Total Pageviews

Blog Archive

Monday, 20 June 2011

எகிப்து முன்னாள் அதிபரின் சொத்துக்கள் அரபு நாடுகளுக்கு மாற்றம்

எகிப்து அதிபர் பதவியிலிருந்து விலகிய ஹோஸ்னி முபாரக் தனது சொத்துக்களை ஐரோப்பிய வங்கியில் இருந்து அரபு நாடுகளுக்கு மாற்றிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முபாரக்கின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடக்க சுவிஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததையடுத்தே அவர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து முபாரக்கின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற சில அவசர உரையாடல்கள் மூலம் இது தெரியவந்ததாக புலனாய்வு துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேடு உள்ளிட்ட நட்பு அரபு நாடுகளுக்கு முபாரக் சொத்துக்களை மாற்றியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முபாரக்கின் சொத்து மதிப்பு 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கலாம் அல்லது 2 பில்லியன் டாலர் முதல் 3 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.