Total Pageviews

Blog Archive

Friday, 24 June 2011

இந்தியாவில் ஹெராயின் விற்பனை அதிகம்: ஐ.நா.தகவல்

ஐ.நா.:தென்‌கிழக்கு ஆசியாவின் இந்தியாவில் தான் ஹெராயின் விற்பனை அதிகரித்து வருகிறது என ஐ.நா. வருடாந்திர ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கான போதை மருந்து கடத்தல் மற்றும் குற்றம் - 2011 -யின் (யு.என்.ஓ.டி.சி.) அமைப்பு வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு ஆசியாவில் தான் தோராயமாக 1.9 பில்லியன் டாலர் அளவுக்கு ஹெராயின் ‌எனும் போதை மருந்து விற்பனை நடக்கிறது. இதில் இந்தியாவின் அதிகபட்சமாக 1.4 பில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை நடக்கிறது. மேலும் சீனாவிலும்,பாகிஸ்தானிலும் தான் ஹெராயினை நுகர்வர்கள் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்ததாக ஈரானில் உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு வரையில் ஆப்கானிஸ்தானில் அதிகளவு ‌‌நுகரப்பட்டது. இங்கு உள்நாட்டிலேயே போதை மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் கடந்த 2007-ம் ஆண்டுகளில் மியான்மர் நாட்டில் 5 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2010-ம் ஆண்டில் 12 சதவீதமாக அதிகரித்தள்ளது. மேலும் யு.என்.ஓ.டி.சி அமைப்பு நடத்திய ஆய்வில் கடந்த கடந்த 2009-ம் ஆண்டில் உலகளவில்149 முதல் 203 மில்லியன் மக்கள் போதை மருந்தினை உப‌யோகப்படுத்தியுள்ளனர். இதே போன்று மெராக்‌கோ, லெபனான், நேபாள் ஆகிய நாடுகளில் ஹாஸிஸ் எனும் போதை மருந்து விற்பனை அதிகரித்து வருகிறது.தவிர கோகைன் போன்றவைகளும் ஆசிய சந்தையில் பெருகிவிட்டன.