Total Pageviews

Blog Archive

Monday, 20 June 2011

சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்- அசாஞ்ஜே

அயல்நாட்டு வங்கிகளில் சேர்ந்து கொண்டே போகும் இந்திய கறுப்புப் பணம் குறித்து இந்திய அரசு அசிரத்தை காட்டி வரும் நிலையில், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ஜே, சுவிஸ். வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறியுள்ளார்.

"வேறு எந்த நாட்டுக்காரர்களின் பணத்தை விடவும் சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமஅதிகம் உள்ளது." என்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

"ஆம், பட்டியலில் இந்தியர்கள் பெயர்கள் உள்ளன. இந்திய அரசு அயல்நாட்டு வங்கிகளில் பெருகி வரும் இந்திய கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதில் விரைவில் ஆக்ரோஷம் காட்டுவது அவசியம், இத்தகையக் கறுப்புப் பணத்தினால் ரூபாயின் மதிப்பு சீரழிந்து வருகிறது." என்றார் அசாஞ்ஜே.

அதே போல், 'தங்கள் இணையதளம் வெளியிட்டு வரும் செய்திகளுக்கு இந்திய அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கு ஏமாற்றம் அளிக்கிறது'. "உலகிலேயே நாங்கள் வெளியிட்டுஅள்ள தகவல்களுக்கு வினையாற்றுவதில் இந்திய அரசுதான் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. இந்திய அரசு இந்திய மக்களுக்கு தவறான கருத்துக்களைக் கூறிவருகிறது. என்னிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஊழலற்றவர் என்று கூறினார்கள். ஆனால் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை மீட்க அவரது நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக உள்ளது." என்றார் அசாஞ்ஜே.

மேலும் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்திற்கு சுவிஸ்.வங்கியுடன் புரிந்துணர்வு கொண்டு இரட்டை வரி விதிப்பு முறை செய்யலாம் என்ற திட்டத்தை அசாஞ்ஜே நேரடியாக நிராகரித்தார். இதனால் இந்தியாவுக்கு அந்தப் பணங்களை திருப்பி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என்றார் அவர்.

"இரட்டை வரிவிதிப்பு முறையால் பயனில்லை. சொத்துக்கள் மறைந்திருக்கும் நிலையில் வரி விதிப்பு முறை மட்டும் சரியாகாது. இதனால் இந்தியப் பொருளாதாரம் நசிவடைந்து வருகிறது." என்று கூறினார் அசாஞ்ஜே.

தங்களிடம் சில முக்கியஸ்தர்கள் சுவிஸ்.வங்கியின் பணப்பட்டியலைக் கொடுக்குமாறு பல்வேறு விதங்களில் பேரம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுவிஸ்.வங்கியின் வர்த்தகம் பாதிக்கும் என்பதால் அந்தப் பெயர்களை வெளியிடவேண்டாம் என்று மிரட்டல்கள் வருவதாகவும் அசாஞ்ஜே தெரிவித்தார்.