Total Pageviews

Blog Archive

Friday, 16 September 2011

அமெரிக்காவில் இலங்கையின் கொலைக்களம் திரையிடப்பட்டது




வாசிங்டன், 
சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் 'இலங்கையின் கொலைக்களம்' சேனல்-4 ஆவணப்படம் அமெரிக்காவின் Massachusetts மாநில சபையில் (State House) திரையிடப்பட்டது. அனைத்துலக மன்னிப்புச்சபை ஏற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளான சுபா சுந்தரலிங்கம் மற்றும் ஜெராட் பிரான்சிஸ் ஆகியோரது பங்களிப்புடன் திரையிடல் இடம்பெற்றுள்ளது.
Massachusetts மாநில ஆட்சிபீட உறுப்பினர்கள், உயர்கல்விச் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பல்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆவணப்பட திரையிடல் தொடர்பிலான முன்னறிவுப்புகள் ஏற்கனவே மாநில ஊடகங்களில் வெளியிடப்பட்ட நிலையில் இதன்வழி பொதுமக்களும் இத்திரையிடலை காணவந்திருந்தனர்.
Massachusetts ஆட்சிபீட உறுப்பினரான ஜேசன் லூவிஸ் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். திரையிடலைத் தொடர்ந்து கருத்துரைத்த Massachusetts  மாநில ஆட்சிப்பீட ஜேசன் லூவிஸ் அவர்கள் சிறிலங்கா அரசினால் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையைக் கோரியும் ஐ.நா. நிபுணர் குழுவின் பரிந்துரையை வலியுறுத்தியும் Massachusetts இல் தீர்மானமொன்றை விரைவில் நிறைவேற்றவுள்ளதாக தெரிவித்தார்.
ஆவணப்படம் பெரும் தாக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில் தொடர்ந்து சபையோர் கேள்விகளுக்கு ஜெராட் பிரான்சிஸ் தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தின் நியாப்பாடுகளை முன்னிறுத்தி பதிலுரைத்தார்.