Total Pageviews

Blog Archive

Tuesday, 28 June 2011

உலகின் மிகப் பெரிய பணக்காரர்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் கினா ரினே ஹார்ட்(57) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கடன் சுமையுடன் தந்தையின் சுரங்கத்தை பெற்றார்.
தற்போது இந்த பெண் தொழிலதிபர் உலகின் மிகப்பெரும் பணக்காரராக உருவெடுப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு இரு மடங்கு அதிகரித்து ஆயிரத்து 30 கோடி டொலராக ஆனது.
அதாவது பிரிட்டன் பவுண்ட் மதிப்பில் அவரது சொத்து 630 கோடி பவுண்ட் ஆக அதிகரித்தது. மூலப்பொருள் விலை அதிகரிப்பால் அவரது சொத்து மதிப்பு கடுமையான உச்ச நிலையை எட்டியது.
இந்த பெண் தொழிலதிபர் மெக்சிகன் தொழிலதிபர் கரோலஸ் சிலிம் சொத்து மதிப்பை காட்டிலும் கூடுதல் சொத்து பெற்றவராக ஆகிறார். கரோலஸ் சொத்து 460 கோடி பவுண்ட் ஆக இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸ் சொத்து 350 கோடி பவுண்ட் ஆக இருக்கிறது.
அவுஸ்திரேலிய பெண் தொழிலதிபரின் மூன்று கரி மற்றும் இரும்பு சுரங்க உற்பத்தி மூலம் அவரது சொத்து மதிப்பு உலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறது. அவரது நிறுவனங்கள் அனைத்தும் அவரது முதலீட்டிலேயே உள்ளன.
அந்த நிறுவனங்களில் வெளி முதலீடுகள் இல்லை. இதனால் அவரது நிறுவன வருமானத்தின் 100 சதவீதமும் இந்த தொழிலதிபரின் சொத்து கணக்கிலேயே இடம் பெறுகிறது என நிதி குழுக்கள் மதிப்பிட்டு உள்ளன.
உலகின் மிகப்பெரும் பணக்காரராக ஆகும் கினா ரினே ஹார்ட் இரண்டு முறை திருமணம் செய்தவர் ஆவார். அவரது 2வது அமெரிக்க கணவர் பிராங்க் ரினே ஹார்ட் ஆவார். அவர் கடந்த 1990ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.