Total Pageviews

Blog Archive

Monday, 28 March 2011

சவூதி: சலுகைகளின் சர்க்கரை மழை

ஆளும் வர்க்கத்திற்கெதிரான மக்கள் கிளர்ச்சி அரபுநாடுகளில் ஆங்காங்கே தொடர்ந்துவரும்  நிலையில், அடுத்துள்ள ஏமனிலும், பஹ்ரைனிலும் நடப்பதன் பக்க விளைவுகள் பெரிய அரபு நாடான சவூதியிலும் ஒருசில பகுதிகளில் மிகக் குறைவான அளவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உணரப்பட்டன.

இந்நிலையில், சவூதி அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மண்ணின் மைந்தர்களிடம்  தொலைகாட்சி வழியே  பிரத்யேக உரையொன்றை நிகழ்த்தினார். இறைவனுக்கு அடுத்தபடியாக, அரபு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் தன் குடிமக்களுக்கு மனமுவந்து நன்றி தெரிவித்த சவூதி மன்னர், தான் மனம்திறந்து உரையாடுவதாக அப்போது கூறினார். மக்களே தன் கவுரவம் என்றும் அவர்  குறிப்பிட்டார்.


அதில், குடிமக்களுக்கான அநேக சலுகைகளை அள்ளி இரைத்துள்ளார்.
சர்க்கரைப் பந்தலில் தேன் மழைப்  பொழிந்ததைப் போன்ற அந்த சலுகைகள் விவரம்:

  • சவூதி அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் மாதம் மூவாயிரம் சவூதி ரியாலாக உயர்த்தப்படுகிறது.
  • சவூதி அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் உடனடி போனஸ்
  • வேலையில்லாதவர்களுக்கான உதவித் தொகை மாதம் இரண்டாயிரம் சவூதி ரியாலாக உயர்த்தப்படுகிறது.
  • இராணுவம், பாதுகாப்புத் துறைகள் 60 ,000   புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் .
  • 500 ,000 புதிய குடியிருப்புகள் கட்ட 250 பில்லியன் சவூதி ரியால்கள் ஒதுக்கீடு.
  • வீட்டுக்கடன் சவூதி ரியால்கள்  300 ,000 லிருந்து 500 , 000 ஆக உயர்வு.
  • சொந்த குடிமக்கள் வேலைவாய்ப்புறுதியை (சவூதிசேஷன்) விரைந்து நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படும்.
  • பல்வேறு பெரு நகரங்களிலும் சிறப்பு மருத்துவ நகரங்கள் அமைக்கப்படும்.
  • மன்னருடைய நேரடி கண்காணிப்பில் ஊழல் தடுப்புப் பிரிவு அமைக்கப்படும்.
மன்னரின் இந்த அறிவிப்பை அடுத்து சவூதி நகரங்களில் மண்ணின் மைந்தர்களின் கொண்டாட்டம் பெரிதும் காணப்பட்டது.

ஆயினும், கடந்த 11m தேதி கூடிய சிறு அளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மார்ச் 20 அன்றும் தங்களின் ஆர்ப்பாட்டம் தொடரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்ததையொட்டி தலைநகரில் காவல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னோக்கிச் செல்லும் உலகம் !

மத்தியகிழக்கு நாடுகளில் ஆரம்பித்துள்ள அமைதியின்மை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் நாம் உலகளவில் ஓர் பின்னடைவை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம் என நிபுணர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.
ஐநாவின் ஆதரவுடன் லிபியா மீது ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள், பஹிரையினுக்குள் பிரவேசித்திருக்கும் சவுதி அரேபியாவின் இராணுவ வாகனங்கள், ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள், செயற்பாடிழந்து போன அணுஉலைகள் என்பன எண்ணையின் விலையை அதிகரிக்க செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
உலகில் எண்ணை ஏற்றுமதியில் 12 வது இடத்தை லிபியா வகிக்கிறது.லிபிய மக்களை காப்பாற்றுவது என்ற பெயரில் நடாத்தப்படும் யுத்தத்தின் முதல் கட்டமான விமானம் பறக்காத வான் பரப்பை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டு விட்டோம் என அமெரிக்க தலைப்பீடம் கூறுவது போல இலகுவாக முடிந்து விடும் பிரச்சனையல்ல என்பதும், இது நீண்ட காலம் நீடிக்கலாம் என்பதற்கான அறிகுறிகளை இப்போதே தோன்ற ஆரம்பித்து விட்டன.
மேலைத்தேயக் கூட்டுடன் இணைந்த அரபிக் லீக், ஏற்படுத்தப்பட்ட அழிவுகளும், பொதுமக்களின் உயிரிழப்பும் தாம் எடுத்த முடிவு சரிதான என்ற நிலைமையை உருவாக்கியுள்ளது. அமைப்பாக்கப்படாத எதிரணி, அரசியல் திட்டங்கள் எதுவுமின்றி அயல்நாட்டு இராணுவ நடவடிக்கைகள் மட்டும் மக்களுக்கு நிரந்தர தீர்வுகள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் பல நாடுகளின் போராட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன.
பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான யுத்ததில் ஈடுபட்டிருக்கும் ஐநா அந்த நாட்டிற்கு அரசியல் தீர்வு எதையும் முன்வைப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டதல்ல. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் அந்த நாட்டில் காணப்படும் உட்கட்டமைப்புக்களையும், கட்டிடங்களையும் இடித்து தகர்த்துக் கொண்டிருக்கின்றன நவீன இரக போர் இயந்திரங்கள்.
இது இவ்வாறிருக்க பஹிரைனில் நடைபெறும் நிகழ்வுகள் பெரிதும் வெளியே தெரியாமல் இருக்கின்றன. அமெரிக்காவின் நட்புக்கு பாத்திரமான சவுதி அரேபியா தனது பாரிய எண்ணை படுக்கைகளுக்கு அருகில் இருக்கும் பஹிரைனுக்குள் இராணுவாகனங்களை அனுப்பி வைத்துள்ளது. இங்குள்ள சுணி பிரிவினரின் ஆட்சி அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செயற்பாடு அமெரிக்காவின் அங்கீகாரம் இன்றி நடாத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் பஹிரைனிலுள்ள சிறுபான்மையின ஷியா மதப்பிரிவினருக்கு ஈரான் தனது ஆதரவைத் தெரிவிக்க முற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்பிராந்தியத்தில் இவ்விரு மதப்பிரிவினரிடையேயும் முரண்பாடுகள் வலுவடையும் பட்சத்தில் அது நீண்ட காலம் நீடிக்கும் பிரகாரம், எரிபொருளின் விலையேற்றம் தவிர்க்க இயலாததாகிறது.
சுணி மற்றும் ஷியா மதப்பிரிவினரிடையே முரண்பாடுகள் நீடிக்கும் பட்சத்தில் இந்த இருபிரிவினையும் ஆதரிக்கும் நாடுகளான சவுதி அரேபியாவும் ஈரானும் பலப்பரீட்சையில் இறங்கினால் இவற்றுக்கு மத்தியில் அகப்படும் பஹிரைனின் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக அமையலாம். மத்திய கிழக்கு நாடுகளை வளங்கொழிக்கும் நாடாக்குவதில் முக்கிய பங்கினை வகித்த எண்ணை வளம் அந்த நாடுகளின் பின்னடைவுக்கு மட்டுமல்லாது உலகளவிலான பின்னடைவுக்கும் காரணமாக அமையலாம்.
தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அலை சவுதி அரேபியாவைத் தாக்கினால், லிபியாவிலிருந்து கிடைக்கப்பெறும் எண்ணையின் அளவை விட அதிகளவு எண்ணையை இழக்க நேரிடலாம். ஜப்பானில் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படுத்தப்பட்ட வரலாறு காணாத அழிவு, மின் அணு உலைகளின் பயனற்ற நிலைமை என்பனவும் பங்குச்சந்தையில் எண்ணை விலையில் தாக்கத்தை ஏற்பட்டுத்தும் என நாம் நம்பலாம்.
மத்தியகிழக்கு நாடுகளில் தற்போது கருக் கொண்டிருக்கும் யுத்தமேகங்களும் அமைதியற்ற நிலையும் உணவுப் பொருட்களின் விலை உயர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பல வருடகாலமாக La Niña காலநிலையினால்(La Niña என்பது பசுபிக் சமுத்திரத்தினை குளிரச்செய்யும் காலநிலைமாற்றத்தைக் குறிக்கும் பதம், இது வரட்சியை வேறு பிரதேசங்களில் ஏற்படுத்தும், சூறவளிகள், மற்றும் உயர் தாழ் அமுக்கங்களுக்கும் காரணியாக இருப்பதாக கூறப்படுகிறது).
வெள்ளம், வறட்சி ஆகியவற்றினால் பயிர்ச்செய்கை மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. அதேவேளை ஜப்பானில் அணு உலைக்கசிவினால் அங்குள்ள உணவுப்பொருட்கள் மற்றும் கடலுணவு போன்றவற்றை மக்கள் உட்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் காலங்களில் ஜப்பான் தனது உணவுத் தேவையில் தன்னிறைவு பெறுவதற்கு கணிசமானளவு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.


( நன்றி )  4தமிழ்மீடியா:
                    மாதுமையாள்



லிபிய விவகாரம்: சர்வதேச முரண்பாடுகள்



 
லிபியாவில் வான் தாக்குதல்கள் சர்வதேசத்தில் கருத்துமுரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது
லிபிய வான் தாக்குதலால் சர்வதேச முரண்பாடுகள்
லிபியாவில் மேற்குலக நாடுகள் முன்னெடுத்துவரும் ராணுவ தலையீடு குறித்த ரஷ்யாவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது.
இதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ், மாஸ்கோ சென்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அனட்டோலியன் ஸ்யேர்டியூக்கோஃப் ஐ சந்தித்து பேசினார்.
மேற்குலக நாடுகளின் படைகள் லிபியாவில் பொதுமக்களின் உயிரிழப்புக்களை தவிர்ப்பதற்காக பெரும் முயற்சிகள் எடுத்துவருவதாக அவர் அப்போது கூறினார்.
மேலும் அடுத்த சில நாட்களில் லிபியாவில் நடக்கும் சண்டைகள் குறையத்துவங்கும் என்று தாம் ரஷ்ய அமைச்சரிடம் கூறியதாகவும் கேட்ஸ் தெரிவித்தார்.
அதேசமயம் லிபியாவில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்படுத்துவதே பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் வழி என்று ஸ்யேர்டியூக்கோஃப் தெரிவித்தார்.
அமெரிக்க விமானம் விழுந்தது
இதேவேளை லிபியாவில் கேணல் கடாபியின் படைகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்கும் சர்வதேச நடவடிக்கையின் போது அமெரிக்க போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விழுந்த அமெரிக்க விமானத்துக்கு அருகில் மக்கள் கூட்டம்
விழுந்த அமெரிக்க விமானத்துக்கு அருகில் மக்கள் கூட்டம்
இந்த எஃப் 15 போர் ஜெட்டின் உடைந்த பாகங்களைச் சுற்றி மக்கள் கூட்டம் காணப்படுவதை தொலைக்காட்சி படங்கள் காண்பித்தன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வீழ்ந்ததாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது.
விமானத்திலிருந்து தப்பிக் குதித்த இரண்டு விமானிகளும் மீட்கப்பட்டு விட்டனர்.
லிபியாவில் கேணல் கடாபிக்கு ஆதரவான படைகளுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே சண்டைகள் தொடருகின்றன.
ஷெல் தாக்குதலும், கண்மூடித்தனமான துப்பபாக்கிச் சூடுகளும் நகரில் இடம்பெற்றதாக மேற்கு நகரான மிஸ்ரட்டாவில் உள்ள மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு இரவில் மாத்திரம் 22 பேர் இறந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய நககரான அஜ்டாபியாவைச் சுற்றிலும், ஷிண்டானிலும் மற்றும் திரிபோலிக்கு தென்மேற்கிலும் கூட தொடர்ந்தும் சண்டைகள் இடம்பெறுகின்றன.

Sunday, 27 March 2011

லிபியாவில் அமெரிக்காவின் விமான தாக்குதலில் 100 பேர் பலி





¦‘VÖ«¥ AÙU¡eLÖ«Á «UÖ] RÖehR¦¥ 100 ÚTŸ T¦

‡¡ÚTÖ¦, UÖŸo.27-

¦‘VÖ«¥ AÙU¡eLÖ RÛXÛU›XÖ] ÚU¼L†‡V SÖ|L¸Á «UÖ]†RÖehR¥ LP‹R J£ YÖWUÖL SP‹‰ Y£f\‰. C‹R RÖehR¦¥ ÙTL· E·TP 100 ÚTŸ T¦VÖ]RÖL A‹R SÖy| AWr A½«†‰ E·[‰.

ÙNÖ‹R SÖy| UeL· —‰ RÖehR¥

B‘¡eLÖ«¥ E·[ ¦‘VÖ«¥ A‹R SÖy| A‡TŸ LPÖ‘eh G‡WÖL f[Ÿop SP‹‰ Y£f\‰. AY£eh G‡WÖ] f[Ÿop SÖyzÁ ÙR¼h Th‡›¥ ˆ«WUÖL C£ef\‰. ÙNÖ‹R SÖy| UeL· —ÚR A‡T¡Á WÖ„Y• «UÖ]• ™X• h| ®p RÖehR¥ SP†‡ Y£f\‰.

CSR RÖehRÛX Œ¿†‰•Tz I.SÖ.NÛT i½V‰• ÚTÖŸ Œ¿†R• ÙNšYRÖL LPÖ‘ A½«†RÖŸ. B]Ö¥ YÖšYÖŸ†ÛRVÖL ÚTÖŸ Œ¿†R• GÁ¿ A½«†RÖ¨• ÙNV¥ A[«¥ AR¼h G‡WÖL RÖehRÛX AYŸ ˆ«WT|†‡]ÖŸ.

AÙU¡eL «UÖ]jL· h| ®or

ÙNÖ‹R SÖy| UeL· —‰ h|LÛ[ ®rYR¼h G‡Ÿ“ ÙR¡«†‰ AÙU¡eLÖ RÛXÛU›XÖ] ÚU¼L†‡V SÖ|L¸Á WÖ„Y• ‡¡ÚTÖ¦ SL¡Á —‰ «UÖ]†RÖehR¥ SP†‡ Y£f\‰. A‡T£eh G‡WÖL WÖ„Y ÚL‹‡WjL· —‰ RÖÁ RÖehR¥ SP†‡ Y£YRÖL AÙU¡eLÖ A½«†R ÚTÖ‡¨•, C‡¥ ATÖ«L· TXŸ T¦VÖf C£ef\ÖŸL·. ÙTL· E·TP 100 ÚTŸ T¦VÖ]RÖL ¦‘VÖ AWNÖjL• A½«†‰ E·[‰. B]Ö¥ CÛR ÚU¼L†‡V SÖ|L¸Á WÖ„Y A‡LÖ¡L· U¿†‰ E·[]Ÿ.

CR¼fÛP›¥ Œ£TŸLÛ[ ‡¡ÚTÖ¦ Ù^]W¥ BÍT†‡¡eh ¦‘VÖ AWNÖjL• AÛZ†‰ ÙNÁ¿ LÖyzV‰. Ajh 15 EP¥L· ÛYeLTy| C£‹RÛR Œ£TŸL· TÖŸ†RÖŸL·. CYŸL· AÛ]Y£• LP‹R 2 SÖyL¸¥ SP‹R «UÖ]† RÖehR¥L¸¥ T¦VÖ]YŸL· GÁ¿ NYefPjh F³VŸ ALU‰ EÚNÁ ÙR¡«†RÖŸ. C‹R 15 ÚTŸL¸¥ 3 ÚTŸ ÙTL·. AYŸL· NÖRÖWQ ÙTL· A‚• EÛPL¸¥ C£‹R]Ÿ.

BÍT†‡¡›¥ E·[ yWÖ¦ YzL¸¥ A‹R EP¥L· fP‹R]. pX EP¥L· L]UÖ] ÚTÖŸÛYVÖ¥ ÚTÖŸ†RTy| fP‹R].

˜‹ÛRV RÖehR¥L¸¥ T¦VÖ] ATÖ«L¸Á EP¥LÛ[ G¡†‰ «yPRÖL A‡LÖ¡L· ÙR¡«†R]Ÿ.

LPÖ‘ÛV ÙLÖ¥¨• ‡yP• C¥ÛX

CR¼fÛP›¥ AÙU¡eLÖ«¥ TÖWÖºUÁ\ ™†R E¿‘]ŸLºeh ¦‘VÖ RÖehR¥ h½†‰ ^]Ö‡T‡ JTÖUÖ «[eL• ÙLÖ|†RÖŸ. AÚTÖ‰ LPÖ‘ÛV ÙLÖÛX ÙNšYR¼h AÙU¡eL WÖ„Y†ÛR TVÁT|†‰• ‡yP• fÛPVÖ‰ GÁ¿ AYŸ ÙR¡«†RÖŸ. Byp UÖ¼\†ÛR Uy|• G¼T|†RÚTÖYRÖL AYŸ i½]ÖŸ.

¦‘VÖ —RÖ] RÖehR¨eh ˜µÙTÖ¿ÛT• ÚSyÚPÖ AÛU“ H¼¿ C£TRÖL°U AYŸ ÙR¡«†RÖŸ. ¦‘VÖ —‰ RÖehRÛX ÙRÖPjfVR¼h TX TÖWÖºUÁ\ E¿‘]ŸL· LP]• ÙR¡«RR]Ÿ.

ஜப்பானில் கதிர்வீச்சு ஒரு கோடி மடங்கு அதிகரித்துள்ளது

டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தின், 2ம் உலையில் கதிர்வீச்சு ஒரு கோடி மடங்கு அதிகரித்துள்ளது. ஜப்பானில் கடந்த 11ம்தேதி ஏற்பட்ட, சுனாமியால் சென்டாய் உள்ளிட்ட நகரங்கள் அழிந்துவிட்டன. புக்குஷிமா டாய்ச்சி பகுதியில் உள்ள, ஆறு மின் நிலையங்களில் நான்கு மின் நிலையங்களின் அணு உலைகள் சுனாமியால் சேதமடைந்தன. இந்த அணுமின் நிலையங்களிலிருந்து கதிர்வீச்சு பரவி வருகிறது. 2 மற்றும் 3ம் அணு மின் நிலையங்களில் கதிர்வீச்சு ஆயிரம் மடங்கு -----அதிகரித்துள்ளதால் அருகே உள்ள, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 3ம் அணு மின் நிலையத்தில் 10 ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு பரவியதால், மூன்று ஊழியர்கள் கடந்த வாரம் காயமடைந்தனர். இந்நிலையில், 2ம் மின் நிலைய உலையில் வெளியாகும் தண்ணீரில் சாதாரண அளவை விட, கதிர்வீச்சின் அளவு ஒரு கோடி மடங்கு அதிகரித்துள்ளதால் அணு உலையை குளுமைபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அவசர கால ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Saturday, 26 March 2011

மரம் நடும் நடவடிக்கைகள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையின் கீழுள்ள வாரியங்கள், அமைச்சகங்கள் உள்ளிட்ட துறைகளின் 197 அமைச்சர் நிலை அலுவலர்கள் 26ம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் மரம் நடும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நடப்பு குடியரசின் அமைச்சர்கள் தன்னார்வ மரம் நடும் நடவடிக்கை பெய்ஜிங் மாநகரின் தொஞ்சோ மாவட்டத்திலுள்ள பிங்ஹோ பூங்காவில் நடைபெற்றது. அலுவலர்கள் மரக் கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றியுள்ளனர். பல்வகை மரங்கள் நடப்பட்டுள்ளன. மாசற்ற பெய்ஜிங்கிக்கு மீண்டும் உத்தரவாதம் கிடைத்துள்ளது.

இவ்வாண்டு மக்கள் அனைவரும் மரம் நடும் தன்னார்வ நடவடிக்கையில் கலந்து கொண்ட 30வது ஆண்டாகும். இவ்வாண்டு ஐ.நா நிர்ணயித்த சர்வதேச வனவள ஆண்டும் ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் 1270 கோடி மக்கள் தன்னார்வ மரம் நடும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 5890 கோடி மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : Earth Hour!

இன்று (மார்ச் 26ம் திகதி), இரவு 8.30 க்கு, 2011 இன் Earth Hour எனும் உலகின் மாபெரும் தன்னிச்சையான பொதுமக்கள் நிகழ்வு இடம்பெறுகிறது.
சரியாக இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை, உலகின் பல்லாயிரக்கணக்கான வர்த்தக நகரங்கள் அனைத்தும் தமது மின் ஒளிவிளக்குகளை நிறுத்தி பூமியை குளிர்விக்க சம்மதம் தெரிவித்துள்ளன. மில்லியன் கணக்கான மக்கள் கைகளில் மெழுகு வர்த்திகளுடன் சாலைகளின் ஒன்றிணைந்து Earth Hour ஐ கொண்டாட தயாராகிவிட்டனர். நீங்களும் தயாரா? உங்கள் வீடுகளிலும் மின் விளக்குகளை இந்த ஒரு மணி நேரத்திற்கு அனைத்து வைப்பீர்களா?
மின்சக்தியை நிறுத்தி வைக்க மனித சக்தியால் முடியாதா என்ன?

ஆஸ்திரேலியாவில் இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு 2007 ம் ஆண்டு சிட்னி நகரில் ஒரு சிறிய நிகழ்வாக தொடங்கப்பட்ட இந்த Earth Hour , உலகின் மாபெரும் தன்னிச்சையான தொண்டு நிகழ்வாக 2010 இல் சாதனை படைத்து, இன்று 128 நாடுகளில் இந்நிகழ்வை நடத்த சம்மதம் வாங்கப்பட்டுள்ளது.

மாபெரும் கைத்தொழில், வர்த்தக நகரங்கள் தமது உற்பத்திகளுக்காக ஒரு மணி நேரமென்ன, ஒரு 60 செக்கன் மின்சார வசதியில்லையென்றாலும், பல பில்லியன் கோடிக்கணக்கான பண நஷ்ட்டத்தை எதிர்கொள்ளும். ஆனால் ஒரு மணி நேர மின்சார சேமிப்பினால், எதிர்கால சந்ததியினரினதும், எதிர்கால பூமித்தாயின் நல்வாழ்வுக்குமாக இந்த சம்மதத்தை மனமுவந்து அளித்துள்ளன. இன்று யூடியூப் வீடியோ தளமும் தனது லோகோவில் Earth Hour க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

WWF மற்றும் earthhour.org ஆகிய இணைந்து இந்த Earth Hour நிகழ்வை நடத்துகின்றன. நீங்களும் earthhour.org இணைவதன் மூலம் இந்நிகவில் உங்களது நேரடியான பங்களிப்பை வழங்கலாம்! உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்நிகழ்வை பற்றி அறிவித்து, ஒன்றாக கொண்டாடலாம்!

எங்கே நீங்கள் தயாரா? மறந்துவிடாதீர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு! (உலக கோப்பை போட்டி தொலைக்காட்சியில் சென்றாலும் பார்ப்பதை தவிருங்கள்)
இதோ Earth Hour பற்றிய மேலதிக தகவல்களுக்கு: http://www.earthhour.org/Homepage.aspx

அதிபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் யேமன் போட்டி ஆர்ப்பாட்டங்கள்'



 



யேமனின் தலைநகர் சனா'ஆவில் அந்த நாட்டின் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹ் அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் என எதிரெதிர் போராட்டங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
 
 
அரசாங்க தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் சாலிஹ், இரத்தக்களரியை தடுக்கும் நோக்கில் தான் பதவி விலகத்தயாராக இருப்பதாகவும், ஆனால், மிகவும் பாதுகாப்பானவர்கள் என்று நம்பக்கூடிய தரப்பிடமே தான் ஆட்சியை ஒப்படைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
தனது அதிகார மாற்றம் அமைதியானதாகவும், மக்களை நோக்கியதாகவும் இருக்க வேண்டும் என்றும், ஆனால் ஊழல் பேர் வழிகளிடம் ஆட்சி சென்று சிக்க அது காரணமாகிவிடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இளைஞர்கள் தாமே தமக்கான சொந்த அரசியல் கட்சியை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களோ அவரது கூற்று அர்த்தமற்றது என்று கூறியிருக்கிறார்கள். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். 

தீவிர பாதுகாப்பு
இன்று இரு தரப்பு ஆர்ப்பபாட்டங்களும் மிகவும் பெரியவையாக இருந்ததால், தலைநகரில் பாதுகாப்புப் படையினர் மிகுந்த உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
இரு தரப்பினரிடமும் ஆயுதங்கள் இருந்தன. இரு தரப்பும் பின்வாங்குவதற்கான சமிக்ஞை எதனையும் காண்பிக்கவும் இல்லை.
இந்த நிலைமை அங்கும் உள்நாட்டுப் போருக்கு வித்திட்டு விடுமொ அன்ற அச்சம் பலரிடமும் காணப்படுகின்றது.
சிரியா நிலவரம்
அதேவேளை, மத்திய கிழக்கின் ஏனைய இடங்களிலும் அமைதியீனங்கள் தொடருகின்றன.
சிரியாவில் வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து தேசிய மட்டத்திலான ஒரு வேலை நிறுத்தத்துக்கு எதிர்த்தரப்புச் செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
சிரியாவின் அதிபர் அஸத்துக்கு அவரது 11 வருட ஆட்சியில் அவர் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய சவாலாக இது உருவெடுத்துள்ளது.
1963 ஆம் ஆண்டு முதல் அங்கு அமலில் இருந்துவரும் அவசர நிலையை நீக்குவதாக வியாழனன்று அவர் அறிவித்திருந்தார்.
போராட்டங்களுடன் சம்பந்தப்பட்ட பலர் தலைநகர் டமாஸ்கஸில் கைது செய்யப்பட்டும் உள்ளார்கள்.

கடல் நீரில் கதிர் வீச்சு

 
பாதிப்புக்குள்ளான அணுமின் நிலையம்
பாதிப்புக்குள்ளான அணுமின் நிலையம்
ஜப்பானின் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் அருகே கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் அணு சக்தி பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.
ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆரம்ப அளவை விட 250 மடங்கு அதிகமாக இப்பகுதி கடல் நீரில் கதிரியக்க அயோடினின் அளவு காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கரையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர்கள் தள்ளி கடல் நீரில் கதிரியக்கம் அளக்கப்பட்டிருந்தது.
கதிரியக்கம் கடலில் கலந்ததன் காரணமாக அப்பகுதி கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை என ஜப்பானிய அமைச்சரவையின் செயலர் யுகியோ எதானோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இப்பகுதி கடல்நீரில் காணப்பட்ட கதிரியக்க அயோடினின் அளவை விட தற்போது எட்டு மடங்கு அதிகமான அளவில் இது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கடல் நீரை யாரும் குடிக்கவோ அல்லது இப்பகுதியில் நீந்தவோ மீன்பிடிக்கவோ போவதில்லை என்பதால் கடலில் அதிக கதிரியக்கம் கலந்திருந்தாலும் மனிதர்களின் உடல் நலத்துக்கு அதனால் ஆபத்து ஒன்றும் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
எங்கிருந்து வருகிறது கதிரியக்கம்?
ஆனால் கடலில் கலக்கும் இந்தக் கதிரியக்கம் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிய முடியாமல் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேதமடைந்த அணு உலைகளில் ஒன்றிலிருந்து கசியும் கதிரியக்கம் நிலத்தடி நீரில் கலந்து அதன் வழியாக கடலுக்குள் வருகிறது என்பதற்கான சாத்தியம் உண்டு.
ஏனென்றால் சாதாரணமாகக் காணப்படும் கதிரியக்கத்தை விட பத்தாயிரம் மடங்கு அதிகமான கதிரியக்கம் கொண்ட நீர் முதலாவது மற்றும் மூன்றாவது அணு உலைகள் அருகே காணப்பட்டுள்ளது.
இதேயளவு கதிரியக்கம் கொண்ட தண்ணீர் அணுவுலைகள் இரண்டாம் மற்றும் நான்காம் இலக்க அணு உலைகள் அருகிலும் காணப்பட்டுள்ளது.
இந்தத் நீர் அணு உலைகளில் இருந்து வருகிறதா அல்லது பயன்பாட்டுக்குப் பின்னர் சேமித்துவைக்கப்பட்டுள்ள அணு எரிபொருள் கழிவுத் தேக்கத்திலிருந்து வருகிறதா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.
கதிரியக்க நீரை அகற்றுவதிலும், அணு உலைகளின் சூட்டைத் தணிப்பதற்காக கடல் நீர் அல்லாமல் வேறு இடத்திலிருந்து நீர் கொண்டு வந்து ஊற்றுவதிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

லிபியாவில் தாக்குதல் நடத்தாமல் கனடிய போர் விமானங்கள் திரும்பின



லிபியாவில் தாக்குதல் நடத்தாமல் கனடிய போர் விமானங்கள் திரும்பின
[ புதன்கிழமை, 23 மார்ச் 2011, 04:06.51 மு.ப GMT ]   
லிபியா மீது கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. லிபிய மக்கள் மீது கர்னல் கடாபி ஆட்சியாளர்களே தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தவும், பொது மக்களை காப்பாற்றவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் லிபிய வான் எல்லையில் விமானம் பறக்க தடை விதித்துள்ளது. இந்த தடையை செயல்படுத்தும் விதமான லிபியா போர் விமானங்களை வீழ்த்தவும், தரைப்படைகளை ஒடுக்கவும் கூட்டுப்படைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளன.
இந்த தாக்குதலில் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்க படைகள் உள்ளன. இந்தக் கூட்டுப்படையில் கனடிய போர் விமானங்களும் உள்ளன. செவ்வாக்கிழமை காலை இரு கனடிய சி எப் 18 போர் விமானங்கள் இலக்கை தாக்காமல் திரும்பின.
குண்டு வீச்சில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்கிற அச்சம் இருந்ததால் அந்த விமானங்கள் குண்டு வீசாமல் திரும்பின. லிபியா போர் விமானங்களை வீழ்த்த கனடிய போர் விமானங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது என ஒட்டாவாவில் மேஜர் ஜெனரல் பாம் லாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
லிபியாவில் குறிப்பிட்ட இலக்கில் கனடிய போர் விமானம் தாக்குதல் நடத்தாமல் திரும்பியது குறித்து அவர் கூறுகையில்,"பொதுமக்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது என குண்டு வீச்சை தவிர்த்தோம்" என்றார். கனடிய போர் விமானத்திற்கு எந்த வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க விமானம் சுட்டு விழ்த்தப்பட்டது - லிபிய தளபதி குண்டுவீச்சில் பலி

அமெரிக்காவின் வான் தாக்குதல்களில் ஈடுபடட்ட F15 விமானம் வீழ்ந்து நொருங்கியுள்ளது. விமானிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் இது தாக்குதல் அல்ல விபத்தாக இருக்கலாம் என்று அமரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் லிபிய வான் பாதுகாப்புப் படையினரிடமிருக்கும் S4 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தமக்குச் சவாலாக இருக்குமென்று இதே அமெரிக்க இராணுவ உயரதிகாரிள் சில நாட்கள் முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம். எனவே இது தாக்கப்பட்டே அழிக்கப்படடிருக்லாம் என இராணுவ அவதானிகள் கருதுகின்றனர்.

கடாபியின் லிபியப் படைகளின் ஒரு பிரிவின் தளபதியாள Hussein El Warfali இன்று கூட்டுப்படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். லிபியத் தலைநகர் Triploi க்கருகில் இடம்பெற்ற தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளார்.
கூட்டுப்படைகள் தமது தாக்குதல்களை லிபிய இராணுவ  மற்றும் வான் எதிர்ப்புக் கேந்திர நிலையங்களைக் குறி வைத்துத் தாக்கிவருகின்றனர். கூட்டுப்படைகளை லிபிய இராணுவத் தளபதிகளையும் கடாபியையும் குறிவைத்து தமது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர்.
கூட்டுப்படைகளின் தாக்குதலை ஒருங்கிணைக்கவும் விமானத் தாக்குதல்களின் கட்டளை மையமாகவும் செயற்பட Charles du Gaule மிதக்கும் கட்டளை மையம் தனது பணியை லிபியாவில் ஆரம்பித்துள்ளது.

லிபியா: குண்டு வீசிய அமெரிக்க போர் விமானம் நொறுங்கியது


லிபியாவில் அந்நாட்டு இராணுவ நிலைகள் மீது குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க போர் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக அந்நாட்டு இராணுவ நிலைகள் மீதும், கடாபியின் மாளிகை மீதும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ எனப்படும் கூட்டு படைகள் ஏவுகணைகள் மற்றும் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தி வருகின்றன.

மேலும் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து இராணுவம் மீட்ட மிஸ்ரதா, அஜ்தாபியா நகரங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் பிடியில் இருக்கும் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் அமெரிக்காவின் எப்-15ஜி ரக போர் விமானம் பறந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராவிதமாக திடீரென அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. அதில், விமானி உள்பட 2 பேர் இருந்தனர்.அவர்கள் சாதுரியமாக வெளியே குதித்து உயிர் தப்பினர். 

pls click this path for  related video





http://www.youtube.com/watch?v=nzKjaT4uQ8g&feature=player_embedded


http://www.youtube.com/watch?v=gm5agXD_2w0&feature=player_embedded

ஜப்பான் கதிர்வீச்சு 1,250 மடங்கு அதிகரித்துள்ளது




ஜப்பான் பூகம்பத்தால் செயலிழந்த அணு உலைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, அது அமைந்துள்ள பகுதியை ஒட்டியுள்ள கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,250 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஜப்பான் அரசு கூறியுள்ளது.

இந்த அளவு, அணு உலையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் கடற்பரப்பில் பதிவாகியுள்ளது. இதனால் கடற்வாழ் உயரினங்கள் மட்டுமின்றி, நிலத்தடி நீரும் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதென ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாய்ச்சா அணு உலைகளைச் சுற்றியுள்ள நீர் நிலைகளிலும் அணுக் கதிர் வீச்சு அதிகரித்துள்ளது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட இரண்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க கடல் நீருக்கு பதிலாக நிலத்தடி நீரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது கடல் நீரை விட அணு உலைகளை வேகமாக குளிர்விக்கும் என்று கூறப்படுகிறது.

அணு உலைகளை ஒட்டிய கடற்பகுதியில் கடந்த வாரம் இருந்த அணுக் கதிர் வீச்சு அளவைக் காட்டிலும் இந்த வாரம் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள ஜப்பான் அரசு அதிகாரிகள், இதனால் கடல் வாழ் உயரினங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ளனர்.

ஜப்பான் அணு உலை பாதுகாப்பு முகமையின் பேச்சாளர் ஹிடேஹிக்கோ நிஷியாமா, கடல் நீரில் கலக்கும் கதிர் வீச்சு அலைகளி்ன் மூலம் பரவும் என்றும், அவைகளை கடலில் உள்ள பாசிகளும், உயிரினங்களும் செரிமானித்துக்கொள்ளும் என்றும், அது ஐயோடின் கதிர்வீச்சு ஆகையால், 8 நாட்களுக்கு மேல் தாக்கம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அணு உலைகளால் ஏற்பட்டுள்ள ஆபத்தை மிக வெளிப்படையாகவே பேசிவரும் ஜப்பான் பிரதமர் நவோட்டோ கேன், “இப்போதுள்ள சூழ்நிலை அனுமானிக்க முடியாத நிலை இருக்கிறது. அது மோசமாகிவிடாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு, பகலாக பணியாற்றிவரும் ஊழியர்களை பிரதமர் கேன் மிகவும் பாராட்டியுள்ளார்.

“டாய்ச்சா அணு உலைகள் 1,3 ஆகியவற்றின் மின்சாரக் கூடங்களில் அணுக் கதிர் வீச்சின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. இந்த அளவிற்கு அணுக் கதிர் வீச்சு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து வருவகிறோம்” என்று ஜப்பான் அரசு அமைச்சரவைச் செயலர் யூகியோ ஈடேனோ கூறியுள்ளார்.

அணு உலைகளில் ஒன்று முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள ஜப்பான் அணு உலை பாதுகாப்பு முகமை, அதன் எரிபொருள் மையத்தில் விரிசல் ஏற்பட்டிருக்குமா என்பதை உறுதி செய்யவில்லை.

ஜப்பான் உணவு இறக்குமதிக்கு பல நாடுகள் தடை

ஜப்பானில் இருந்து காய்கறிகள், கடல் உணவுகள், பால் பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்த நாடுகளான சீனா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகள் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளன.

இவைகளைத் தொடர்ந்து ஆஸ்ட்ரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இரஷ்யா ஆகிய நாடுகளும் ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளன.

இந்த நிலையில், கதிர் வீச்சு உள்ள ஜப்பானின் பல மாகாணங்களில் இருந்து வரும் உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்று ஜப்பான் அரசே எச்சரிக்கை விடுத்துள்ளது.

Thursday, 24 March 2011

லிபியா சி்க்கலை தீர்க்க லண்டனில் 29-ம் தேதி சர்வ‌தேச மாநாடு

டிரிபோலி:லிபியா விமானப்படை தாக்குதலை முறியடித்துள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள், தற்போது அந்நாட்டின் தரைப்படைகளை தாக்க வியூகம் வகுத்துள்ளன.லிபியாவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும் கடாபியை பதவி விலகக்கோரி, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். லிபியாவில் சிக்கலுக்கு தீர்வுகாணும்விதமாக சர்வதேச மாநாடு வரும் மார்ச் 29-ம் தேதி லண்டனில் துவங்கவுள்ளது. இதில் அரபு, ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறுநாடுகள் கலந்து கொள்ளவுள்ளன என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சபையில் பிரிட்டன் வெளியுறவு ‌அமைச்சர் வில்லியம் ஹோக் நேற்று தெரிவித்தார். மேலும் விரைவில் லிபியாவை நேட்டோ படைகள் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார். அதற்குள் கடாபி தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

குத்தகைக்கு குட்டித் தீவுகள்


இலங்கையின் வடமேற்குக் கரையோரமாக புத்தளம் மாவட்டம் கற்பிட்டிப் பகுதியில் இரு தீவுகளை வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட சுற்றுலா நிருவனங்களுக்கு 30 வருட குத்தகைக்கு விட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெள்ளைத்தீவு மற்றும் இன்பத்தீவு ஆகியன இலங்கை, சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளை தளமாகக் கொண்ட சுற்றுலா நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த இலங்கை பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சரான லக்ஷ்மன் யாப்ப அபயவர்த்தன அறிவித்துள்ளார்.

ஆனால் இந்த தீவுகள் தம்மால் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகின்ற அப்பகுதி மீனவர்கள், இவ்வாறு தனியாருக்கு குத்தகைக்கு விடுவத்டு தமது வாழ்வியலைப் பாதிக்கும் என்று கூறுகின்றனர்.

இது தொடர்பாக தமிழோசையுடன் பேசிய தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பு என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் கற்பிட்டிப் பிராந்திய இணைப்பாளரான ஜே. பத்மநாதன், சுமார் 600 மீனவ குடும்பங்கள் வரை இந்தத் திட்டத்தினால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் கூறுகிறார்.

தண்ணீர், கீரை எல்லாவற்றிலும் கதிர்வீச்சு பாதிப்பு அபாயம்


டோக்கியோ:ஜப்பானின் புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குடிநீர் குழாய்களில் கலந்துள்ளதால், பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால், தண்ணீர் பாட்டில்களுக்கு ஜப்பானில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.புக்குஷிமா அணு மின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளுக்கும் தற்போது மின் இணைப்பு கொடுக்கப்பட்டு அதன் மூலம், நீரை உட்செலுத்தி குளிரூட்டும் முறைகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், அணு உலைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறி வரும் கதிர்வீச்சு, 240 கி.மீ., தெற்கில் உள்ள டோக்கியோ நகரம் வரை பரவியுள்ளது. குழந்தைகளுக்கான எச்சரிக்கை அளவை விட குடிநீரில் இரண்டு மடங்கு கதிர்வீச்சு அயோடின் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, குழாயில் வரும் குடிநீரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என, எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் மக்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, பல நகரங்களில் தண்ணீர் பாட்டில்கள் கிடைக்காததால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.புக்குஷிமா அணு மின் நிலையத்தில் கேபிள்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று ஊழியர்கள், அதிகப்படியான கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

கீரை உள்ளிட்ட காய்கறிகளிலும் கதிர்வீச்சு கலந்திருப்பதால், பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்ய நாடுகள் தடை விதித்துள்ளன.

லிபியாவை தகர்க்கஅடுத்த திட்டம்


டிரிபோலி:லிபிய விமானப்படை தாக்குதலை முறியடித்துள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள், தற்போது அந்நாட்டின் தரைப்படைகளை தாக்க வியூகம் வகுத்துள்ளன.லிபியாவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும் கடாபியை பதவி விலகக்கோரி, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது லிபிய விமானப்படை விமானங்கள் குண்டு வீசியதால் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். கடாபியை பதவி விலகும் படி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தின.

இதற்கிடையே ஐ.நா.,வின் ஒப்புதலோடு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாட்டு படைகள், லிபியா மீது தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் லிபியாவின் விமானப்படை தாக்குதல் ஒடுக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் பீரங்கி மற்றும் ஏவுகணைகளை தவிடுபொடியாக்க அமெரிக்கா தலைமையிலான படைகள் திட்டமிட்டுள்ளன. ஐந்தாவது நாளாக ஜின்டான், ஜாவியா, மிஸ்ரட்டா, அஜ்தாபியா ஆகிய நகரங்களில் கடாபி ராணுவத்தின் தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது.

சிரியா மக்கள் கிளர்ச்சியில் 100 பேர் பலி




24.03.2011: சிரியாவில் அரசுக்கெதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று நாட்டின் தென்பகுதி நகரான தாராவில் ஐய்மான்-அல்-அஸ்வாத் என்ற மனித உரிமை அமைப்பினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர் அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்புப்புபடையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18-ம் தேதி முதல் பொதுமக்கள் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தாஹரா நகரில் ஏற்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து , நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸிலும் மக்கள் போராட்டம் பரவியுள்ளது. இதில் 75 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் புதிய சீர்திருத்த சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும் எனவும் அதிபர் பஷீர் ஆசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

Monday, 21 March 2011

லிபியா மீது தொடர்ந்து இராணுவத் தாக்குதல்








பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியற்றின் தலைமையிலான மேலை நாடுகள் 19ம் நாளன்று லிபியா மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. லிபியாவின் பல இடங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளதை, அந்நாடு உறுதிப்படுத்தியது.லிபியாவிலான முதல் சுற்று ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய மேலை நாடுகள் வெற்றிகரமாக மேற்கொண்டதாக அமெரிக்காவும் பிரிட்டனும் 20ம் நாள் தெரிவித்தன.
லிபியாவில் வாண் பறத்தல் தடுப்புப் பிரதேசத்தை உருவாக்கும் ராணுவ நடவடிக்கை, வெற்றி பெற்றுள்ளது. அரசு எதிர்ப்புப் படையின் கட்டுப்பாட்டிலுள்ள Benghaziஐ மீது லிபிய அரசு தாக்குதல் நடத்துவதை மேலை கூட்டணி படைகள் தடை செய்துள்ளன என்று அமெரிக்க முப்படைத் தலைவர் குழுவின் தலைவர் Michael Mullen கூறினார்.
தேவைப்பட்டால், அடுத்த சில நாட்கள் வான் தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் Liam Fox கூறினார்.
இதுவரை, வான் தாக்குதலில் சுமார் 64 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர் என்று லிபிய அரசு 20ம் நாள் அறிவித்தது.




பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் லிபியா மீது இராணுவ தாக்குதலை 19ம் நாள் துவக்கிய பின், 20ம் நாளும் மூன்று நாடுகள் தொடர்ந்து போர் விமானங்களை அனுப்பி இராணுவத் தாக்குதலை தொடர்ந்தன.
லிபிய வான்பரப்பில் விமானம் பறக்காத பிரதேசத்தை அமைக்கும் இராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றது. அரசு எதிர்ப்பு சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள Benghazi நகரத்தைத் தாக்கிய லிபிய அரசுப் படையின் செயலை, பன்னாட்டு படைகள் தடுத்துள்ளது என்று அமெரிக்க முப்படைத் தலைவர் குழுவின் தலைவர் Michael Mullen தெரிவித்தார்.

தேவைப்பட்டால், அடுத்த சில நாட்களும் வான் தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் Liam Fox தெரிவித்தார்.
தவிரவும், பிரான்ஸ், நார்வே, கத்தார் முதலிய நாடுகளும் போர் விமானங்களை அனுப்பி லிபிய மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கலந்து கொண்டன.







பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் லிபியா மீது இராணுவ தாக்குதலை 19ம் நாள் துவக்கிய பின், 20ம் நாளும் மூன்று நாடுகள் தொடர்ந்து போர் விமானங்களை அனுப்பி இராணுவத் தாக்குதலை தொடர்ந்தன.
லிபிய வான்பரப்பில் விமானம் பறக்காத பிரதேசத்தை அமைக்கும் இராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றது. அரசு எதிர்ப்பு சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள Benghazi நகரத்தைத் தாக்கிய லிபிய அரசுப் படையின் செயலை, பன்னாட்டு படைகள் தடுத்துள்ளது என்று அமெரிக்க முப்படைத் தலைவர் குழுவின் தலைவர் Michael Mullen தெரிவித்தார்.

ஜப்பான் "சுனாமி' எதிரொலி: அணுமின் திட்டங்களுக்கு ஆதரவு குறைகிறது


புனே : ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியால் அங்குள்ள அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜப்பான் மட்டுமில்லாமல், அந்நாட்டை ஒட்டியுள்ள இதர நாடுகளும், கதிர்வீச்சு பயத்தில் சிக்குண்டுள்ளன. அணுமின் உற்பத்தியால் ஏற்பட்டுள்ள இடர்பாட்டை கருத்தில் கொண்டு, பல நாடுகள் தற்போது, மரபுசாரா எரிசக்தி திட்டங்கள் வாயிலாக, மின் உற்பத்தி மேற்கொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.


இதுகுறித்து சர்வதேச நிலையான எரிசக்தி பயிலகத்தின் தலைமை இயக்குனர் ஜி.எம்.பிள்ளை கூறியதாவது:அணுமின் உற்பத்தி குறித்து பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும், இந்த மின் உற்பத்திக்கு பல நாடுகள், அதிக முக்கியத்துவம் அளித்து வந்தன. தற்போது, ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை வெடிப்பு சம்பவங்களால், உலக நாடுகள் மாற்று வழிகளில் மின் உற்பத்தி செய்வது குறித்து சிந்திக்க தொடங்கியுள்ளன. அனல் மின் உற்பத்தி திட்டங்களும், நிலக்கரி பற்றாக்குறையால், மின் உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல் உள்ளன. மேலும், நிலக்கரியின் விலை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் இருப்பு நிலை எத்தனை காலத்திற்கு வரும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அண்மைக்காலத்தில் இதன் விலை, 20 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவிலுள்ள அணு மின் திட்டங்கள், மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. ஆனால், சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான முறையில் அணுமின் திட்டங்களை செயல்படுத்தி வந்த ஜப்பானின் நிலையே,மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜப்பான் நாடே, அணுமின் திட்டங்களால் அதிக இடர்பாட்டை கண்டுவரும் நிலையில், இத்திட்டம் இந்தியாவில் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பது புலப்படவில்லை.மேற்கண்டவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில், அனைத்து விதத்திலும் மரபுசாரா வகையில் மேற்கொள்ளப்படும் மின் திட்டங்களே மிகவும் பாதுகாப்பானது என்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில், அணுமின் திட்டங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தி, 5,000 மெகாவாட் என்றளவில் தான் உள்ளது. அதேசமயம், காற்றாலைகள் வாயிலான மின் உற்பத்தியின் பங்களிப்பு 10 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.இவ்வாறு பிள்ளை கூறினார்.


அணுமின் திட்டங்களுக்கான திட்ட செலவு குறித்து, இதுவரை எந்தவிதமான புள்ளி விவரங்களும் வெளியிடப்பட்டதில்லை. இதற்கான செலவினங்கள் குறித்தும் தெரியாமலேயே உள்ளது.மரபுசாராத வகையில், பல்வேறு வகைகளில் நம்மால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குறிப்பாக, காற்றாலை திட்டங்கள் வாயிலாக, வரும் 2020ம் ஆண்டிற்குள், 50 ஜிகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்ய முடியும்.


இதுகுறித்து, "காற்றாலை மின் திட்டங்கள் 2011' என்ற அமைப்பின் ஆலோசகரும், சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான துள்சி டாண்டி கூறியதாவது :குறைந்த செலவில், அதிகளவில் மின் உற்பத்தி செய்யும் வகையிலான மரபுசாராத மின் திட்டங்களே நம் நாட்டிற்கு மிகவும்அவசியமாக உள்ளன.இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், மக்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை. இதுபோன்ற மின் திட்டங்களால், உலக வெப்பமயமாதலும் தடுக்கப்படுகிறது.சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இந்தியாவும், சீனாவும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. இச்சூழ்நிலையில், மரபுசாரா எரிசக்தி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு துள்சி டாண்டி கூறினார்.

Tuesday, 15 March 2011

சமையல் உப்பை பயன் படுத்தினால் புற்றுநோய் ??


அணுக்கதிர் வீச்சு இக்கு உட்பட்ட பசுவின் பாலை அருந்தும் போது அதிக பாதிப்பு வரும். கதிர்வீச்சில் உள்ள அயோடின் மூலகத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளும் பசு அல்லது எருமை அதன் பாலில் அப்படியே அதை திருப்பி தரும். இது முன் ரஷ்யாவில் உள்ள செர்னோபிளில் நடந்திருக்கிறது. மேற்கண்ட செய்தி தினமலர் செய்தி (16.03.2011).

மேற்கட செய்தி படி பார்த்தால் ஜப்பான் அணு கரு உலை வெடிப்பு நிகழ்ந்த பகுதில் இருந்து மீன் கூட்டங்கள் எந்த எந்த நாடு எல்லைக்கு சென்றாலு அந்த நாடு மக்களுக்கு உணவாகி அந்த நாடு மக்களுக்கும் புற்று நோயை உண்டு செய்யும் வாய்புகள் அதிகம் அல்லவோ . அது மட்டு இன்றி அணு கதிவீசுக்கு உட்பட்ட கடல் நீரும் அணு கழிவுக்கு உட்பட்ட கடல் நீரும் கடல் நீரோட்டத்தின் காரணமாக அண்டை நாடுகளின் கடலில் கலக்கும். இதில் உள்நாட்டு மக்களுக்கும் பதிப்பு ஏற்படும். எப்படி எனில் மக்கள் பயன் படுத்தும் சோடியம் க்ளோரிடு என்ற சமையல் உப்பு கடல் நீரில் இருந்து தயார் ஆகிறது. அதன் மூலமாக மக்களை நோக்கி கடல் நீரில் உள்ள கதிர் வீச்சுக்கு உட்பட்ட அயோடின் மூலக்கூருகள் சமையல் உப்பு மூலமும் பரவ வாய்புகள் உள்ளன. சமையல் உப்பை பயன் படுத்தினால் புற்றுநோய் என்றால் என்ன ஆவது ? இதனை பற்றி இப்போதே இந்திய விஞ்ஞாயனிகள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் .

ஜப்பானைச் சுற்றி கதிர்வீச்சின் அளவு அதிகாரிக்கும்

உலக நாடுகள் உஷார்:

ஜப்பானைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், "ஏர் சீனா' விமான நிறுவனம் டோக்கியோவுக்கான விமான சேவையை ரத்து செய்துவிட்டது. ஜப்பானில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பாதிக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியேறும் படி உலக நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

குழந்தைகள் எதிர்காலம் என்னவாகும்? பிரதமர் செயலுக்கு எதிர்ப்பு ஜப்பான் தற்போது சந்தித்து வரும் அவலங்கள் எளிதில் தீர்க்க முடியாதது என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* அணு உலைகள் வெடிப்பு குறித்த போதுமான தகவல்களை பிரதமரும், டாய் இச்சியை இயக்கி வரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனியும் தெரிவிக்கவில்லை என, ஜப்பானிய பத்திரிகைகள் குற்றம் சாட்டி வருகின்றன.
* மோசமான இந்த அணு உலை வெடிவிபத்தால், தைராய்டு, எலும்புகளுக்கிடையில் உள்ள மஜ்ஜை ஆகியவற்றில் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
* அணுக்கதிர் வீச்சு மனித உடலில் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தி புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பில் இருந்து தப்பும் அளவுக்கு இயல்பாகவே உடலில் செல் சிதைவு ஏற்படாமல் இருந்தால் தப்பலாம்.
ஆனால், குழந்தைகள், கருவில் உள்ள சிசுக்கள் பாதிக்கப்படும். குறிப்பாக பசுவின் பாலை அருந்தும் போது அதிக பாதிப்பு வரும். கதிர்வீச்சில் உள்ள அயோடின் மூலகத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளும் பசு அல்லது எருமை அதன் பாலில் அப்படியே அதை திருப்பி தரும். இது முன் ரஷ்யாவில் உள்ள செர்னோபிளில் நடந்திருக்கிறது.
* இந்த பூகம்பத்தால் கட்டடங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு சேதம் 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி டாலர். இன்னமும் சேதாரங்கள் முழுவதும் மதிப்பீடு செய்யப்படவில்லை. பொருளாதார பின்னடைவை சந்திக்கிறது ஜப்பான்.
* உலகளவிலான கார் மற்றும் கப்பல் தயாரிப்பு நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜப்பானில் இருந்து தங்கள் உதிரிபாகங்களுக்கான வினியோகம் கிடைக்காமல் தவித்து வருகின்றன. ஜப்பானில் இயங்கி வரும் பல உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
* ஜெர்மனியில் ஏழு அணு உலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

Friday, 11 March 2011

பூமிக்கு அருகே சந்திரன்


நியூயார்க்:

பூமிக்கு அருகே சந்திரன், கடந்த 19 ஆண்டுகளுக்குப் பின், வரும் 19ம் தேதி 2,21,567 கி.மீ., தூரத்தில் வருகிறது. எப்போதெல்லாம் சூரியனுக்கு அருகே சந்திரன் வருகிறதோ, அப்போதெல்லாம் சுனாமி, எரிமலை வெடிப்பு, பயங்கர அழிவுகள் ஏற்படுகின்றன என்று, விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.பூமிக்கு அருகில் சூரியன் இம்முறை வருவதற்கு, "சூப்பர் மூன்' என்று பெயரிட்டுள்ளனர். இதனால், பூமியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்; பகல் அதிகமாக இருக்கும். சந்திரன் உருவத்தில் பெரிதாக காணப்படும்.விஞ்ஞானிகள் கணித்ததை போல், ஜப்பானில் சுனாமி கோரம் அரங்கேறியுள்ளது. கடந்த 1947, 1974, 1992, 1995, 2004 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போதும் இதுபோன்ற கோர சம்பவங்கள் நடந்துள்ளன. 1974 ல் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போது ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரை புரட்டிப் போட்டது. 1995ம் ஆண்டு ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது