

24.03.2011: சிரியாவில் அரசுக்கெதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று நாட்டின் தென்பகுதி நகரான தாராவில் ஐய்மான்-அல்-அஸ்வாத் என்ற மனித உரிமை அமைப்பினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர் அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்புப்புபடையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18-ம் தேதி முதல் பொதுமக்கள் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தாஹரா நகரில் ஏற்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து , நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸிலும் மக்கள் போராட்டம் பரவியுள்ளது. இதில் 75 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் புதிய சீர்திருத்த சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும் எனவும் அதிபர் பஷீர் ஆசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.