Total Pageviews

Blog Archive

Tuesday, 21 June 2011

ரஷ்யாவில் பயங்கர விமான விபத்து-44 பேர் பலி

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் நடந்த பயங்கர விமான விபத்தில் 44 பேர் பலியாயினர்.

பெட்ரோசவோட்ஸ்க் நகரில் கடும் பனி மூட்டத்துக்கு இடையே தரையிறங்க முயன்ற விமானம் ரன்வேக்கு முன்னதாகவே தரையில் மோதி வெடித்துச் சிதறியது. அதில் விமானத்தில் இருந்த 44 பேர் பலியாயினர். 10 வயது சிறுவன், ஒரு பெண் விமான சிப்பந்தி உள்ளிட்ட 8 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து நடந்தபோது விமான நிலைய ரன்வேயில் பனி மூட்ட விளக்குகள் (fog lights) விளக்குகள் எரியவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் ரன்வே என்று நினைத்து அதற்கு 2 கி.மீ. தூரத்துக்கு முன்னதாகவே விமானிகள் விமானத்தை தரையில் இறக்கியதாகவும், இதையடுத்தே விமானம் தரையில் மோதி வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகறது.

விபத்துக்குள்ளான விமானம் சோவியத் தயாரிப்பான பழைய டி.யு.-134 ரக விமானமாகும். இது ரஷ்ஏர் ஏர்லைன்ஸ் நிறுவனத்ததுக்குச் சொந்தமானது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து பெட்ரோசவோட்ஸ்க் நகருக்கு வந்து கொண்டிருந்தது.

பின்லாந்து எல்லைக்கு அருகே உள்ள இந்த நகரில் கடும் பனிப் பொழிவு நிகழ்ந்து கொண்டுள்ளது. விமானம் ரன்வேக்கு 2 கி.மீ. முன்னதாகவே தரையைத் தொட்டதால் அது உடைந்து சிதறியுள்ளது.


விமான நிலையத்துக்கு வெளியே உள்ள சாலை முழுவதும் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன.