Total Pageviews

Blog Archive

Friday, 24 June 2011

பின்லேடனுடன் உளவுத் துறை அதிகாரிகள் தொடர்பு: அமெரிக்கா அதிர்ச்சி

அல்கொய்தா தீவிரவாதத் தலைவர் பின்லேடனுக்கும், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் செல்போன் மூலம் தொடர்பு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
பின்லேடன் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய அமெரிக்க அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து வருகிறார்கள். அப்போது பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் தொடர்புடைய ஹராகட் உல் முஜ்கிதீன் தீவிரவாத அமைப்பின் அழைப்பு விவரங்கள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கும் பின்லேடனுக்கும் தொடர்பு இருப்பது சாதாரண விடயமல்ல. இதனை தீவிரமாக கருதுகிறோம். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 2ம் திகதி பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் அல்கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்க சிறப்பு கமண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின் போது அங்கு இருந்து செல்போன் போன்ற இதர முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
பின்லேடனுக்கு உதவி செய்த ஹராகட் தீவிரவாத அமைப்பை அமெரிக்கா தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து உள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புக்கு பல ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்பு இருந்து வருகிறது.