Total Pageviews

Blog Archive

Monday, 20 June 2011

சீனக் கடற்பரப்பில் சுதந்திரமான கடற் பிரயாணத்துக்கு அமெரிக்கா, வியட்நாம் அழைப்பு

வாஷிங்டன்:  சீனாவுக்கும் அயல் நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து காணப்படும் நிலையிலும் தென் சீனக் கடற்பரப்பில் அழுத்தங்களை பிரயோகிப்பதை நிராகரித்துள்ள அமெரிக்காவும் வியட்நாமும் சுதந்திரமான கப்பல் பிரயாணத்துக்கு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

வாஷிங்டனில் இடம்பெற்ற பேச்சுகளைத் தொடர்ந்து கருத்துக் கூறிய முன்னாள் எதிரி நாடுகளான அமெரிக்காவும் வியட்நாமும் சமாதானம், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் தென்சீனக் கடலில் சுதந்திரமான கப்பற் பிரயாணத்தை தக்கவைத்துக்கொள்வது சர்வதேசத்தின் பொது நலன்களென கூறியுள்ளன.

தென்சீனாக் கடற்பரப்பிலுள்ள சகல பிராந்திய எல்லைப் பிரச்சினைகளும் எந்தவித அழுத்தங்களும் பலவந்தமும் இன்றி கூட்டமாகவும் இராஜதந்திர செயன்முறை ஊடாகவும் தீர்த்துக்கொள்ளப்படவேண்டுமெனவும் அமெரிக்காவும் வியட்நாமும் வெளியிட்டுள்ள கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. வியட்நாம் எண்ணெய் அகழ்வுக் கப்பல் ஒன்றினதும் ஆராய்வுக் கப்பல் ஒன்றினதும் கேபிள்களை சீனக் கப்பல்கள் துண்டாடியதாக கூறப்பட்டதை அடுத்து வியட்நாம் இராணுவ ஒத்திகைகளை நடத்தியதுடன் அண்மைக்காலமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதேவேளை சீனாவும் தென்சீனக் கடலில் மூன்று நாள் இராணுவ ஒத்திகையை நடத்தியுள்ளது. கடற்பாதுகாப்புப் படைகளை பலப்படுத்தும் நோக்கிலேயே சீன அரசு இப்பயிற்சிகளை மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.  சீனப் பிராந்தியத்தில் நிகழும் அண்மைக் காலச் சம்பவங்கள் சமாதானத்துக்கும் ஸ்திரத்தன்மைக்கும் வலுச் சேர்க்கப்போவதில்லையென அமெரிக்கத் தரப்பு கூறியிருப்பதாகவும் கூட்டறிக்கை கூறுகின்றது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்