Total Pageviews

Blog Archive

Tuesday, 21 June 2011

அமெரிக்கர்கள் போர் செய்து களைத்து போய்விட்டனர்: ராபர்ட் கேட்ஸ்

வாசிங்டன், ஜூன். 21
அமெரிக்கர்கள் போர் செய்து களைத்துப்போய் விட்டனர் என்று அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க மக்கள் போர் செய்து களைத்து போய்விட்டார்கள் என்பதை நான் அறிவேன். 2008-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு மிக குறைவான பொறுப்பு தான் இருந்தது. ஆப்கானிஸ்தானில் 2010-ம் ஆண்டு கோடை வரை நம்மிடம் சரியான போர் தந்திரம் இல்லை. சரியான வசதி வாய்ப்பு இல்லை. இந்த போருக்கு தேவையான அளவுக்கு போதுமான வசதி கிடைக்கவில்லை. 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் நாம் ஆப்கானிஸ்தான் போரில் வெற்றி பெற்றோம். பிறகு நம் கவனம் ஈராக் மீது திரும்பியது. இதனால் பல ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தான் அலட்சியப்படுத்தப்பட்டது. நான் 2006-ம் ஆண்டு ராணுவத்தலைமை பொறுப்பை ஏற்றபோது 5 ஆண்டு யுத்தத்தில் 194 அமெரிக்கர்கள் தான் பலியாகி இருந்தனர். நாம் 10 ஆண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டு இருந்தோம். ஆனால் ஆப்கானிஸ்தானில் முழு அளவில் யுத்தத்தில் ஈடுபடவில்லை. இவ்வாறு ராபர்ட் கேட்ஸ் கூறினார்.