Total Pageviews

Blog Archive

Friday, 24 June 2011

அலாஸ்காவில் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான அலாஸ்காவின் அட்கா தீவு அருகே இன்று பசிபிக் கடலில் மிக பயங்கர பூகம்பங்கள் ஏற்பட்டன. அடுத்ததடுத்து ஏற்பட்ட இந்த இரு பூகம்பங்களும் ரிக்டர் அளவுகோளில் 7.4, 7.2 புள்ளிகளாகப் பதிவானயின. இதையடுத்து அலாஸ்கா கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அட்காவுக்கு கிழக்கே 172 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் பெருங் கடலில் 40 கி.மீ. ஆழத்தில் இந் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாகப் பதிவானது. அடுத்த 30 வினாடிகளில் இதே பகுதியை இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோளில் 7.2 புள்ளிகளாகப் பதிவானது.

இதையடுத்து அலாஸ்கா மற்றும் கனடாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. யுனிமாக் பாஸ், அலாஸ்காவில் இருந்து அம்சிட்கா பாஸ் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கும், டச்சு நாட்டு துறைமுகமான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

கடலோரப் பகுகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும், துறைமுகப் பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், சுனாமி அலைகள் ஏதும் உருவாகவில்லை.

இதையடுத்து அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது