பிலிப்பைன்ஸிலுள்ள பான்டுகான் நகரின் அருகேயுள்ள மலைப்பகுதியில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் சிக்கிப் பலியானார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதி தீவில் உள்ள பான்டுகான் நகரம். இதன் அருகேயுள்ள மலைப்பகுதியில் திடீரென மலைச்சரிவு ஏற்பட்டது. தங்கம் முதலான பல உலோகங்களின் சுரங்கங்கள் மிகைந்துள்ள இப்பகுதியில் ஏற்பட்ட இந்த மலைச்சரிவில் பல வீடுகள் புதைந்தன.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு இராணுவம் விரைந்தது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இதுவரை 25 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. மேலும் 100 க்கு மேற்பட்டோரைக் காணவில்லை என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் எனத்தெரிகிறது.
பிலிப்பைன்ஸில் கடந்த மாதம் இறுதியில் வீசிய புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 1,200 க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.