Total Pageviews

Blog Archive

Tuesday, 28 June 2011

ராணுவ ரீதியாக இந்தியா பலமான நாடு: பாக். அமைச்சர்

இஸ்லாமாபாத், ஜூன் 28- ராணுவ ரீதியாக எங்களை விட இந்தியா பலம் வாய்ந்த நாடு என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செளத்ரி அகமத் முக்தார் கூறியுள்ளார்.பிபிசி உருது பிரிவு சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:இந்தியாவின் பொருளாதாரம் பாகிஸ்தானை விட 6 முதல் 7 மடங்கு பெரியது. மேலும், வர்த்தக பரிமாற்ற அளவும் எங்களை விட 5 முதல் 6 மடங்கு பெரியதாகும்.ராணுவ ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை. இந்தியா தற்போது பல அதிநவீன போர் கருவிகளை கொண்டுள்ளது. இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் தொடர்ச்சியாக 20 அல்லது 22 நாட்களுக்கு தான் பாகிஸ்தானால் தாக்கு பிடிக்க முடியும். ஆனால், இந்தியாவால் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக போரை நடத்த இயலும். பாகிஸ்தானால் அவ்வளவு நாட்கள் தொடர்ந்து போர் புரிய முடியாது.  இவ்வாறு பாக். அமைச்சர் செளத்ரி தெரிவித்தார்.