Total Pageviews

Blog Archive

Tuesday, 28 June 2011

பிரிட்டிஷ் துருப்புகள் பிடித்த 1000 தலிபான்கள் விடுதலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களின் தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
அங்கு எப்போதும் பதட்ட நிலையின் பிடியிலேயே மக்கள் உள்ளனர். அவர்களது வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மிக மோசமாக உள்ளது.
உலக நாடுகளில் மோசமாக பெண்கள் நடத்தப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மிகவும் வேதனைத்தரக்கூடிய வகையில் சட்ட நிர்வாகம் உள்ளது.
இந்த நீதித்துறை அவலத்தை பயன்படுத்தி கொலை குற்றம் செய்யும் தலிபான் தீவிரவாதிகள் மிக சந்தோஷமாக விடுதலை ஆகி வருகிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் பிரிட்டிஷ் துருப்புகள் பிடித்த ஆயிரக்கணக்கான தலிபான் தீவிரவாதிகளை மோசமான நீதி நிர்வாகம் காரணமாக ஆப்கானிஸ்தான் நீதிமன்றங்கள் விடுவித்துள்ளன.
கொலை குற்ற நடவடிக்கைளில் ஈடுபட்ட தலிபான் தீவிரவாதிகளில் 20ல் ஒருவருக்கு மட்டுமே உரிய தண்டனை அளிக்கப்படுகிறது. இதர நபர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதை போல நீதிமன்றத்தில் பொழுதை போக்கி விட்டு விடுதலை ஆகி வருகிறார்கள்.
இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகளுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு 1175 தலிபான் தீவிரவாதிகளை பிரிட்டன் துருப்புகள் பிடித்து ஆப்கானிஸ்தான் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.
இதில் 82 பேர் மட்டுமே குற்றவாளி என ஆப்கானிஸ்தான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு இதர தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.