Total Pageviews

Blog Archive

Saturday, 24 September 2011

மனிதர்களுக்கு ஆபத்து நீங்கியது பசிபிக் கடலில் விழுந்தது செயலிழந்த செயற்கைக்கோள்

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக் கோள் ஒன்று செயலிழந்து பூமியை நோக்கி வந்தது. அது நேற்று காலை பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1991ம் ஆண்டு Ôஅப்பர் அட்மாஸ்பியர் ரிசர்ச் சேட்டிலைட்Õ (யுஏஆர்எஸ்) என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. ரூ.3,525 கோடி செலவில் அனுப்பப்பட்ட அந்த செயற்கைக் கோள் ஓசோன் படலம் மற்றும் பூமியின் வளி மண்டலத்தைப் பற்றி ஆராய்ந்து வந்தது. இது நாசா விஞ்ஞானிகளால் கடந்த 2005ம் ஆண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. அதன் பிறகு அது பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
6,000 கிலோ எடை கொண்ட, பஸ் அளவிலான அந்த செயற்கைக்கோள் நேற்று முன்தினம் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஒரு நாள் முன்னதாகவோ அல்லது பின்போ வரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். 
பூமியின் தட்பவெப்ப நிலைக்குள் நுழைந்தவுடன் செயற்கைக்கோள் 26 பெரிய துண்டுகளாக உடையும். பூமியின் 75 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள கடல் பகுதியில் விழுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. தவறினால் வடக்கு கனடாவுக்கும் தென்அமெரிக்காவின் தென்பகுதிக்கும் இடையில் பூமியின் மீது விழும் அபாயமும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
பூமியில் விழுந்தால் 3,200ல் ஒரு பங்கு மனிதர்கள் மீது விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தனர். எனினும், யுஏஆர்எஸ் செயற்கைக்கோள் நேற்று அதிகாலையில் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும் அதனால், மனிதர்களுக்கு அபாயம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்தனர்.