Total Pageviews

Blog Archive

Friday, 24 June 2011

கறுப்பு பண ஒழிப்புக்கு இ.மெயிலில் குவியும் ஐடியாக்கள்!!

டெல்லி: கறுப்புப் பணத்தை ஒழிக்க யோசனை தெரிவிக்குமாறு மத்திய அரசு பொதுமக்களிடம் கேட்டவுடன், ஐடியாக்களை மின்னஞ்சல்கள் மூலம் மக்கள் போட்டி போட்டு அனுப்பி வருகின்றனர்.

கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தவும், அதை மீட்கவும் சிபாரிசு செய்வதற்காக, உயர் அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய நிதி அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழு கடந்த 9-ந் தேதி முதல்முறையாக கூடியது.

அப்போது, கறுப்பு பணத்தை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் யோசனை கேட்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக இ.மெயில் முகவரியும் தொடங்கப்பட்டது.

அதை ஆரம்பித்த ஒரு வாரத்துக்குள் பொதுமக்கள் போட்டி போட்டு யோசனைகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோசனை தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கும் நிபுணர் குழுவின் கூட்டத்தில், பொதுமக்களின் யோசனைகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.