Total Pageviews

Blog Archive

Tuesday, 28 June 2011

இங்கிலாந்து ராணுவம் உடனே வெளியேற வேண்டும்: பாகிஸ்தான் திடீர் உத்தரவு

பாகிஸ்தான் துணை ராணுவப் படையினருக்கு போர் பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்து ராணுவ ஆலோசகர்கள் 18 பேர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் தங்கியிருந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். 2013ம் ஆண்டு வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்த பாகிஸ்தான் அரசு தற்போது இங்கிலாந்து படையினரிடமும் தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
எங்கள் படையினருக்கு நாங்களே பயிற்சி அளித்துக் கொள்கிறோம். அதனால் பாகிஸ்தானை விட்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியாளர்கள் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.