Total Pageviews

Blog Archive

Tuesday, 28 June 2011

பாகிஸ்தானில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: 20 பயங்கரவாதிகள் பலி

இஸ்லாமாபாத், ஜூன்.28: வடமேற்கு பாகிஸ்தானில் தெற்கு வாஜிரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் அமெரிக்க நடத்திய 2 ஏவுகணைத் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.தெற்கு வாஜிரிஸ்தானின் ஷாவல் பகுதியில் ஒரு வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பல மணி நேரம் கழித்து மன்டோய் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு ஏவுகணைத் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தலைவர் ஹகிமுல்லா மெஹ்சூதுடன் தொடர்புடைய பயங்கரவாத கமாண்டர் ஆதம் கானின் மறைவிடத்தில் 4 ஏவுகணைகள் வீசப்பட்டன. தாக்குதல் நடந்தபோது அங்கு மெஹ்சூத் இருந்தாரா என்பது உடனடியாக தெரியவில்லை.