னக் காரணங்களுக்காக அங்கு பலர் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். 89 வயது முதியவரையும் கூட அடைத்துப் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. சிறையை அடைக்க அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டும் கூட இன்னும் 172 பேர் அங்கு எதிர்காலம் என்னாகுமோ என்ற பெரும் கேள்விக்குறியுடன் தவித்துக் கொண்டுள்ளனர் என்று அந்த ஆவணத் தகவல் தெரிவிக்கிறது.

குழந்தைகள், முதியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என சகல தரப்பினரும் தவறான காரணங்களுக்காக இங்கு அடைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாகியுள்ளனர். கிட்டத்தட்ட 759 ஆவணங்களை விக்கிலீக்ஸ் மூலம் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழும், கார்டியனும் வெளியிட்டுள்ளன.

உலக அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய குவான்டானாமோ சித்திரவதைக் கூடத்தின் மர்மங்களை அம்பலப்படுத்தும் வகையில் இந்த ஆவணங்கள் உள்ளன. இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள பலர் பல வருடங்களாக விசாரணையே இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது கூடத் தெரியவில்லை. மேலும் பலரை கட்டாயப்படுத்தி, சித்திரவதை செய்து வாக்குமூ்லம் வாங்கியுள்ளது அமெரிக்கா.

கிட்டத்தட்ட அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த, அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கைதி குறித்தும் ஆவணத்தை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். கடந்த 2002ம் ஆண்டு இந்த சிறைக் கூடம் திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அந்த சிறையில் நடப்பது பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது. இன்னும் 172 பேர் அங்கு வாடி வருகின்றனர்.

உண்மையில் இந்தக் கூடத்தில் பயங்கரமான தீவிரவாதிகளோ அல்லது எதிரி நாட்டு வீரர்களோ அடைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அப்பாவிகள்தான் அதிகம் உள்ளனர். அவர்களில் 89 வயதான ஆப்கானிஸ்தான் கிராமவாசியும் ஒருவர். 14 வயதான சிறுவனும் ஒருவன்.

இந்த முதியவரை ஆப்கானிஸ்தானிலிருந்து இந்த சிறைக்குக் கொண்டு வந்துள்ளனர். அவரது வீட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான போன் எண்கள் அடங்கிய குறிப்பு கிடந்தது என்பதுதான் இந்த முதியவரை விசாரணைக்காக கொண்டு வந்து அடைத்துள்ளதற்கான காரணம். மற்றபடி இவருக்கு தீவிரவாதிகளுடன் எந்தத் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. அதேபோல உள்ளூர் தலிபான் தலைவர்கள் பற்றித் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் 14 வயது சிறுவனைக் கூட்டி வந்து அடைத்து வைத்துள்ளனர்.

இந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ள பிற முக்கியத் தகவல்கள்:

- பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா முன்பு திட்டமிட்டிருந்ததாம். அல் கொய்தா, ஹமாஸ்,ஹிஸ்புல்லா, ஈரான் உளவுத்துறை ஆகியவற்றுடன் சேர்த்து ஐஎஸ்ஐயையும் ஒரு தீவிரவாத அமைப்பாக அது வகுத்து வைத்திருந்தது. இந்த அமைப்புகளில் ஏதாவது ஒன்றுடன் யாருக்கு்த தொடர்பு இருந்தாலும் அவர்களை தீவிரவாதிகள் அல்லது தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று அறிவிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. இதை குவான்டனாமோ சிறையில் உள்ள விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்து இந்த அமைப்புகளுடன் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்களை தீவிரவாதிகளாக கருதுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததாம்.

- சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரு கட்டத்தில் மனதளவில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். பலர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இன்னும் பலரோ தற்கொலை செய்யவும் கடுமையாக முயன்றுள்ளனர்.

- அதேபோல ஏராளமான இங்கிலாந்து பிரஜைகளும் கூட இங்கு பல வருட காலமாக அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அல் கொய்தாவுடனோ அல்லதி தலிபானுடனோ எந்தத் தொடர்பும் இல்லை என்பது அமெரிக்காவுக்கு தெரிந்திருந்தும் கூட தேவையில்லாமல் அடைத்து வைத்துள்ளனர். ஜமால் அல் ஹரித் என்ற இங்கிலாந்து பிரஜையை, தலிபான்களின் சிறையில் இருந்தார் என்பதற்காக கைது செய்து குவான்டனாமோவில் அடைத்து வைத்திருந்தனர். அதேபோல பின்யாம் முகம்மது என்ற இன்னொரு இங்கிலாந்து நாட்டவரை தூக்கிலிட்டுக் கொல்லவும் அமெரிக்க ராணுவம் முயன்றுள்ளது.

- பல கைதிகளை சித்திரவதை செய்து அவர்களை வற்புறுத்தி தங்களுக்கு சாதகமாக ஒப்புதல் வாக்குமூலத்தை அமெரிக்க ராணுவம் வாங்கியுள்ளது. இது நிற்காது என்று தெரிந்தும் கூட, அதை பெரிய ஆதாரமாக கருதி தொடர்ந்து அவர்களை சித்திரவதை செய்து வந்துள்ளது.

- வேறு வழியில்லாமல் பலரை அவரவர் சார்ந்த நாடுகளிடம் ஒப்படைத்தபோது, அவர்களால் அமெரிக்காவுக்கு பெரும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்தே ஒப்படைத்துள்ளது அமெரிக்க ராணுவம்.

இப்படிப்பட்ட சித்திரவதைக் கூடத்தை மூட ஒபாமா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியே என்றும் வாஷிங்டன் போஸ்ட் வர்ணித்துள்ளது. கைதிகளுக்கான அடிப்படை மனித உரிமைகளைக் கூட இந்த சிறைக் கூடத்தில் அமெரிக்க ராணுவம் கடைப்பிடிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் வாஷிங்டன் போஸ்ட் சாடியுள்ளது.

இந்த கைதிகள் கூட்டத்தில் சீன முஸ்லீம்களான உய்கூர் முஸ்லீம்களும் கணிசமான பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் ஒருவரான மாத் அல் குத்தானி என்பவர், 9 ஆண்டுகளுக்கு முன்பு பிடிபட்டார். இவர் செய்த தவறு என்னவென்றால், பின்லேடன் கடைசியாக காணப்பட்ட, தோரா போரா மலைப் பகுதியிலிருந்து 2001ம் ஆண்டு இவர் தப்பி வந்ததே. இதனால் இவருக்கு பின்லேடன் குறித்துத் தெரியும் என்று கூறி பிடித்து வந்து அடைத்து விட்டனர்.

இவரை பின்லேடனின் பாடிகார்டுகளில் ஒருவர் என்று அமெரிக்க ராணுவம் கூறுகிறது. இவரை விடுதலை செய்யவே முடியாது என்றும் அது கூறி வருகிறது.

அதேபோல காந்தஹாரில் உள்ள மனு மசூதி என்ற மசூதியில் முல்லாவாக இருந்த ஒருவரையும் பிடித்துப் போட்டனர். இவருக்கு தலிபான்கள் குறித்து நன்றாக தெரியும் என்பது இவர் மீதான குற்றச்சாட்டாகும். ஆனால் அவரிடமிருந்து எந்தத் தகவலையும் இவர்களால் கறக்க முடியாததால், ஒரு வருட சித்திரவதைக்குப் பின்னர் விடுவித்து விட்டனர்.

அதேபோல காபூல், கோவ்சத் ஆகிய பகுதிகளை நன்கு அறிந்து வைத்திருந்தவரான டாக்சி டிரைவர் ஒருவரையும் கைது செய்து இந்த சிறையில் அடைத்தனர்.

அல் ஜசீரா டிவியின் செய்தியாளர் ஒருவரையும் அமெரிக்க ராணுவம் கைது செய்து இங்கு அடைத்து வைத்திருந்தது. 6 வருட கால சிறைவாசத்திற்குப் பின்னர்தான் அவரை விடுவித்துள்ளனர். அல் ஜசீரா குறித்து அறிந்து கொள்வதற்காக இவரைக் கைது செய்துள்ளனர்.

விக்கிலீக்ஸ், குவான்டனாமோ குறித்து வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தருவதாக உள்ளது.

Wednesday, 11 May 2011

அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான பின்லேடன் அதன் எதிரியான கதை !


1979ம் ஆண்டு தனது கல்லூரிப் படிப்பை முடித்தார் செளதி அரேபியாவின் பெரும் செல்வந்தரான பின்லேடன்.
படிப்பை முடித்த சூட்டோடு, ஆப்கானிஸ்தானில் எழுந்த சோவியத் ஊடுறுவலுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டத்தில் சேர்ந்தார் பின்லேடன். அந்தப் போராட்டத்திற்கு பின்புலமாக இருந்து முழு ஆதரவையும் அப்போது கொடுத்தது அமெரிக்காவின் சிஐஏ.

1979 முதல் 1989ம் ஆண்டு வரை அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க அதிபர்களாக இருந்த ஜிம்மி கார்ட்டர், ரொனால்ட் ரீகன் ஆகியோரின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவின் கீழ் நடந்து வந்த அந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயுதம், நிதியுதவி உள்ளிட்டவற்றைக் கொடுத்து ஆதரித்து தூண்டி விட்டு வந்தது அமெரிக்கா.

அந்தப் போராட்டத்தின்போது, பின்லேடன் தனது தலைமையில் ஆப்கானிஸ்தானிலிருந்தபடி இஸ்லாமிய ஜிஹாத் முஜாஹிதின் என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த அமைப்புக்குத் தேவையான பயிற்சிகளையும், ஆயுத உதவிகளையும் அமெரிக்காதான் முழுமையாக அளித்தது.

அதாவது பின்லேடனை ஆயுதப் போராட்டத்தில் திறம்பட செயல்பட பயிற்சி கொடு்ததது அமெரிக்கா. எப்படி நவீன ஆயுதங்களைக் கையாள்வது, எதிரிகளை எப்படி அழிப்பது உள்ளிட்ட பால பாடங்களை சொல்லிக் கொடுத்தது அமெரிக்கா.

ஆபரேஷன் சைக்ளோன், ரீகன் டாக்ட்ரைன் என்ற பெயர்களில் இந்த உதவிகளை அள்ளிக் கொடுத்தது அமெரிக்கா- பின்லேடன் குழுவுக்கு. அதாவது பின்லேடனை ஒரு முழுமையான போராளியாக, தீவிரவாதியாக வளர்த்து, வார்த்தெடுத்து, உருவாககியதே அமெரிக்காவின் சிஐஏ தான்.

அதை விட ஒரு படி மேலே போய், பின்லேடன் தலைமையிலான போராட்டக் குழுவினரை, ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று ரீகன் வானளாவ புகழ்ந்தார். வரலாற்றின் பக்கங்களில் இன்றளவும் அழிக்க முடியாத அளவுக்கு அது அழுத்தமாகவே பதியப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்கா- ரஷ்யா இடையிலான பனிப் போர் முடியும் வரையில்தான். அதன் பிறகு அமெரிக்கா பல்டி அடித்தது. ரஷ்யாவுடன் நட்பை உருவாக்கிக் கொண்டது அமெரிக்கா. ரஷ்யாவும் 1989ல் ஆப்கானிஸ்தானை விட்டு விலகியது.

இதனால் பின்லேடன் தலைமையிலான குழுவினரை ஆயுததாரிகளாகப் பார்க்க ஆரம்பித்தது அமெரிக்கா. அவர்களைக் கைவிட்டது. அதாவது தனது வேலை முடிந்ததும் அப்படியே திராட்டில் விட்டுவிட்டது அமெரிக்கா. ஆனால், அதுவரை சோவியத் யூனியனுக்கு எதிராக ஆயுத போராட்டங்கள் நடத்தி வந்த பின்லேடனும் அவரது சகாக்களும், ஓயவில்லை.

தங்களை உருவாக்கிய அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பினர். அதற்கு முக்கிய காரணங்கள் 3. சோவியத் யூனியனை எதிர்க்க ஆப்கானிஸ்தானை ஒரு போர்க் களமாக பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்தவுடன் அந்த நாட்டுக்கு எந்த உதவியும் செய்யாமல் போனது, ஈராக் மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பு, ஈராக் மக்களை குறிப்பாக குழந்தைதகளை மருந்து கூட கிடைக்காமல் கொடூரமாக உயிரிழ்க்கச் செய்த பொருளாதாரத் தடைகள் ஆகியவை 2 காரணங்கள்.

ஆனால், மிக முக்கியமான காரணம் பாலஸ்தீனப் பிரச்சனை. பாலஸ்தீனத்தை கைப்பற்றி, அந்த நாட்டிலேயே இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் அடிமையாக்கியதை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்கள் தான் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கரு.

இஸ்ரேல் என்ன செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல், இஸ்ரேலை தொடர்ந்து தட்டிக் கொடுத்த அமெரிக்காவுக்கு எதிராக தனது சக்தி முழுவதையும் திருப்பினார் பின்லேடன். பாலஸ்தீன மக்களை அடிமையாக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுக்க அல்கொய்தா தீவிரவாத அமைப்பை உருவாக்கினார் பின்லேடன். இப்படித்தான் பின்லேடன் அமெரிக்காவின் எதிரியாக மாறினார்.

ஆனால், இந்த இடத்தில் தான் சிஐஏ உளவு விஷயத்தில் தனது பெரும் தோல்வியைத் தழுவியது. தங்களால் கைவிடப்பட்ட பின்லேடன் என்ன செய்கிறார் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டது.

இந் நிலையில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக விளங்கிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பியது. இதற்காக ஆப்கானில்தானின் மாணவர்களை முல்லா ஒமர் தலைமையில் ஒன்று திரட்டியது ஐஎஸ்ஐ. இந்த மாணவர்களுக்கு ஆயுத பயிற்சியும் பணமும் ஆயுதங்களும் தரப்பட்டன.

இந்த மாணவர் படை தான் தலிபான் ஆக உருவெடுத்தது. சோவியத் யூனியன் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த அதிபர் முகம்மத் நஜீபுல்லாவை இந்தப் படை எதிர்க்க ஆரம்பித்தது.

இவர் கம்யூனிஸ ஆதரவாளர் என்பதால், அவரை ஆட்சியை விட்டு விரட்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும் தலிபான்களுக்கும் அமெரிக்காவும் ஆதரவு தந்தது. 1992ம் ஆண்டு தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றி நஜீபுல்லாவை அடித்துக் கொலை செய்து, ஜீப்பில் உடலை கட்டி இழுத்து வந்து, காபூலில் ஒரு தெருவில் மின் கம்பத்தில் தொங்கவிட்டபோது, இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா என்று தலிபான்களைப் பார்த்து உலகம் அதிர்ந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் நஜீபுல்லா காலி என்று அமெரிக்கா மட்டும் மகிழ்ச்சியில் திளைத்தது.

இந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கையில் நாடு சிக்கி சின்னாபின்னாமானது. ஆனால், தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை (லிபியாவில் கடாபியின் அடக்குமுறையை மட்டும் எதிர்ப்பார்களாம்!). ஆண்கள் கட்டாயம் தாடி வைக்க வேண்டும், தாடியை ட்ரிம் செய்தால் அடி-உதை, பெண்கள் தனியே வெளியே வந்தால் அடி, எந்தப் பெண் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் கல்லால் அடித்துக் கொல்வது என்று தலிபான்கள் வெறியாட்டம் போட்டபோதும் அமெரிக்காவிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை.

இப்படி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கே மிக மிக அமைதியாக தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் பின்லேடன். ஆட்சி நடத்த பணமில்லாமல் ஓட்டாண்டிகளான தலிபான்களுக்கு பணத்தைக் கொட்டிய பின்லேடன், அதற்குப் பிரதிபலனாக தனது அல்கொய்தா அமைப்பின் தீவிரவாதப் பயிற்சிகளை கண்டுகொள்ளக் கூடாது என்று நிபந்தனை போட்டார். இதை தலிபான்கள் ஏற்றனர்.

அல்கொய்தா மாபெரும் தீவிரவாதப் படையாக உருவெடுத்தது. உலகெங்கும் இந்தப் படைக்கு ஆள் திரட்டினார் பின்லேடன். குறிப்பாக தீவிர அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட பாலஸ்தீன இளைஞர்களை தன் பக்கம் கொண்டு வந்தார். அவர்களை வைத்து நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தை பின்லேடன் தாக்கும் வரை அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்ததே மறந்து போயிருந்தது தான் உண்மை.

முதல் முறையாக சூடானில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போரை தொடங்கினார் பின்லேடன். வெகு விரைவிலையே உலகின் மிகப் பெரிய தீவிரவாதியாக மாறிப் போனார்.

வளர்த்த கடா மார்பில் பாயந்த கதையாக, நியூயார்க் இரட்டை கோபுரங்களை அமெரிக்காவின் விமானங்களைக் கொண்டே தாக்கி அழித்தார் பின்லேடன். இதுதான் அமெரிக்காவை கடும் கோபம் கொள்ளச் செய்து, கடைசியில் அப்போத்தாபாத் வரை விரட்டி வந்து பின்லேடனை வீழ்த்தி ஓய்ந்துள்ளது.

அதேபோல அமெரிக்காவின் இன்னொரு முக்கிய ‘நண்பர்’ சதாம் உசேன். இரக்கமற்ற சர்வாதிகாரியாக அமெரிக்காவில் வர்ணிக்கப்பட்ட சதாம், ஆரம்பத்தில் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர். ஈரான்- ஈராக் இடையே 1980 முதல் 88 வரை நடந்த எட்டு ஆண்டு காலப் போரின்போது ஈராக்குக்கு முழுத் துணையாக இருந்தது அமெரிக்கா.

1979ல் ஈரானில் நடந்த புரட்சியைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளராக திகழ்ந்து வந்த மன்னர் ஷா முகம்மது ரெஸா பஹல்வி தூக்கி எறியப்பட்டார். அயத்துல்லா கொமேனி தலைமையின் கீழ் ஈரான் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈராக்கைத் தூண்டி விட்டு போரில் குதிக்க வைத்தது.

சதாம் உசேனும், அமெரிக்கா தந்த தெம்புடன்- அதன் உள்நோக்கத்தை அறியாமல்- படு உற்சாகத்துடன் ஈரானுடன் மோதினார். இதனால் சதாமுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. ஈரானும் சரி, ஈராக்கும் சரி பொருளாதார சீர்குலைவுக்குள்ளாகி, நாசமாகப் போனதுதான் மிச்சம். இத்தனைக்கும் காரணம் அமெரிக்காவின் குள்ளநரித்தனம்.

இதே சதாம் பின்னர் அமெரிக்காவின் பரம விரோதியானார். ஈரானுடன் நடந்த போரின்போது கிடைத்த புதிய தெம்பால் நாடு பிடிக்கும் ஆசைக்குத் தள்ளப்பட்ட சதாம், 1990ல் குவைத்துக்குள் ஊடுறுவினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, சதாமைக் கண்டித்தது. ஆனால் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை.

இதன் விளைவு இரண்டு முறை ஈராக்குடன் போரில் ஈடுபட்டது அமெரிக்கா. முதல் போரில் படு துணிச்சலாக அமெரிக்காவை எதிர்த்தார் சதாம். அவரது ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறியதே உண்மை. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அமெரிக்கப் படையின் தாக்குதலில் சிக்கிப் பலியானார்கள். இந்த முறை சதாமுக்கு பக்கபலமாக இருந்தது ரஷ்யா. ரஷ்யாவின் ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவை துணிச்சலுடன் சந்தித்தார் சதாம்.

இரண்டாவது முறையாக நடந்த அமெரிக்க- ஈராக் போரின்போது சதாமின் ஆட்சி அகற்றப்பட்டது. 2003ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பதுங்கு குழியில் சதாம் பிடிபட்டார். 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அவரை தூக்கிலிட்டது அமெரிக்க ஆதரவு ஈராக் கோர்ட்.

இப்படி எத்தனையோ விஷயங்களில் அமெரிக்காவின் இரட்டை வேடம், சுயநலத்தை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

பின்லேடன் மிகப் பயங்கரமான தீவிரவாதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களில் பலரால் அமெரிக்காவுக்கு ஆபத்து இல்லை என்பதால் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது அமெரிக்கா.

இப்படித்தான் 1990களில் பின்லேடனை கண்டு கொள்ளாமல் இருந்தது!

பின்லேடனைத் தாக்க அமெரிக்கா தனது அதிநவீன எப்-117 ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை ('stealth' technology) ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தியுள்ளது

ஒசாமா பின்லேடனைத் தாக்க அமெரிக்கா தனது அதிநவீன எப்-117 ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை ('stealth' technology) ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ரேடார்களில் இருந்து தப்புவதற்காக விஷேச வடிவமும், சிறப்பு முலாமும் பூசப்பட்ட பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் வடிவத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளனர். இதுவரை இந்த மாற்றம் செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமெரிக்கா வெளியுலகுக்குக் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லேடனை தாக்க வந்தபோது ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாரால் பாதிக்கப்படவே, அதை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பிய படையினர், அதை குண்டு வீசி அழித்துள்ளனர். ஆனால், அந்த ஹெலிகாப்டர்கள் முழுமையாக சிதையவில்லை.

வால் பகுதி மட்டுமே சிதறியுள்ளது. இதனால் அந்த ஹெலிகாப்டர் முழு அளவிலேயே அப்படியே கிடந்தது. இதை பாகிஸ்தானிய படையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர். அதை அமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்கக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

ரேடார்களில் இருந்து தப்ப அந்த ஹெலிகாப்டரின் முனைகளை மேலும் கூர்மையாக்கியுள்ள அமெரிக்கா, அதன் சத்தத்தைக் குறைக்க இறக்கைகளை மேலும் சிறிதாக்கியுள்ளது.

முன்னதாக இந்தத் தாக்குதலுக்கு 4 பிளாக்ஹாக் (Blackhawk) ரக ஹெலிகாப்டர்களே பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. ஆனால், அங்கே விட்டுச் சென்ற ஹெலிகாப்டரை பார்த்தபோது, அது பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர் போலவே இல்லை.

கிட்டத்தட்ட F-117 ரக விமானத்தைப் போல காணப்பட்டது.

இந்த ஹெலிகாப்டர்கள், பாகிஸ்தானின் ரேடார்களில் மண்ணைத் தூவிவிட்டு அந்த நாட்டுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளன.

இந்த ஹெலிகாப்டர்கள், அபோடாபாத்துக்கு வந்து தங்கள் தலைக்கு மேலே பறக்கும் வரை எங்களுக்கு சத்தமே கேட்கவில்லை என்று பின்லேடனின் வீட்டுக்கு அருகில் வசிப்போர் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் வெற்றியடைய முக்கிய காரணமே இந்த ஹெலிகாப்டர்கள் என்று அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.







ஒரு தாய் சிறப்பாக வாழ ஏற்ற உலகின் முதல் நாடு நோர்வே !


உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள் யார் என்று ஆய்வு நடாத்தப்படுவதைப் போல உலகிலேயே தாய் என்பவள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உரிய நாடு எது என்ற ஆய்வை றெட்பானா அமைப்பு நடாத்தியது.
இந்த ஆய்வில் உலகில் தாய் ஒருத்தி சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற நாடு எது என்ற கேள்வியில் முதலிடத்தை நோர்வே பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை அவுஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தை ஐஸ்லாந்தும், நாலாவது இடத்தை சுவீடனும் ஐந்தாவது இடத்தை டென்மார்க்கும் ஆறாவது நியூசிலாந்து, ஏழாவது பின்லாந்தும் பெற்றுள்ளன. கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் மகிழ்ச்சியாக வாழ்வதைவிட தாய்கள் உயிரோடு வாழ்வதே பெரும் சிரமமாக உள்ளது. பெரும்பாலான தாய்மார் சிறு வயதிலேயே இறந்துவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆபிரிக்காவின் நைகர் கடைசிக்கு முதலிடம், தென்னாபிரிக்க நாடுகள் கூடுதலாக பின்தங்கியுள்ளன. இதுபோல சிறீலங்காவில் பிள்ளைகளை பறிகொடுத்து, கடத்தப்பட்டு, காணாமல்போய், விதவைகளாக்கப்பட்டு தமிழ் தாய்கள் படும் துன்பமும் தலபான்கள் நாட்டு துயரமே என்பது கவனிக்கத்தக்கது. மகிந்த சிந்தனை தாய், பிள்ளை, குடும்பம், சிறுபான்மை மக்கள் அமைதியாக வாழ ஏற்ற நாடு சிறீலங்காவா என்ற கேள்விக்கு பதில் கூற முடியுமா என்பது சந்தேகமே.

Sunday, 8 May 2011

இந்தியாவில் தாக்குதல்களை நிறைவேற்றியது ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தான் ராணுவம்

வாஷிங்டன்,
மே 8: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நிறைவேற்றியது பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு உளவு அமைப்புமான ஐ.எஸ்.ஐ.யும்தான் என்பது விக்கி லீக்ஸ் தகவலில் அம்பலமாகியுள்ளது.குவாந்தநாமோ சிறைக் கைதிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவற்றில் 779 விசாரணை அறிக்கைகளை விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது."இந்தியாவில் தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை பாகிஸ்தான் ராணுவம் தேர்வு செய்துள்ளது. பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, சிலரைக் கடத்திச் சென்றது, சிலரைக் கொன்றது போன்றவற்றை நிகழ்த்த ஐ.எஸ்.ஐ. ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளது' என்று அமெரிக்க அதிகாரிகளிடம் கைதி ஒருவர் கூறியதாக ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடைபெறுவது அமெரிக்காவுக்கு நீண்ட காலமாகவே தெரியும் என கைதிகள் பலர் கூறியுள்ளனர்.இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பலர் பாகிஸ்தானில் எவ்வாறு பயிற்சி பெற்றனர் என்பதும் விரிவாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சவூதி அரேபியா, அல்ஜீரியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதச் செயல்களுக்குத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது, இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது குறித்து குறிப்பிட்டுள்ளனர்.இந்தியாவில் இந்தியர்களைக் கொல்வதே லட்சியம் என லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அல்ஜீரியா நாட்டவரான அப்துல் அஸீயா கூறியுள்ளார்.பாகிஸ்தானிய கைதியான முகமது அன்வர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாதுக்குச் சென்று அங்கு 1998-ல் 21 நாள்கள் பயிற்சி பெற்றுள்ளார். இவர் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளார்.முகமது அன்வர் ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.காஷ்மீரிலும், ஆப்கானிஸ்தானிலும் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள ஆப்கனைச் சேர்ந்தவரும், ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடையவருமான சமன் குல் என்பவர், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் மஸ்த் குல் என்பவரைப் பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாதில் இருந்துகொண்டே காஷ்மீரில் நடக்கும் எல்லா கொரில்லா நடவடிக்கைகளையும் மஸ்த் குல்தான் ஒருங்கிணைத்தார் என சமன் குல் குறிப்பிட்டுள்ளார்.மேற்கத்திய நாடுகளில் இந்தியர்களை அதிகம் சோதனைக்கு உள்ளாக்குவதில்லை. எனவே, பயங்கரவாதச் செயல்களில் இந்தியர்கள் அதிகம் பேரை ஈடுபடுத்த வேண்டும் என அல் காய்தா தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் என்று மற்றோர் அறிக்கை குறிப்பிடுகிறது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்கு வெகு அருகிலேயே வசித்து வந்த பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இப்போது வெளியாகியுள்ள விக்கி லீக்ஸ் தகவல்கள் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் உறுதுணையாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Saturday, 7 May 2011

தண்ணீர்-உணவுப் பற்றாக்குறை அபாயம்: மத்திய திட்டக்குழுவுக்கு கருணாநிதி கோரிக்கை

"தண்ணீர், உணவுப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும்' என்று மத்திய திட்டக்குழுவுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:உலகத்தின் மக்கள் தொகை அடுத்த நூற்றாண்டில் ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் 50 ஆண்டுகளில் அதாவது 2060-ல் 170 கோடியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டில் 2030-ல் தண்ணீர், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், பெரும்பாலான தண்ணீர், உணவு உற்பத்திக்குப் பயன்படுத்துவதால் தண்ணீர் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறையிலும் எதிரொலிக்கும் என்றும், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும் என்றும், சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.மக்கள் தொகை குறித்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கையையும், தண்ணீர், உணவுப் பற்றாக்குறை குறித்து சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும் கவலை ஏற்படுகிறது. இந்த கணிப்புகளையெல்லாம் மத்திய திட்டக்குழு முன்னெச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை முன் கூட்டியே மேற்கொள்ளும் என நம்புகிறேன்.

Friday, 6 May 2011

அமெரிக்கப் படைகளைக் குறைக்க பாகிஸ்தான் முடிவு

இஸ்லாமாபாத், மே 6: ஒசாமா பின்லேடனை ரகசியத் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொன்றுவிட்ட நிலையில், தங்கள் நாட்டுக்குள் இருக்கும் அமெரிக்கப் படைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.இதுபோன்ற தன்னிச்சையான தாக்குதலை அமெரிக்கா இன்னொருமுறை நடத்த முயன்றால் அந்த நாட்டுடனான உறவை மறுபரிசீலனை செய்யவும் தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி அறிவித்திருப்பதாகவும் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தானின் 138-வது படைக் குழுக்களின் கூட்டம் ராவல் பிண்டி ராணுவத் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. தளபதி கயானி தலைமையில் நடந்த இந்தக் கூட்டம், அபோட்டாபாத்தில் அமெரிக்க கமாண்டோக்கள் ஊடுருவி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற விவகாரம் பற்றி விவாதிப்பதற்காகவே நடத்தப்பட்டது.அமெரிக்காவுடனான ராணுவ உறவு, பின் லேடன் கொல்லப்பட்டது, அதற்காக அமெரிக்க கமாண்டோக்கள் ரகசியமாக ஊடுருவியது, அவற்றால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இது போன்ற தாக்குதல்கள் பாகிஸ்தானின் இறையாண்மையைப் பாதிக்கும் என்று கூறிய கயானி, மீண்டும் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்காவுடனான ராணுவ, உளவு சார்ந்த ஒத்துழைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார்.குறைந்தபட்சமாக, இப்போதைக்கு பாகிஸ்தானில் அமெரிக்கா ராணுவ நடமாட்டத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று படைப்பிரிவுத் தளபதிகளை அவர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. ஒசாமா பின்லேடன் வீட்டைத் தாக்கியது போல பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைகள், மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கயானி பேசியிருக்கிறார். குடியிருப்புப் பகுதிகளைத் தாக்குவது போன்று எளிதாகத் தாக்கும் அளவுக்கு நமது பாதுகாப்பு நிலைகள் இல்லை. அவற்றுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்றும் கயானி கூறியதாக அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.இந்தியாவுக்கு... தங்களாலும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த முடியும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியிருப்பதும் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதம் நடந்தது. இதைக் குறிப்பிட்ட கயானி, அப்படி ஏதாவது சாகசம் செய்ய நினைத்தால் கடுமையான பதிலடி தரப்படும் என்றார்.அமெரிக்கா கருத்து: அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது பாகிஸ்தானே என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.அல்காய்தா எச்சரிக்கை: பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து 5 நாள்கள் ஆன நிலையில், இந்தத் தகவலை அல்-காய்தா அமைப்பு வெள்ளிக்கிழமை உறுதி செய்திருக்கிறது. பின் லேடன் சிந்திய ரத்தம் வீணாகப் போகாது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மீதான தாக்குதல் தொடரும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறது.

Tuesday, 3 May 2011

சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்?

ரஷியாவின் பனி படர்ந்த சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உறை பனிக்குள் ஒரு வேற்று கிரகவாசியின் இறந்த உடல் கிடந்ததாகவும், அதை 2 பேர் பார்த்ததாகவும் பரவிய செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ இண்டர்நெட்டில் சக்கை போடு போட்டு வருகிறது.

2 அடி உயரமே உள்ள அந்த உடல் பாதி எரிந்து, அழுகிய நிலையில் காணப்படுவதாகவும், அதன் வாய் திறந்தபடி உள்ளதாகவும், அதன் வலது காலை காணவில்லை. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆழமான குழிகள் தான் உள்ளதாகவும் இருவரும் கூறியதாக அந்த வீடியோ தெரிவிக்கிறது.
இந்த அயல் கிரகவாசி விபத்தில் இறந்து போய் இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இது உடல் அல்ல. ஏதோ ஒரு ரப்பர் பொம்மை. அதை கொஞ்சம் சிதைத்து பனிக்குள் புதைத்து வைத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு பீதியைக் கிளப்புகின்றனர் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இதே இர்குட்ஸ்க் பகுதியில் தான் கடந்த மாதம் வேற்று கிரக விண்கலம் ஒன்று தரையிறங்கியதாகவும் பரபரப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இறந்தது பின்லேடன் தான்-உறுதி செய்ய உதவிய இறந்து போன சகோதரியின் டிஎன்ஏ!

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுவிலிருந்த டிஎன்ஏவை, இறந்து போன அவரது சகோதரியின் மூளை திசுவிலிருந்து எடுத்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அது பின் லேடன் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது சிஐஏ.

 

நியூயார்க்கில் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு உலகம் முழுதும் வசித்து வரும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்களை பட்டியல் எடுத்து, அவர்களில் பெரும்பாலானவர்களின் ரத்த மாதிரியையும் திசுக்களையும் எடுத்து டிஎன்ஏ ‘சிக்னேச்சரையும்’ பதிவு செய்து வைத்துவிட்டது.
வழக்கமாக ஒரு நபரின் டிஎன்ஏ அவரது பெற்றோர் அல்லது குழந்தையின் டிஎன்ஏவோடு 50 சதவீதம் தான் ஒத்து இருக்கும். இன்னொரு 50 சதவீத டிஎன்ஏ அவருக்கே உரிய தனித்துவத்துடன் இருக்கும்.
இதனால் டிஎன்ஏ மேட்சிங் செய்யும்போது ஏற்படும் குறையைக் கலைய, பெற்றோர், குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவுகளின் டிஎன்ஏக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இதன்மூலம் குறையை (error) கலைய முடியும்.
இதற்காக கடந்த 10 ஆண்டுகளாகவே பின்லேடனின் பல உறவினர்களிடமும் சிஐஏ டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வந்தது.
ஆனால், பின்லேடனுக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை. அவரது சகோதரர்கள், சகோதரிகள் அனைவருமே ஒன்றுவிட்ட சகோதரிகள் அல்லது சகோதரர்கள் தான் (siblings). இவர்களில் பெரும்பாலானவர்கள், பின்லேடன் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பியவுடனேயே அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டவர்கள்.
இதில் ஒரு சகோதரி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் மசாசூசெட்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானவுடன், அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்ற உதவியோடு, அந்தப் பெண்ணின் மூளையில் இருந்து திசுக்களில் இருந்து டிஎன்ஏ மாதிரியை எடுத்து வைத்திருந்தனர்.
பின்லேடன் கொல்லப்பட்டவுடன், அவரது உடலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவை அவரது இந்த உறவினர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவோடு ஒப்பிட்டபோது 99.9 சதவீதம் இது பின்லேடன் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தவிர பாகிஸ்தானில் பிடிபட்ட பின்லேடனின் இரு மனைவிகளிடமும் அவரது உடலை அமெரிக்கப் படையினர் காட்டி, அது பின்லேடன் தான் என்று உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக டிஎன்ஏ மேட்சிங் செய்ய 14 நாட்கள் வரை ஆகும். ஆனால், கடந்த ஆண்டு அரிசோனா பல்கலைக்கழகத்தின் நுண்ணியிரியல் பிரிவு ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தது. 2 மணி நேரத்தில் டிஎன்ஏ மேட்சிங் செய்யும் அந்த அதிநவீன கருவியை சிஐஏ, ஆப்கானில்தானில் தயார் நிலையில் வைத்திருந்தது.
பின்லேடனின் உடலை அங்கு கொண்டு சென்று டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டு, இது 99.9 சதவீதம் பின்லேடன் தான் என்று தகவல் தரப்பட்ட பின்னரே தொலைக்காட்சிகள் முன் தோன்றி அவர் கொல்லப்பட்டதை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
ஆனாலும் மிச்சமுள்ள 0.1 சதவீத சந்தேகத்தை வைத்து இது பின்லேடன் இல்லை என்று வாதிடுவோர் நிச்சயம் இருக்கத் தான் செய்வார்கள் என்கிறார், டிஎன்ஏ ஆராய்ச்சியாளரான கி்ட் ஏடன்.

பாகிஸ்தான் ராடார்களை ஏமாற்றிய அமெரிக்கா

நேற்று (02) அதிகாலை பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள அபோடாபாத் பகுதியில் வைத்து அல்கைடா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட சிறப்பு படை நடவடிக்கையில் அமெரிக்க கடற்படையின் சீல் (SEAL) கடற்படை கொமோண்டோக்கள் பங்கெடுத்ததாக அமெரிக்க படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கான் தளம் ஒன்றில் இருந்து இரண்டு உலங்குவானூர்திகளில் புறப்பட்ட 40 சீல் சிறப்புப்படை கொமோண்டோக்களே இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கையின் தகவல்கள் வெளியில் தெரியாது இருப்பதற்காக ஆப்கானில் இருந்து புறப்பட்ட உலங்குவானூர்திகள் பாகிஸ்தான் இராணுவத்தினரின் ரடார் திரைகளில் சிக்காது மிகவும் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளன.
நள்ளிரவு 12.55 மணியளவில் பின்லாடன் தங்கியிருந்த மூன்று மாடி கட்டிடத்தின் கூரையில் கொமோண்டோக்களை உலங்குவானூர்திகள் தரையிறக்கியபோது, கூரையில் காவல் கடமையில் இருந்த அல்கைடா உறுப்பினர்கள் மேற்கொண்ட தாக்குதலில் உலங்குவானூர்தி ஒன்று சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த உலங்குவானூர்தியை தரையில் கைவிட்ட கொமோண்டோக்கள் மிக வேகமாக தமது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். வீழ்ந்த உலங்குவானூர்தி 14 அடி உயர மதிலில் தொங்கி கிடப்பதை காணக்கூடியதாக உள்ளது.
கூரையில் இருந்த அல்கைடா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், கொமோண்டோக்கள் மிக விரைவாக கட்டிடத்தின் அறைகளுக்குள் புகுந்து கொண்டனர்.
பல அறைகளைக்கொண்ட அந்த கட்டிடத்தொகுதியின் ஒரு அறைக்குள் புகுந்த கொமோண்டோ வீரர் ஒருவர் ஒசாமாவை அடையாளம் கண்டுகொண்டார். அது ஒசாமாவின் படுக்கை அறை.
முதலில் சரணடையுமாறு உத்தரவுகளை பிறப்பித்த கொமோண்டோ படை வீரர், ஒசாமா சரணடைய மறுத்து ஆயுதத்தை தேடியபோது, அவரின் தலையில் இரு தடவைகைள் சுட்டுள்ளார்.
எனினும் ஒசாமாவை கட்டாயம் கைது செய்யவேண்டும் என்ற திட்டம் அமெரிக்காவிடம் இருக்கவில்லை. ஏனெனில் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் ஒசாமாவை அமெரிக்கா தப்பிக்க விட்டிருந்தது.
அவரை உயிருடன் பிடிப்பதற்கு முயன்றபோதே அவர் தப்பிச் சென்றிருந்தார். எனவே இந்த தடவை அவரை பிடிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என அமெரிக்க கொமோண்டோக்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கிய பின்லாடன், 1989 களுக்கு முன்னர் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத்திற்கு பெரும் தலையிடியாக விளங்கியிருந்தார்.
சவுதி அரேபியாவில் மிகவும் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த அவர் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர் என அப்துல் பரிஸ்ஹான் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார். “அல்கைடாவின் இரகசிய வரலாறு” என்ற புத்தகத்தை பரிஸ்ஹான் எழுதியிருந்தார்.
ஆப்கான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இரு பெரும் போர்களை ஏற்படுத்திய பின்லாடன், 4,000 அமெரிக்கப் படையினரினதும், 300 பிரித்தானியா படையினரினதும் மரணத்திற்கும், பல பில்லியன் டொலர் செலவுக்கும் காரணமானவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்காவுக்கு எதிராக பின்லாடன் மேற்கொண்ட நேரடியான தாக்குதல்கள் மூன்று.
• நைரோபில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான குண்டுத்தாக்குதல் (1998) – 244 பேர் பலி.
• யேமன் கடற்பகுதியில் தரித்து நின்ற யூ எஸ் எஸ் கோல் என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல் மீதான தாக்குதல் (2000) – 17 ஈரூடக்ப்படையினர் பலி.
• அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்ரகன் மீதான தாக்குதல் (2001) – 3,000 இற்கு மேற்பட்டவர்கள் பலி.
இதனிடையே, பாகிஸ்தான் அரசுக்கு தெரியாது பின்லாடன் பாகிஸ்தான் தலைநகரத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள நகரத்தில் தங்கியிருக்க முடியாது எனவும், பின்லாடன் தங்கியிருந்த வீட்டுக்கு அண்மையில் பாகிஸ்தான் இராணுவ பயிற்றிக் கல்லூரி இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவல்களை இந்திய ஊடகங்கள் முதன்மைப்படுத்தியபோதும், அதனை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயரும், அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டனும் மறுத்துள்ளனர்.
அல்கைடாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் 30,000 மக்களையும், 5,000 படையினரையும் இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதும், தனது தொழில்நுட்டபத்தின் உதவியுடன், பின்லாடனின் இருப்பிடத்தை அறிந்து அவர் மீதான நடவடிக்கைகயை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ள அமெரிக்க, உலகின் இராணுவ வலிமைமிக்க நாடாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மரபுவழிப் படையணியுடன் மோதுவது இலகுவானது. ஆனால் ஒரு சில தனிப்பட்ட நபர்களை தேடுவது என்பது ஒரு வைக்கோல் கும்பலுக்குள் ஒரு வைக்கோலை தேடுவது போன்றது.
ஆனாலும் அமெரிக்கா அதில் வெற்றிகண்டுள்ளது, மேற்குலகத்தின் செல்iவாக்கையும், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போகும அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் செல்வாக்கையும் இந்த நடவடிக்கை உயர்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

ஒசாமாவை கொன்றது யார் ?

 அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின் லேடனை அவரது பாதுகாவலரே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் "த டான்" ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் தங்கியிருந்த பின்லேடன், அமெரிக்கப் படையினர் தம்மை நெருங்கிவிட்டதை அறிந்து, அவர்களிடம் பிடிபடாமல் இருக்க, தமது பாதுகாவலர் ஒருவரையே சுட்டுக் கொல்லுமாறு கேட்டிருக்கலாம் என்றும், அவரது விருப்பப்படி பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டுக் கொன்றிருக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் இத்தகவலை தெரிவித்ததாக அந்த ஏடு கூறியுள்ளது.

ஒன்று அல்லது இரண்டு குண்டுகளில் பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், "தப்பிச் செல்வதற்காக பதிலடி தாக்குதல் இருக்கும்போது இவ்வளவு அருகில் இருந்து பின்லேடனை சுட்டிருக்க முடியுமா?" என்றும் அந்த அதிகாரி கேள்வி எழுப்பியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை வீடியோ மூலம் நேரடியாகப் பார்த்த ஒபாமா!

வாஷிங்டன்: அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவர் மட்டுமல்லாமல் ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.


ஒபாமா, ஹில்லாரி தவிர துணை அதிபர் ஜோ பிடனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அவர்கள் பார்த்துள்ளனர். பின்லேடனை சுட்டு வீழ்த்திய வீரர்களில் ஒருவரது ஹெல்மட்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த வீடியோ காமரா மூலம் இந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகி அதைத்தான் ஒபாமா குழுவினர் பார்த்துள்ளனர்.

பின்லேடனை இடது கண்ணில் அமெரிக்க வீரர் சுட்டுத் தள்ளியதை நேரில் பார்த்துள்ளார் ஒபாமா. அவ்வாறு சுட்டதும் பின்லேடன் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வீரர் மீண்டும் பின்லேடனின் இடதுபுற நெஞ்சில் சுட்டு மரணத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த வீடியோவில், பின்லேடனை அவரது மனைவி காப்பாற்ற முயற்சித்து பின்லேடனுக்கு முன்னால் வந்து நிற்பது போன்ற காட்சியும் இருப்பதாக தெரிகிறது.

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பின்லேடன் பாதுகாவலர்கள்:

ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஹெலிகாப்டர்களில் சென்ற அமெரிக்கக் கடற்படை சீல்கள் பிரிவைச் (Navy Seal Team-6) சேர்ந்த கமாண்டோக்கள் தான் இந்த ஆபரேசனை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால், இந்த 4 ஹெலிகாப்டர்கள் தவிர மேலும் ஏராளமான போர் விமானங்களும், கனரக ஆயுதம் ஏந்திச் செல்லும் சரக்கு விமானங்களும், மேலும் ஏராளமான வீரர்களைக் கொண்ட சி-15 ரக விமானங்களும், ஆளில்லா உளவு விமானங்களும், ராக்கெட்களை வீசக் கூடிய AC-13 ரக ஹெலிகாப்டர்களும், CH-47, UH-60 ரக ஹெலிகாப்டகள் பலவும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.

சீல்கள் வந்த நான்கு CH-47 ஹெலிகாப்டர்களில் ஒன்றை பின்லேடனின் பாதுகாவலர்கள் சுட்டு வீழ்த்தியதும் உறுதியாகியுள்ளது. ஆனால், அது எந்திரக் கோளாரால் செயலிழந்ததால் தாங்களே அதை குண்டுவீசி அழித்துவிட்டதாகவும், அமெரிக்கத் தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் சில அமெரிக்க வீரர்கள் காயமோ அல்லது உயிரிழந்திருக்கவோ வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை 7,000 கி.மீ. தொலைவில் இருந்தபடி ஒபாமாவும் அவரது டீமும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

பின்லேடன் மரணத்தில் புதிய சர்ச்சை

மே.3,
: பாகிஸ்தானில் அல் காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டதால் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அவர் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் எங்கே என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி இணையதளங்களில் வெளியான உடன் டிவிட்டர், பேஸ்புக் இணையதளங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பின்லேடனின் உடல் இருந்த புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் பின்லேடனின் முகத்தில் ரத்தக்கறைகள் இருந்தன.எனினும் அந்த புகைப்படம் போலியானது என்பதை பின்லேடனின் பழைய புகைப்படம் ஒன்று நிரூபித்துள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.எனவே பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் என்ன என்று தற்போது சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா வரை பின்லேடனின் மரணத்தில் சந்தேகம் உள்ளவர்கள் அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவில்லை.என்னுடைய கண்களால் நான் பார்க்கும்வரை அதை நம்பமுடியாது. சதாம் உசேனைப் போன்று அவரது உடலைப் பார்க்கும்வரை அதை நம்பமுடியாது என மேரிகிளேஜரவுட் என்பவர் தெரிவித்தார்.நியுயார்க் நகரில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர் இடிபாடுகளை அகற்ற உதவிய தீயணைப்பு வீரர்களில் ஒருவரின் மகனான எரிக் சோலோசிர் என்பவர் கூறுகையில், பின்லேடனின் மரணம் அவருக்கு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதால் அவர் அதை விரும்புவார் எனக் கருதினேன். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை என்றார்.அவர்கள் விடியோவை அளித்திருக்க வேண்டும். அது கொடூரமாக இருந்தாலும் நாம் பார்த்து நம்ப முடியும் என அவர் கூறினார்.பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் சீனியர் ஒருவர், பின்லேடனின் மரணம் அல் காய்தாவுக்கு பின்னடைவாக இருந்தாலும், அதை நம்புவதற்கு கடினமாக உள்ளது என்றார்.எனினும் பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது 99.9 சதவீதம் நிச்சயமானது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்லேடனின் டிஎன்ஏ டெஸ்ட் அவரது உறவினர்கள் பலரது டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது என அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மிகவும் கொடூரமாக இருப்பதால்தான் பின்லேடன் மரணம் தொடர்பான காட்சிகள் வெளியிடப்படவில்லை என சில தகவல்கள் கூறுகின்றன. சதாம் உசேன் மகன்கள் இறந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சில மாற்றங்கள் செய்து அமெரிக்க அரசு வெளியிட்டது. அதுபோல் இப்போதும் மாற்றப்பட்ட வடிவத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர்.பின்லேடன் மரணம் தொடர்பான காட்சிகள் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் அதைப் பார்த்தால் மட்டுமே அவரது மரணம் தொடர்பான சர்ச்சைகள் விலகும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமெரிக்க போர் விமான ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததால் சர்ச்சை



இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கான போர் விமான ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.
இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் ராபர்ட் பிளேக் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இரண்டு விமான நிறுவனங்களான போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகியவற்றுக்கு போர் விமானங்களுக்கான ஆர்டர் வழங்கப்படவில்லை. ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இவ்விரு நிறுவனங்களுக்கு வழங்கப்படாதது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோத்தி ரோமரும் இதனால் தான் தனது தூதர் பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவுத்துறை பொறுப்பை வகிக்கும் இணையமைச்சர் ராபர்ட் பிளேக் இத்தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளிடையிலான பேச்சு வார்த்தை திட்டமிட்டபடி ஜூலை மாதம் நடைபெறும் என்றும் இந்த பேச்சுவார்த்தைக்கு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தலைமை வகிப்பார் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளிடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து விரிவாக பேசப்படும்.
அமெரிக்க நிறுவனம் இப்போது தான் முதல் முறையாக இந்தியாவுக்கு ராணுவ விமானங்களை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை அளித்தன. ஆனால் அது எந்த காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என்ற விவரம் தங்களுக்குத் தெரியவில்லை. இது தொடர்பான விரிவான அறிக்கை கிடைத்த பிறகே இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்று பிளேக் தெரிவித்தார்.
குறுகிய கால நோக்கில் எடுக்கப்பட்ட முடிவால் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதாக பிளேக் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த முடிவால் இரு நாடுகளிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்று ஹெரிடேஜ் அறக்கட்டளையைச் சேர்ந்த லிஸ் கர்டிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
விமானம் மட்டும் தான் இந்தியாவுக்குத் தேவை என்றால் அமெரிக்காவுடனான உறவு எதற்கு? என்று அவர் கேள்வியெழுப்பினார். இந்தியாவுக்காக எந்த அளவுக்கு அமெரிக்கா பணிந்து போக வேண்டும் என்ற கேள்வி எழுவதாக சர்வதேச சமாதானத்துக்கான கார்னேஜ் அறக்கட்டளையின் ஆஷ்லி டெல்லிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆனால் இந்த கேள்விக்கணைகளை முற்றிலுமாக ஏற்க மறுத்த பிளேக், இந்தியாவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும் இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம் தொடரும் என்று அவர் கூறினார். ராணுவ ஒத்துழைப்பில் இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பல பணிகள் உள்ளன. இரு நாடுகளுமே சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்ட பாடுபடுவதால் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவதற்கு அமெரிக்க அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஒத்துழைப்பு அளிப்பது, மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான டேவிட் கோல்மென் ஹெட்லீயிடம் விசாரணை நடத்தி தகவல்களை அளிப்பது உள்ளிட்ட பணிகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசுவதற்கு ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை வழிவகுக்கும் என்றார். இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 2010ம் ஆண்டு 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து சி 130ஜே மற்றும் சி17 ரக விமானங்களையும் லாக்ஹீட் விமான நிறுவனத்திடமிருந்து பி 8 கண்காணிப்பு விமானங்களையும் வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டன.

Monday, 2 May 2011

பின்லேடன் இடத்தில் ஜவாஹரி?

அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அவரது இடத்திற்கு எகிப்தில் பிறந்த மருத்துவரான அய்மன் அல்-ஜவாஹரி என்பவர் பொறுப்பேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்லேடன் மற்றும் அவரது அல் காய்தா வலையமைப்பின் மூளையாகச் செயல்பட்டவர் ஜவாஹரி. அல் காய்தாவின் விடியோ செய்திகளில்அமெரிக்காவையும், அதன் கூட்டாளிகளையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தவர் ஜவாஹரி.

கடந்த மாதம் லிபியாவில் நேட்டோ படைகளையும், அமெரிக்கப் படைகளையும் எதிர்த்து போரிடுமாறு இஸ்லாமியர்களை அவர் வலியுறுத்தியிருந்தார்.

அமெரிக்காவில் செப்டம்பர் 11-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் 2001 இறுதியில் ஆப்கனில் தாலிபான் அரசை அமெரிக்கப் படைகள் வீழ்த்தியபோது பின்லேடனும், ஜவாஹரியும் அங்கிருந்து தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க

ஒசாமாவை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தது எப்படி?

வாஷிங்டன்:
ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை.

அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒசாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம்.

இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்த ஒசாமா நிச்சயம் பாகிஸ்தானுக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தானுக்குள் ஒசாமாவைத் தேடும் பணியை தீவிரமாக்கியது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தான் ஒசாமாவை பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறது என்று தெரிய வந்தாலும், அதை பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மறுத்தே வந்ததால், கெஞ்சிப் பார்த்து ஓய்ந்து போன அமெரிக்கா, பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரட்டவும் ஆரம்பித்தது.

லிபியாவுக்குள் குண்டுவீசி அந் நாட்டு அதிபர் கடாபிக்கே குறி வைக்க ஆரம்பித்துள்ள அமெரிக்கா, இதே நிலைமை உங்களுக்கும் விரைவில் ஏற்படும் என்றும் மிரட்டியதையடுத்து ஒசாமா குறித்த சில தகவல்களை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தந்ததாகத் தெரிகிறது.

இந்த தகவல்களை முன் வைத்து சிஐஏ நடத்திய மாபெரும் உளவு-தேடுதல் வேட்டையில் தான் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கிடைத்த தகவல்களை வைத்து ஒசாமாவின் வளையத்துக்குள் உள்ள சிலரை அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்தது. இந்த வளையத்தில் சில சிஐஏ பிரிவினரையும் ஊடுருவ வைத்தது.

அவர்கள் மூலம் ஒசாமாவுக்கு கடிதங்கள் எடுத்துச் செல்லும் நபரை அடையாளம் கண்டது சிபிஐ. ஒசாமாவுக்கான அந்தக் கடிதங்கள் புனைப் பெயர்களில் செல்வதை அமெரிக்கா கண்டுபிடித்தது.

இந்த நபர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்போடாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதை கடந்த ஜனவரியிலேயே சிஐஏ கண்டுபிடித்தது.

அந்த நபரிடம் விசாரணை நடத்தினால் கூட ஒசாமா அலர்ட் ஆகிவிடுவார் என்பதால், அவரிடம் எந்தவித பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளவில்லை அமெரிக்கா.

அந்த நபர் வசித்த வீடு 18 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட 3 மாடிகள் கொண்ட வீடாகும். அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே அமெரிக்காவின் சந்தேகம் மேலும் வலுத்தது. அப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளை விட 8 மடங்கு மிக அதிகமான பரப்பளவில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் 2005ம் ஆண்டில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பல கோடி மதி்ப்புடைய அந்த வீட்டின் தொலைபேசி எண்ணை அறிய அமெரிக்க உளவுப் பிரிவினர் முயன்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் தொலைபேசியே இல்லை. மிகப் பெரிய பங்களாவில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லாதது ஏன் என்ற சந்தேகம் வரவே, அந்த வீட்டில் இண்டர்நெட் இணைப்பாவது இருக்கிறதா என்று விசாரித்தபோது அதுவும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டினர் குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல், தங்களது காம்பவுண்டுக்குள்ளேயே எரித்து வந்ததையும் அமெரிக்க உளவுப் பிரிவினர் பல மாதங்களாக கண்காணித்தனர்.

அந்த வீட்டில் கடிதங்கள் கொண்டு சென்ற நபரும் அவரது சகோதரரின் குடும்பங்கள் தவிர இன்னொரு குடும்பமும் இருப்பதும் தெரியவந்தது. அந்தக் குடும்பம் பின் லேடனின் குடும்பம் என்ற முடிவுக்கு வந்த சிஐஏ, இந்த வீட்டை சோதனையிடுவது குறித்து முடிவு செய்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தலைமையில் 5 உயர் மட்டக் கூட்டங்களும் நடந்தன.

அதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்குத் தெரிந்துவிடாமல் இந்த ஆபரேசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு தகவல் கிடைத்தால் ஒசாமாவை காப்பாற்றிவிடுவார்கள் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இதனால் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் கூட, இந்த ஆபரேசனை நாமே நடத்தி முடிப்பது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இந்த வீட்டில் ஒசாமா தனது இளைய மனைவியோடு இருப்பதை அப்போடாபாத் நகரிலேயே முகாமிட்டிருந்த சிஐஏவின் உளவாளிகள் மீண்டும் திட்டவட்டமாக கடந்த வாரம் உறுதிப்படுத்தவே, அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்த கடந்த வெள்ளிக்கிழமை ஒபாமா அனுமதி தந்தார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 1.20 மணியளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து சில ஹெலிகாப்டர்களில் கிளம்பிய அமெரிக்கப் படையினரும், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கிளம்பிய ஒரு படையும் இந்த வீட்டை முற்றுகையிட்டன.

மிகச் சிறிய அளவிலான இந்தப் படை தனது பயங்கர தாக்குதலைத் தொடங்க, ஒசாமா பின் லேடனின் பாதுகாவலர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந் நிலையி்ல் ஒசாமா பின் லேடனே நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதியுள்ளார்.

இதில் உடல் துளைக்கப்பட்டு ஒசாமா பின் லேடன் அந்த இடத்திலேயே பலியானார். இதில் ஒரு குண்டு ஒசாமாவின் கண்ணை துளைத்துக் கொண்டு மூளையை சிதறடித்தது. அவருடன் அவரது மகன், ஒரு பெண் உள்பட 5 பேரும் பலியாயினர்.

40 நிமிடத்தில் இந்த ஆபரேசனை முடித்துவிட்டு ஒசாமாவின் உடலை தூக்கிக் கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கிளம்பின.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக மற்ற ஹெலிகாப்டர்கள் குண்டுவீசித் தகர்த்துவிட்டு, ஒசாமாவின் உடலோடு பறந்தன.

இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தப் படை என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. ஆனாலும் U.S. Navy SEALs அதிரடிப் படை தான் இந்த ஆபரேசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இறந்தது ஒசாமா தானா என்பதை facial recognition மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

சிஐஏ ஏஜென்ட்டாக ஒசாமா பின் லேடன்

ஜோர்ஜ் புஷ் அதிபராக இருந்த காலத்தில் அவரால் சிஐஏ ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டவர்தான் ஒசாமா பின் லேடன். இது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

லிதுவேனியாவைச் சேர்ந்த எழுத்தாளர் காஸ்ட்ரோவை சந்தித்தார். அப்போது உடன் இருந்த பத்திரிக்கையாளர்களிடம் காஸ்ட்ரோ பேசுகையில்,

சிஐஏவால் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டவர்தான் பின் லேடன். ஜோர்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது அவருக்கு சாதகமாக நடந்து கொள்ளவே பின் லேடனை விலைக்கு வாங்கியது சிஐஏ. உலகம் முழுவதையும் பயமுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் புஷ்ஷின் பிரதான எண்ணம். அதற்கு வசதியாக அவர்கள் லேடனை பயன்படுத்திக் கொண்டார்.

தான் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பதை பின்லேடன் அறிவிப்பார். அவரைத் தொடர்ந்து புஷ் எச்சரிக்கும் வகையில் பேசுவார். இரண்டுமே திட்டமிட்ட நாடகங்கள். புஷ்ஷுக்கு எப்போதுமே ஆதரவாக இருந்தவர் லேடன். புஷ்ஷுக்குக் கீழ்ப்பட்டவராகவே அவர் இருந்து வந்தார்.

லேடன் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்பது ஆப்கன் போர் ரகசியம் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன என்றார் காஸ்ட்ரோ.

84 வயதாகும் காஸ்ட்ரோ சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். தற்போது அவர் நலமடைந்து செய்தியாளர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிக்களுக்கும் போக ஆரம்பித்துள்ளார். வழக்கமான முறையில் செயல்பட ஆரம்பித்தது முதல் பரபரப்பு பேச்சாக பேசி வருகிறார் காஸ்ட்ரோ.

ஈரானை அமெரிக்கா தாக்கினால் அணு ஆயுத யுத்தம் வரும் என்று சமீபத்தில் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஒசாமா பின்லேடன்,அமெரிக்காவின் ஏஜென்ட் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒசாமா ‌பி‌ன்ல‌ேட‌ன் கொல்லப்பட்டார்: அமெ‌ரி‌க்கா அ‌றி‌வி‌ப்பு

அல் கய்தஇயக்கத்தினநிறுவனருமஅதனதலைவருமாபின்லேடனகொல்லப்பட்டதாி.பிசி தெரிவித்துள்ளது.




அமெரிக்காவினமீது 2001 செப்டம்பர் 11ஆமதேதி நடத்தப்பட்இரட்டகோபுரததாக்குதலஉள்பபல்வேறதாக்குதல்களுக்ககாரணமாஅ‌லக‌ய்ததலைவ‌ரஒசாமபின்லேடன் அமெரிக்காவால் தேடுதலகு‌ற்றவா‌ளிக‌‌ளபட்டியலிலமுதலஇடத்தில் இரு‌ந்தவ‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஅல் கய்தஇயக்கத்தினநிறுவனருமஅதனதலைவருமாபின்லேடன் அமெரிக்கா படைகள் எடுத்த நடவடிக்கையில் கொல்லப்பட்டதாபிபிசி தெரிவித்துள்ளது.

அமெரிக்செய்தி நிறுவனங்களமேற்கோளகாட்டி பி.ி.ி இவ்வாறஅறிவித்துள்ளது.

அமெரிக்காவினதேடுதலின்போது, பின்லேடனினஉடலகண்டெடுக்கப்பட்டதாகவும், அமெரிக்அதிபரபராகஒபாமசற்றநேரத்திலஇந்தசசெய்தியஅதிகாரபூர்வமாஅறிவிப்பாரஎன்றுமசெய்திகளதெரிவிக்கின்றன.