Total Pageviews

Blog Archive

Tuesday, 21 June 2011

அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக வீட்டு பணிப்பெண் வழக்கு

நியூயார்க், ஜூன் 21-
அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக அவரது வீட்டின் முன்னாள் பணிப்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பிரபு தயாள் தூதராக பணிபுரிகிறார். அவரது வீட்டில் பர்த்வாய் (45) என்பவர் பணிப்பெண்ணாக முன்பு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பிரபு தயாள் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மாதம் 300 டாலர் சம்பளத்திற்கு, தன்னை பிரபு தயாள் நீண்ட நேரம் வேலை வாங்கியதாகவும், தனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு அவர் தர மறுப்பதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.மேலும், வீட்டில் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அறையில் தான், தனக்கு தூங்குவதற்கு இடம் ஒதுக்கினர் என்றும், பாலியல் ரீதியான முயற்சிகளையும் பிரபு தயாள் மேற்கொண்டார் என்றும் பர்த்வாய் தனது மனுவில் கூறியுள்ளார்.பர்த்வாய்க்கு உதவி வரும் சட்ட உதவி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.எனினும், பர்த்வாயின் புகாரை இந்தியத் தூதர் பிரபு தயாள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "பர்த்வாயின் புகார் முழு முட்டாள்தனமானது" என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.