அமோரி (ஜப்பான்), செப். 15: பிரிட்டனில் இருந்து ஜப்பானுக்கு அணுக்கழிவு பொருள்கள் பெருமளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடுமையான கதிரியக்க அபாயத்தைக் கொண்டுள்ள இந்த அணுக்கழிவு பொருளை கொண்டு வந்ததற்கு எதிர்ப்புப் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் அணுக்கசிவு ஏற்பட்டது. அதன் பிறகு இப்போது முதல்முறையாக அணுக்கழிவுப் பொருள்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பெரும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரிட்டனில் இருந்து 76 பிரமாண்டமான சிலிண்டர்களில் அணுக்கழிவு பொருள்கள் கப்பல் மூலம் ஜப்பானின் ரோகாஷோ துறைமுகத்துக்கு வந்துள்ளன. 3 ஜப்பானிய மின் நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி கழிவுகளை தங்கள் நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக பிரிட்டன் இதனை அனுப்பியுள்ளது.
இந்த அணுக் கழிவுகளை இறுதியாக எங்கு வைப்பது என்பதை ஜப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்நிலையில் அணுக்கழிவுகள் துறைமுகத்துக்கு வந்துள்ளதை அறிந்த உள்ளூர் மக்கள் துறைமுகத்தின் வெளியே கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கதிரியக்க அபாயம் உள்ள இந்த கழிவுகளை ஜப்பானில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டுமென அவர்கள் கோஷமிட்டனர். அடுத்த சில நாள்களில் போராட்டம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் அணுக்கழிவுகள் அடங்கிய 900 சிலிண்டர்களை ஜப்பானுக்கு அனுப்ப பிரிட்டன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இப்போது இரண்டாவது முறையாக அணுக் கழிவு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் முதல்முறையாக கொண்டு வரப்பட்டது. அப்போது பெரிய அளவில் எதிர்ப்பு ஏதும் ஏற்படவில்லை.