Total Pageviews

Blog Archive

Saturday, 24 September 2011

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மேலும் நெருக்கடி

பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தாலிபான்களின் ஹக்கானி அமைப்புடனான தொடர்புகளை துண்டிக்கவேண்டும் என்றும் அதன் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என்றும் அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.

"பாகிஸ்தான் அரசு தாலிபான் அமைப்பான ஹக்கானி குழுவுடன் தங்களது தொடர்புகளை துண்டிப்பதும், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதும் அவசியம் இதன் மூலம் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள அச்சுறுத்தலை நீக்குவது உறுதி செய்யப்படுவது அவசியம்" என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜேய் கார்னி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காபூலில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அமெரிக்க ராணுவத்தினரும், ஆப்கான் தேசத்தவரகளும் உயிரிழந்தனர் இதற்குக் காரணம் ஹக்கானி குழுதான் என்று அமெரிக்க கூறியுள்ளது.

மேலும், ஹக்கானி குழு பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருந்து கொண்டு தாக்குதல்களில் ஈடுபடுவது எங்களுக்குத் தெரியும். பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அல்கய்டாவை வீழ்த்துவதில் பாகிஸ்தானின் உதவி மிகப்பெரியது, இதனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் கோபத்தை அனுபவித்து வருகிறது. இதற்காக பாகிஸ்தான் மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது என்று கூறிய கார்னி பாகிஸ்தானுடன் தங்கள் நாடு வைத்துள்ள உறவு சிக்கல் நிறைந்தது என்றார்.