புது தில்லி, ஜூன் 21: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ரகசிய மைக்குகள், கேமராக்கள் பொருத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக 2010 செப்டம்பர் 7-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தில், இந்த விவகாரம் குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நிதியமைச்சக அலுவலகத்தில், 16 இடங்களில் கேமரா அல்லது மைக்குகளை ஒட்ட முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதைச் செய்தது யார் என்பது குறித்து ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று பிரணாப் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் தில்லி நார்த் பிளாக்கில் உள்ளது. அவரது அலுவலகத்திலும், அவரது தனி உதவியாளரின் அறை, அவரது செயலரின் அறை, இரு கருத்தரங்க அறைகள் ஆகியவற்றில் உளவு முயற்சி நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், 16 இடங்களிலும் மைக்ரோபோன்களோ, கேமராக்களோ சிக்கவில்லை. அவற்றைப் பொருத்த பசை தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என தனது கடிதத்தில் பிரணாப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நிதித்துறை அமைச்சகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் உளவுப் பார்க்கும் முயற்சி நடைபெற்றதா என்பது குறித்து தனியார் நிறுவனத்தின் உதவியோடு ஆய்வு நடத்தப்பட்டபோதுதான் உளவு முயற்சி குறித்து தெரியவந்தது. இதையடுத்தே பிரதமருக்கு பிரணாப் கடிதம் எழுதியுள்ளார் எனத் தெரிகிறது. இது குறித்து தில்லியில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரணாப் முகர்ஜி, இப் பிரச்னை குறித்து, மத்திய உளவுத் துறையான ஐ.பி., முழு அளவில் சோதனை நடத்திவிட்டு, அலுவலகம் எந்த வகையிலும் உளவு பார்க்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது என்றார். ஆனால், பசை ஒட்டப்பட்ட இடங்களில் சிறிய துளைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, அந்த இடங்களில் கேமராக்களோ, ரகசிய மைக்ரோபோன்களோ வைக்கப்பட்டு, பின்னர் அவை நீக்கப்பட்டிருக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத் துறையினர் கூறினர். பாஜக கருத்து: இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, நிதியமைச்சர் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பு நிகழ்வதாக நிதியமைச்சரே கடிதம் எழுதியிருப்பது மிகவும் முக்கியமான பிரச்னையாகும். இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார். மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த அமைச்சர் பிரணாப். அவரது அலுவலகத்திற்குள் ஒட்டு கேட்கப்படுவதாகக் கூறப்படுவது மிக முக்கியமான பிரச்னையாகும். பல்வேறு நிதி முறைகேடுகள் குறித்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிவரும் நிலையில் இந்த பிரச்னையில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Total Pageviews
Blog Archive
-
▼
2011
(142)
-
▼
June
(50)
-
▼
Jun 21
(8)
- ரஷ்யாவில் பயங்கர விமான விபத்து-44 பேர் பலி
- அமெரிக்கர்கள் போர் செய்து களைத்து போய்விட்டனர்: ரா...
- லிபியாவில் நேட்டோ தாக்குதலில் அப்பாவிகள் பலி
- தோற்றுப் போன நாடுகளின் பட்டியலில் இலங்கை
- அமெரிக்காவில் இந்தியத் தூதருக்கு எதிராக வீட்டு பணி...
- இன்று காலை ஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடிப்ப...
- பிரணாப் அலுவலகத்தை உளவுப் பார்க்க ரகசிய கேமராக்கள்?
- தானாகவே இதயத்தைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடி...
-
▼
Jun 21
(8)
-
▼
June
(50)

