Total Pageviews

Blog Archive

Saturday, 7 January 2012

இந்திய ராணுவ அதிகாரிக்கு சீனா விசா மறுப்பு

புதுதில்லி, ஜன.6: இந்திய-சீன பாதுகாப்பு பரிவர்த்தனை திட்டத்தின்படி சீனாவுக்கு செல்லவிருந்த இந்திய ராணுவ அதிகாரிக்கு விசா அளிக்க அந்நாடு மறுத்துவிட்டது. இதையடுத்து இந்திய ராணுவ அதிகாரிகள் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்திய ராணுவ அதிகாரிகள் 30 பேர் கொண்ட குழு, பாதுகாப்பு பரிவர்த்தனை தொடர்பாக ஜனவரி 10-ம் தேதி முதல் 4 நாள்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. குழுவில் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பாங்கிங் என்ற ராணுவ அதிகாரியும் இடம்பெற்றிருந்தார். அவருக்கு சீனா வருவதற்கான விசா தருவதற்கு அந்நாடு அனுமதி மறுத்துவிட்டது.
 அருணாசலப்பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று நீண்ட நாள்களாக சீனா உரிமை கொண்டாடி வருவதே இதற்குக் காரணமாகும். சீனாவின் முடிவையடுத்து, இந்திய ராணுவ அதிகாரிகளின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010-ம் வருடத்திலும் இதே போன்று ஜம்மு-காஷ்மீரில் வடக்கு மண்டலத் தளபதியாக பணிபுரிந்த லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ஜஸ்வாலுக்கு விசா தர சீனா அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய மாணவரைக் கொன்றவனுக்கு கடுமையான தண்டனை : டேவிட் கேமரூன்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வெள்ளியன்று அனுஜ் பித்வேயின் பெற்றோர்களை சந்தித்து பேசும் போது இந்த கொடுஞ்செயல் செய்தவனுக்கு கடும் தண்டனை அளிக்க‌ப்பட வேண்டும் என கூறினார். இதுகுறித்து மேலும் கேமரூன் பேசுகையில், அனுஜ் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மான்செஸ்டர் காவல்துறையினர் வழங்குவார்கள் என உறுதியளித்தார்.




மேலும், பித்வேயின் பெற்றோர் நேற்று மான்செஸ்டரின் சால்போர்டு பகுதியில் பித்வே கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றனர். பின் அவர்கள் அளித்த பேட்டியில், பித்வேயின் கொலைக்கு இப்பகுதி மக்களை குற்றம் சொல்ல முடியாது. கொலை செய்த நபரைத் தான் குற்றம் சாட்ட வேண்டும் என்றனர். பித்வேயின் உடல் இரண்டாவது பிரேத பரிசோதனை முடிந்து இறுதிச் சடங்குகள் செய்யும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்திடம் இருந்து உடலைப் பெற்று அவர்கள் இன்று நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பித்வே படித்து வந்த லங்காஷர் பல்கலைக்கழகம் அவரது பெற்றோருக்கு தேவையான நிதியுதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில் ராட்சத பலூன் வெடித்து விபத்து : 11 பேர் பலி!

வெலிங்டன்: நியூசிலந்தில் ராட்சத பலூன் வெடித்த விபத்தில் அதில் பயணம் செய்த 11 பேரும் உயிரிழந்தனர். நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் அருகே உள்ள கார்டர்டான் நகரம் அருகே இன்று காலை ஏழரை மணி அளவில் இந்த விபத்து நடந்தது. பலூன், பயணத்தை துவக்கிய அடுத்த 10வது நிமிடத்தில் அதிலிருந்து 10 மீட்டர் உயரத்திற்கு தீ ஜூவாலைகள் எழுந்தது. 




உயிரிழந்தவர்கள் க்ரேட்டர்  வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. ராட்சத பலூனில் பறப்பதற்கு ஏற்ற தெளிவான வானிலை இருந்தபோதும், பலூனில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பலூன் தீப் பிடித்து கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு : 20 பேர் பலி!

அபுஜா: கிறிஸ்துவ மக்கள் கூட்டத்தில் மர்ம நபர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் 20 பேர் பலியானார்கள். இந்நிகழ்ச்சி அப்பகுதியில் பொரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின்  வடகிழக்கு பகுதியில் டவுன் ஹாலில் கிறிஸ்துவ மக்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் ஒருவன் 'காட் இஸ் கிரேட்' என்று கூறிய படியே, கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான். இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியாயினர், 50க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், கிறிஸ்துவ மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று  தெரிவித்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ஈரான் போர் பயிற்சி : மேற்கத்திய நாடுகள் பீதி!

டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் ஈரான் கடற்படை பயிற்சியில் ஈடுபடப் போவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் அச்சமுற்றிருப்பதாக தெரிகிறது.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் நீரிணையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி 10 நாட்கள் ஈரான் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்தப் பயிற்சியும், ஏவுகணை சோதனையும் மேற்கத்திய நாடுகளில் பதட்டத்தை ஏற்படுத்தின. 

இந்நிலையில், ஈரான் செய்தி நிறுவனம் ஒன்று நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், பிப்ரவரி மாதம் மீண்டும் ஈரான் கடற்படை பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் போர் பயிற்சியில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மேற்கத்திய நாடுகள் மீண்டும் பதட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

ஈரான் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது : மேற்கு ஈரான் மீது போர் அச்சுறுத்தல்


ஈரான் கடற்படைஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் போர்ப் பயிற்சியில் ஈடுபடப்போவதாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கு சார்ந்த நேட்டோ அணி லிபியாவை ஆக்கிரமித்து அந்த நாட்டின் வழங்களை சூறையாட தனது சர்வாதிகார பொம்மை அரசை நியமித்த பின்னர் ஈரான் நாட்டின் மீது போர் அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறது.
இந்த சூழலில் இடம்பெறும் இப் பயிற்சி நடவடிக்கை குறிப்பிடத்தக்கது.
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் நீரி ணையில், கடந்த மாத இறுதி தொடக்கம் ,10 நாட்கள் ஈரான் கடற்படை போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது, மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
இந்தப் பயிற்சியும், ஏவுகணைச் சோதனையும், மேற்குலகில் பதற்றத்தைக் கிளப்பின. இந்நிலையில், ஈரான் செய்தி நிறுவனம் ஒன்று, நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், பெப்ரவரி மாதம், மீண்டும் ஈரான் கடற்படை, பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில், போர்ப் பயிற்சியில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே அமைதியின்மையையும் போரையும் ஏற்படுத்துவதாக அப்பிராந்திய மக்கள் கருதுவதாக அமரிக்கநிறுவன மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்த்துள்ளது.

Friday, 6 January 2012

புதிய தகவல் - அமெரிக்காவின் டிரோன் உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியது எப்படி?.


   

மெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக் கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. 
அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது. இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை. காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும். ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை. (மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள் இந்த விடயத்தை சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ - 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப்பட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும். குறிப்பிட்ட விமனம் உள்வாங்கும் GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது.
புரியவில்லையா? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது. அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட்(தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும். ஈரான் முதலில் ஒருவகையன ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது. அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர். உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர். புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்.. தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது). இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது.

அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது. பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது. இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றைமட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை. அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான்.
ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்டகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளது.

காரைக்கால் கடலில் அரியவகை புள்ளி நண்டு அதிக அளவில் சிக்கியது

காரைக்காலில் : தானே புயலுக்கு பின் கடலுக்கு சென்ற காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வலையில் அரிய வகை புள்ளி நண்டு அதிக அளவில் கிடைக்கிறது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவ்வகை நண்டுகள் கிலோ ஸீ200க்கு சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். தானே புயலுக்கு பின் கடலுக்கு சென்ற, காரைக் கால் மாவட்ட மீனவர்கள், கடந்த 2 நாட்களாக கரை திரும்பி வருகின்றனர். இவர்களில் நேற்று காலை திரும்பிய பெரும்பாலான மீனவர்கள் வலையில் அரிய வகை புள்ளி நண்டுகள் அதிக அளவில் கிடைத்திருந்தது. 

சாதாரண நண்டுகள் கிலோ ஸீ100க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், புள்ளி நண்டுகள் கிலோ ரூ.180 முதல் 220 வரை விற்பனையானது. புள்ளி நண்டு குறித்து மீனவர்கள் கூறுகையில், ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் வலையில் இதுபோன்ற புள்ளி நண்டுகள் கிடைக்கும். தற்போது புயலினால் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அதிக அளவில் கிடைத்துள்ளது. இந்த நண்டுகள் சாதரண நண்டுகளை விட அதிக சுவையானது. எனவே இதை மொத்த வியாபாரிகள் வாங்கி சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வார்கள் என்றனர்.

புதிய முறைப்படி 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெற வேண்டுமா...

அலைந்து திரிந்து, 6 மாதங்களுக்கு பின்பு பாஸ்போர்ட் வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது எந்த அலைச்சலுமின்றி, உட்கார்ந்த இடத்திலிருந்தே 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் நம் கையில் வந்து சேர்ந்தால் மகிழ்ச்சி தானே! 

முன்பெல்லாம் ஒரு பாஸ்போர்ட்டை விண்ணப்பித்து விட்டு, பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதாய் இருக்கும். ஆனால் புதியதாக நிறுவப்பட்ட 'பாஸ்போர்ட் சேவக்கேந்திரா' என்ற நிறுவனத்தின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள்ளேயே பெற்று விடலாம். 

இதுகுறித்து, ரீஜினல் பாஸ்போர்ட் அதிகாரி கே. ஸ்ரீகர் ரெட்டி கூறுகையில், 'வழக்கமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, வண்ணப்பதாரரின் ஆவணங்கள் அனைத்தும், காவல்துறை அதிகாரிகளின் சரிபார்த்தலுக்காக அஞ்சல் முறையில் அனுப்பப் படும். அதனால், அதிக நாட்கள் ஆகும். ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய முறையின்படி, அனைத்தும் ஆன்லைன் முறை என்பதால் பாஸ்போர்ட்டினை கையில் பெற அதிகப்பட்சமாகவே 30 நாட்கள் தான் ஆகும்' என்று கூறினார்.  

மேலும் இதுகுறித்த எந்த கேள்வியையும், www.passportindia.gov.in என்ற இணயதளம் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

மெக்சிகோவிற்கு படை எடுத்துள்ள பட்டாம் பூச்சிகள் !

கனடா மற்றும் வடஅமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான பட்டாம் பூச்சிகள் மெக்சிகோவிற்க்கு படையெடுத்து உள்ளன. அமெரிக்காவின் மத்திய மெக்சிகோவில் உள்ள வனப்பகுதியில் சுமார் 13 ஹெக்டர் நிலப்பரப்பு பட்டாம் பூச்சிகளால் சூழ்ந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டாம் பூச்சிகள் 2000 மைல் துரம் வரை இந்த வனப் பகுதிக்கு பறந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பருவ நிலை சூழல் காரணமாக பட்டாம் பூச்சிகள் வசிப்பதற்கு தேவையான இதமான சூழல் அங்கு நிலவுவதால் பட்டாம் பூச்சிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டை விட தற்போது பட்டாம் பூச்சிகளின் வருகை மிகவும் குறைவு எனவும்  ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

பட்டாம் பூச்சிகளின் இனம் அழிவதற்கு காரணம் சுற்றுப்புறச்சூழல் மாசுப்பாடு தான் எனவும் எனவே சுற்றுப்புற சூழலின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் விஞ்சானிகள் தெரிவித்து உள்ளனர்.

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்!!

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.  அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.   திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

இலங்கையில் அதிகம் கொல்லப்படும் திமிங்கிலங்கள்!

ஸ்ரீ லங்கா: இலங்கை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் உள்ள திமிங்கிலங்களை கணக்கெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, தேசிய கடலாய்வு திணைக்கத்தின் தலைவர் ஹிரான் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.கப்பல்களாலேயே அதிக திமிங்கிலங்கள் கொல்லப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எச்ஐவிக்கு முதல் எதிரி மனிதனின் உடம்பு தான்!

லண்டன் : மனிதர்கள் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும் தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே பிரதானம். மனிதரின் உடலில் பரவும் எச்.ஐ.வி. (ஹியூமன் இம்யுனோ டெபீஷியன்சி வைரஸ்) கிருமி, ஆணிவேரையே அசைப்பதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க ஆரம்பிக்கிறது. உடலில் எதிர்ப்பு ஆற்றல் படிப்படியாக குறைகிறது. இதுவே எச்.ஐ.வி. பாதிப்பு அல்லது எய்ட்ஸ் எனப்படுகிறது. 

ரத்தம் செலுத்துதல், ஸ்டெரிலைஸ் செய்யாத ஊசி பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பரவும் என்றாலும் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முக்கிய காரணம். உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிது புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தீவிரமாகி ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலக அளவில் அதிக உயிர் பலி வாங்கும் தொற்று நோயாக எய்ட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பிரசாரம் நடக்கிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி (இன்று) உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளும் தீவிரமாக நடக்கின்றன. எச்.ஐ.வி. பாதிப்பு பற்றி இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலை, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. உடலில் எச்ஐவி கிருமிகள் பரவுவதை நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன் பொருள் ஒன்றே தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்தது. இதுபற்றி தலைமை ஆராய்ச்சியாளர் மிகேல் வெப் கூறியதாவது:

எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால், எச்ஐவியின் குணம் பற்றி முழுதாக தெரிந்துகொள்வது அவசியம். லூக்கோசைட்ஸ் எனப்படும் ரத்த வெள்ளை அணுக்கள்தான் எதிர்ப்பு சக்தி செல்கள். இவற்றில் எச்ஐவி கிருமிகள் பல்கிப் பெருகுவதால் நோய் தீவிரம் அடைகிறது. நம் உடலிலேயே இருக்கும் எஸ்ஏஎம்எச்டி1 எனப்படும் புரோட்டீன், எச்ஐவி கிருமிகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுப்பதாக அமெரிக்க, பிரான்ஸ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். 

எச்ஐவிக்கு சங்கிலி இணைப்பு போன்ற இணைப்பை தந்து அதை பலப்படுத்தும் டீஆக்சி நியூக்ளியோடைட் பொருளை எஸ்ஏஎம்எச்டி1 புரோட்டீன் தகர்த்து செயலிழக்க செய்வதை தற்போது கண்டுபிடித்துள்ளோம். இதை மருந்தாக பயன்படுத்தினால், எச்ஐவி பரவாமல் தடுத்துவிடலாம். அதுபற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது. இவ்வாறு மிகேல் கூறினார்.

ஈராக்கில் ஷியா பிரிவினரை குறிவைத்து தாக்குதல்:


ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நேற்று (ஜன.5) ஷியா பிரிவினரை குறி வைத்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் கடந்த டிசம்பர் மாதம் வாபஸ் பெறப்பட்டு அங்கிருந்து வெளியேறியது. அதை தொடர்ந்து ஈராக்கில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெற தொடங்கி விட்டன. தலைநகர் பாக்தாத் அருகே நேற்று ஷியா பிரிவினரை குறி வைத்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பாக்தாத் அருகேயுள்ள காதிமியா என்ற இடத்தில் ஷியா பிரிவினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.  அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 27 பேர் உயிர் இழந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் பாக்தாத் அருகேயுள்ள அர்பாசீன் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த தீவிரவாதி குண்டுகளை வெடிக்க செய்து தற்கொலை தாக்குதல் நடத்தினான்.
அதில், 45 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் கர்பாலா நகரில் உள்ள தங்கள் வழிபாட்டு தலத்துக்கு ஊர்வலமாக சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், சன்னி பிரிவை சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
கார் குண்டு தாக்குதல்கள் குறித்து ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் குவாசிம் அல் மவுசவி கூறும்போது, மக்களிடையே பீதியையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்கிடையே, தாக்குதல்கள் நடந்த இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் பிறந்த சீனக் குழந்தை!

ஷாங்காய்: விமானத்தில் பயணம் செய்த சீன பெண்ணுக்கு, விமானத்திலேயே அழகிய குழந்தை பிறந்தது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இருந்து சென்ற விமானத்தில் பெங்யூ என்ற 24  வயது பெண் பயணம் செய்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏறபட்டது. சீன விமானங்களில் பணிப்பெண்களுக்கு  பிரசவம் பார்க்கும் பயிற்சியும் அளிக்கப்படுவது உண்டு.

எனவே, விமான பணிப்பெண்களே அவருக்கு பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை 3 கிலோவுடன் ஆரோக்கியமாக இருந்தது. விமானம் தரை இறங்கியதும் தாய்- குழந்தை  இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

24 மணி நேரம் இடைவிடாமல் ஒளிபரப்பு விளம்பர குறுக்கீடு இல்லாமல் 4 ஆக்ஷன் மூவி சேனல்கள்

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் 24 மணி நேர ஆக்ஷன் மூவி சேனல்களை சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனம் தொடங்கியுள்ளது. 
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனம், புதிதாக 4 ஆக்ஷன் மூவி சேனல்களை நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. ‘சன் ஆக்ஷன்’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெமினி ஆக்ஷன்’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘சூரியன் டி.வி’ என்ற பெயரில் கன்னடத்திலும், ‘சூர்யா ஆக்ஷன்’ என்ற பெயரில் மலையாளத்திலும் துவங்கப்பட்டுள்ள இந்த சேனல்கள் 24 மணி நேர சேனல்கள். விளம்பர இடையூறு இல்லாத இந்த மூவி சேனல்கள், கட்டண சேனல்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், முதல் முறையாக விளம்பரம் இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்படும் 24 மணி நேர ஆக்ஷன் மூவி சேனல்கள் என்ற பெருமையை இந்த புதிய சேனல்கள் பெறுகின்றன. இந்த புதிய சேனல் களையும் சேர்த்து, சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனத்தில் உள்ள சேனல்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 10 தமிழ் சேனல்கள், 8 தெலுங்கு சேனல்கள், 7 கன்னட சேனல்கள், 4 மலையாள சேனல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தி வைத்திருந்த பாகிஸ்தான் வீரர்கள் 15 பேர் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத் : தாங்கள் கடத்தி வைத்திருந்த பாகிஸ்தான் படை அதிகாரிகள் 15 பேரை கொன்று விட்டதாக தலிபான் தீவிரவாதிகள் நேற்று அறிவித்தனர். பாகிஸ்தானில் மறைந்திருந்த தீவிரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் கண்டுபிடித்து கொன்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்துக்கு நெருக்கடி அதிகரித்தது. தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டுமென அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்யத் தொடங்கியது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுடன் அந்நாட்டு உளவு நிறுவனம்(ஐ.எஸ்.ஐ) அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இதை தலிபான் தீவிரவாதிகளில் சிலர் மறுத்தனர். மேலும், அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, கடந்த மாதம் 22ம் தேதியன்று ஆப்கனிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் படை அதிகாரிகள் 15 பேரை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்திருந்தனர். அவர்களை கொன்று விட்டதாக நேற்று தீவிரவாதிகள் அறிவித்தனர். 

தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் அசானுல்லா அசான் அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறுகையில், ‘நாங்கள் கடத்திய 15 அதிகாரிகளையும் சுட்டுக் கொன்று, உடல்களை வடக்கு வாஜிரிஸ்தானில் போட்டிருக்கிறோம்’ என்றார்.  இது பற்றி, விசாரித்து வருவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட வீரர்களின் குண்டு துளைத்த உடல்கள்  நிர்வாண நிலையில் வடக்கு வஜிரிஸ்தான் ஸ்பின் தல் பகுதி வயல்வெளியில் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டன.

எகிப்தில் முன்னாள் அதிபருக்கு தூக்கு?

கெய்ரோ : எகிப்தில் சர்வாதிகார ஆட்சி செய்த முபாரக்கிற்கு எதிராக கடந்த ஆண்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. புரட்சியின் போது போராட்டம் செய்தவர்கள் மீது ராணுவத்தை ஏவி விட்டதால் அப்பாவிகள் பலர் பலியாகினர். தொடர்ந்து போராட்டம் வலுப்பெறவே ஆட்சியை விட்டு விலகிய அவர் தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் உள்ளார். 

முபாரக் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு தற்போது நடந்து வருகிறது. போராட்டத்தின் போது முபாராக் நினைத்திருந்தால் மக்கள் இறப்பை தடுத்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் பலரின் இறப்புக்கு காரணமான முபாரக்கிற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தலைமை வழக்கறிஞர் சியுலிமன் தெரிவித்தார்.

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 70 பேர் பலி

பாக்தாத் : ஈராக்கில் இருந்து அமெரிக்க படை முற்றிலும் வெளியேறிய பிறகு நடந்த தாக்குதல்களில் மிக பயங்கர தாக்குதல் நேற்று நடந்தது. ஒரே நேரத்தில் பல இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 70 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  ஈராக் அதிபர் சதாம் உசேன், அணுஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார், ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தார் என்ற குற்றச்சாட்டுகளை கூறி கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் ஈராக்கில் ஊடுருவின. 

அதன்பின், சதாம் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் அவர் தூக்கிலிடப்பட்டார். எனினும், அமெரிக்க படைகள் அங்கேயே தங்கி, தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டது. இந்நிலையில், அமெரிக்கா தனது படையை கடந்த மாதத்துடன் முற்றிலும் வாபஸ் பெற்றது. அது முதல் ஈராக்கில் அரசுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தன. இரு பிரிவினரிடையே அதிகார போட்டி நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாகுபா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். இந்த நிலையில், நாசிரியா நகரில் மத யாத்ரீகர்கள் மீது குறி வைத்து தீவிரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 44 பேர் உடல் சிதறி பலியாகினர்.

 அடுத்த சில மணி நேரத்தில் தலைநகர் பாக்தாத் உட்பட சில இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் சிக்கி 26 பேர் இறந்தனர். மாநில அரசு இணைய தளத்தில், ‘கர்பாலா புனித நகரை நோக்கி யாத்ரீகர்கள் நடந்து சென்றபோது சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க படை வெளியேறிய பிறகு உள்நாட்டு குழப்பம், அரசியல் நிலையற்றதன்மை, தொடர் தீவிரவாத தாக்குதல் என ஈராக் முழுவதும் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானை தாக்குவது சீனத்தை தாக்குவதற்கு ஒப்பானது: யு.எஸ்.இடம் சீனா கண்டிப்பு

அல் கய்டா தலைவர் ஒசாமா பின் லேடனை கொல்ல பாகிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோல மற்றுமொருமுறை அமெரிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று அந்நாட்டிடம் சீனா கண்டிப்புடன் கூறியுள்ளதென சீனா நாட்டின் செய்தி கூறுகிறது.

கடந்த வாரம் வாஷிங்டனில் யு.எஸ்.-சீனா இராணுவ, பொருளாதார பேச்சுவார்த்தையின் போது சீனா இவ்வாறு தெரிவித்தாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் நியூஸ் டெய்லி எனும் நாளிதழ் தெரிவிக்கிறது.

பாகிஸ்தானின் இறையாண்மையை யு.எஸ்.மதிக்க வேண்டும் என்றும், அதை மீறி பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதுவோம் என்று நேரடியாக, ஐயத்திற்கிடமின்றி யு.எஸ். அதிகாரிகளிடம் சீனா அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்த சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராசா கிலானியிடம், சீன பிரதமர் வென் ஜியாபாவோ இத்தகவலை கூறியதாகவும் அச்செய்தி கூறுகிறது.

பாகிஸ்தான், சீன பிரதமர்கள் 45 நிமிடம் பேசியதாக அச்செய்தி கூறுகிறது.

பின் லேடன் இருப்பிடத்தை ஐ.எஸ்.ஐ. அதிகாரி காட்டிக் கொடுத்தார்?

பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.-யைச் சேர்ந்த ஒருவர் பின்லேடன் இருப்பிடத்தை பணத்திற்கு ஆசைப்பட்டுக் காட்டிக் கொடுத்தார் என்று ஹில்ஹவுஸ் என்ற பெண்மணி தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அல் கய்டா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின் லேடன் அமெரிக்கக் கப்பற்படையினரான நேவி சீல் படையினரால் கொல்லப்பட்டு அவரது உடலை கடலில் அமிழ்த்தினர் என்ற செய்திகள் வெளியானது.

ஆனால் இந்தப் படுகொலை பாகிஸ்தான் உளவுப்பிரிவ்னருக்குத் தெரியாமல் நடந்தது என்றே தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஹில்ஹவுஸ் என்ற அந்தப் பெண்மணி 'த ஸ்பை ஹூ பில்டு மீ' என்ற வலைப்பதிவுத் தளத்தில் பாகிஸ்தான் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் 25 மில்லியன் டாலர்கள் தொகைக்கு ஆசைப்பட்டு பின் லேடன் இருப்பிடத்தைக் காட்டி கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்க்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டதாக அந்த வலைப்பதிவு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

'பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படாது'

பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படாது என்று அந்நாட்டு இராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கயானி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் தற்போதைய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, இராணுவம் ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதாகவும், இதற்கு பதிலடியாக அவ்வாறு இராணுவம் ஆட்சியை கைப்பற்றினால் அமெரிக்க இராணுவத்தை அனுப்பி அதனை முறியடிக்க வேண்டும் என்று அதிபர் சர்தாரி, அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் செய்தி வெளியானது. 

இது குறித்த தகவல் வெளியானதிலிருந்தே பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. 

இந்நிலையில்,பாகிஸ்தானில் இராணுவ புரட்சியோ அல்லது முன்கூட்டியோ தேர்தல் வராது என கயானி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கிலானி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க இராணுவ தலைமை தளபதி பர்வேஷ் கயானியும், இதர உயர் இராணுவ அதிகாரிகளும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

தற்போது பதவி வகிக்கும் அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2013) வரை உள்ளது. எனவே இந்த ஆட்சி தனது பதவி காலத்தை முழுமையாக முடிக்க இராணுவ அதிகாரிகள் விரும்புவதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கிறது.

பத்மநாபர் கோவில் பாதுகாப்பு: கேரளா அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

பல்லாயிரம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் உள்ள பத்மநாபர் கோவிலுக்கு பாதுகாப்பு அளிக்கும் விடயத்தில்,நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.கே. பட்நாயக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,கேரள அரசின் வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய முயன்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,"உங்களது விரிவான அறிக்கைகளும், பிரமாணப் பத்திரங்களும் எங்களுக்குத் தேவையில்லை.கோவில் பாதுகாப்பை பலப்படுத்த உங்களுக்கு 3 மாத அவகாசம் கொடுத்தோம். ஆனால் நீங்கள் எதுவும் செய்யவில்லை.இது ஏற்றுக்கொள்ள முடியாதது' என்றனர்.

பத்மநாபர் கோவிலின் ரகசிய அறைகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. 

இந்த நிலையில், பொக்கிஷங்களுக்கு தகர்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை என்பதால் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா நடவடிக்கை இந்திய வரைபடத்தின் தவறை திருத்தி சீரானது


வாஷிங்டன் : அமெரிக்க அரசின் இணையதளத்தில் இந்தியா குறித்த வரைபடம் தவறாக குறிப்பிடப்பட்டதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவற்றை சரி செய்து புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தியாவின் வரைபடமும் இடம் பெற்றுள்ளது. இதில், இந்தியாவின் எல்லைகள் தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தன. குறிப்பாக, காஷ்மீர், பாகிஸ்தான் பகுதியில் இருப்பது போன்று, வரைபடத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரைபடத்தில் இடம் பெற்றிருந்த தவறுகள் சரி செய்யப்பட்டு, புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலான்ட் கூறுகையில்,"சரி செய்யப்பட்ட புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். காஷ்மீர் குறித்த விவாரத்தில் எங்களுக்கு எதுவும் தொடர்பு இல்லை. வரைபடம் குறித்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது' என்றார்.

பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு: 25 பேர் பலி!


பிலிப்பைன்ஸிலுள்ள பான்டுகான் நகரின் அருகேயுள்ள மலைப்பகுதியில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் சிக்கிப் பலியானார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதி தீவில் உள்ள பான்டுகான் நகரம். இதன் அருகேயுள்ள மலைப்பகுதியில் திடீரென மலைச்சரிவு ஏற்பட்டது. தங்கம் முதலான பல உலோகங்களின் சுரங்கங்கள் மிகைந்துள்ள இப்பகுதியில் ஏற்பட்ட இந்த மலைச்சரிவில் பல வீடுகள் புதைந்தன.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு இராணுவம் விரைந்தது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இதுவரை 25 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. மேலும் 100 க்கு மேற்பட்டோரைக் காணவில்லை என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் எனத்தெரிகிறது.
பிலிப்பைன்ஸில் கடந்த மாதம் இறுதியில் வீசிய புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 1,200 க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.


Thursday, 5 January 2012

அணுசக்தி ஏவுகணை ஈரான் பரிசோதனையில் அபார வெற்றி


டென்மார்க் 02.01.2012 திங்கள்
ஈரானிய அரசு உலக நாடுகளின் அனைத்து எச்சரிக்கைகளையும் அடியோடு புறந்தள்ளி அணுசக்தி உருவாக்கப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஓர் அணு குண்டைத் தயாரிக்கும் பணிகளில் முக்கிய அம்சமாக யுரோனிய பிரிப்பின் கடுமையான பணிகளை ஈரானிய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்கள். யுரேனிய பிரிப்பினால் உண்டாகும் அணுசக்தி வெளியேற்றத்தின் தாக்கங்களை தாம் அறிந்து கொள்வதற்காகவே இதை செய்வதாக ஈரானிய அணுசக்தி மையத்தின் இணையப்பக்கம் தெரிவிக்கிறது. யுரேனியத்தை வெப்பமாக செயற்பட வைப்பதன் மூலம் வைத்தியத் துறைக்கான சக்தி வளத்தில் தாம் சிறப்படைய முடியும் என்று வெளிநாட்டவருக்கு கோடி காட்டியபடியே ஈரான் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது. யுரோனிய பிரிப்பிற்குள்ளான சக்திமிக்க கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கடலில் இருந்து ஈரான் ஏவியது. பாரசீக வளைகுடாவை தாண்டி இது இலக்கை தொட்டுள்ளது. ஈரானின் இந்த முன்னேற்றம் இஸ்ரேலுக்கு சில செய்திகளை சொல்லியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேலிய தாக்குதல் நடைபெறும் என்ற எச்சரிக்கைகளை அது முற்றாக புறந்தள்ளியுள்ளது. இதே யுரேனியம் பிரிப்பு முயற்சி வெற்றிகளை தாங்கிய அணுசக்தியானது ஈரானிய நவுர் ராக்கட்டுக்களிலும் பொருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஈரான் அணு குண்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மேலை நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. ஆனால் ஈரான் அதை தொடர்ந்து மறுத்து வருகிறது. அதேவேளை அமெரிக்க ஆளில்லா விமானத்திற்கே ஆப்பு வைக்கக் கூடிய கூரிய அறிவுள்ள விஞ்ஞானிகள் ஈரானில் இருப்பது மேலை நாடுகளுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஸ்யாவும் தனது பற்றியாற்றிக் தரத்திற்கு இணையான ஏவுகணை சுடும் கலங்களை ஈரானுக்கு வழங்கியுள்ளது. மத்திய கிழக்கு பிரச்சனை முடிவடைய பத்து வருடங்கள் ஆகுமென இஸ்ரேல் கூறியிருப்பது ஈரானின் பலத்தின் மீதான மதிப்பீடாகும்.
உப கதை :
ஈரான் என்பது பழைய காந்தார நாடாகும். இந்த நாட்டில் இருந்து வந்தவளே திருதராஷ்டிரனின் மனைவியாகிய காந்தாரி. இவளுடைய தம்பியாகிய சகுனியும் காந்தார நாட்டை சேர்ந்தவனே. இவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து திராவிடர்களுடன் மோதி அவர்களை தெற்கே விரட்டிய கூட்டத்தினர் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. இதே காந்தாரர்களே ஈழத்தில் தமிழருக்கு ஓர் அரசு ஏற்படாமல் தடுத்தார்களா.. சகுனியின் செயற்பாடுகளை இவர்கள் பெற பழைய காந்தார தொடர்புகளா காரணம் என்பது சுவை மிக்க வரலாற்று கற்பனையாகும்.

225 பேரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கப்பற்படை வீரர்

வாஷிங்டன், ஜன. 4-
அமெரிக்காவை சேர்ந்தவர் கிறிஸ்கெயில். இவர் அமெரிக்க கப்பற்படையான 'நேவி சீல்' பிரிவில் வீரராக பணிபுரிந்தார். இவர் குறி தவறாமல் சுடுபவர். இவர் வைத்த குறி தப்பாது. அவ்வாறு அவர் சுட்டதில் இதுவரை 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முதன் முதலாக அவர் ஒரு பெண்ணை சுட்டுக்கொல்ல தயங்கிய சம்பவம் ஈராக்கில் நடந்தது. சதாம் உசேனை பிடிப்பதற்கு முன்பு அமெரிக்க கப்பலை வெடிகுண்டு வீசி தகர்க்க அந்த பெண் வந்தாள். பெண் என்பதால் அவளை சுட கெயில் தயங்கினார். ஆனால் உடனே சுட்டு வீழ்த்தும்படி ராணுவ பிரிவு தலைவர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவளை சுட்டு வீழ்த்தினார். இருந்தும் அந்த குண்டு வெடித்துவிட்டது.
அதில் இருந்துதான் துப்பாக்கியால் சுடும்போது ஏற்படும் தயக்கத்தை முற்றிலும் கைவிட்டார். எதிரிகளை குறி பார்த்து சுட்டு வீழ்த்தி வந்தார். இவருக்கு முன்பு அமெரிக்க வரலாற்றில் ராணுவ வீரர் அடல்பெர்ட் சுப் வால்ட் டிரன் என்பவர் 109 பேரை சுட்டுக்கொன்ற வரலாறு இருந்தது. இவர் வியட்நாம் போரில் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவரது இச்சாதனையை கிறிஸ் கெயில் முறியடித்து உள்ளார்.
இவர் சுட்டுக்கொன்றவர்களில் மிகவும் முக்கிய மானவர்களின் பட்டியலில் அல்- ஷபிதான் ரமாத் என்பவன் முக்கியமானவன். அவன் தலைக்கு அமெரிக்கா ரூ.10 லட்சம் அறிவித்து இருந்தது. கெயில் 225 பேரை சுட்டுக்கொன்று இருந்தாலும் அவர் 160 பேரை கொன்றுள்ளதாக ராணுவ தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வ மாக அறிவித்துள்ளது. இந்த அற்புதமான தகவல்களை அவர்தான் புதிதாக எழுதியுள்ள குறி தவறாது சுட்டு வீழ்த்துபவர் என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அமெரிக்கா கடற்படையில் 10 ஆண்டுகளாக பணி புரிந்த அவர் கடந்த 2009-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அமெரிக்க போர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம்: ஈரான் தளபதி எச்சரிக்கை

டெக்ரான், ஜன. 4-
வளைகுடா பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் நாடு அணுகுண்டுகளை தயாரிப்பதாக குற்றம்சாட்டி அந்த நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் ஈரான் அணுசக்தியை நாங்கள் மின்சார தயாரிப்பு போன்ற ஆக்கபூர்வ திட்டங்களுக்கே பயன்படுத்துகிறோம் என கூறுகிறது.
இந்நிலையில் ஈரான் நாட்டு ராணுவம் வளைகுடாவில் உள்ள ஓமன் கடல் பகுதியில் போர் பயிற்சி ஒத்திகையை நடத்தி வருகிறது. இதில் கடற்படை நடத்திய 10 நாள் ஒத்திகை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
இந்த போர் ஒத்திகையின் போது ஈரான் போர்க்கப்பலில் இருந்து குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியது. இதன் மூலம் ஈரான் தனது ராணுவ வலிமையை பெருக்கி கொண்டுள்ளது என்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு ராணுவத்திற்கு சவால் விடும் அளவிற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வளைகுடா பகுதியில் ஈரான் போர் ஒத்திகை நடத்துவதால் அமெரிக்க போர்க்கப்பல்கள் அவ்வழியாக செல்லவில்லை. இதற்கிடையில் அமெரிக்க போர்க்கப்பல் திரும்பவும் நுழையக்கூடாது. மீறினால் எதிர் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஈரான் ராணுவ தலைமை தளபதி அதோல்லா சாலேகி கூறியதாவது:-
ஓமன் கடல் பகுதியில் எங்கள் பயிற்சி நடைபெறுகிறது. எனவே எதிரிகளின் (அமெரிக்க) போர்க்கப்பல் செல்லக்கூடாது. இந்த எச்சரிக்கை ஏற்கனவே ஒருமுறை விடுக்கப்பட்டு விட்டது. மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் அமெரிக்கா போர்க்கப்பல் எது என்பதையோ, ஈரான் எந்த விதமான எதிர் நடவடிக்கை எடுக்க போகிறது என்பதையோ அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் பக்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்காவின் 15-வது கடற்படை கருத்து தெரிவிக்கையில், வளைகுடா பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கப்பல் செல்ல அனுமதிக்க மாட்டோம் என விளக்கம் அளித்தது.

வளைகுடா பகுதியில் போர்க்கப்பல்கள்: ஈரான் எச்சரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது

வாஷிங்டன், ஜன. 5-
பாரசீக வளைகுடா பகுதியில் தங்கள் கடற்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டு இருப்பதால், அந்த பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என்று ஈரான் விடுத்த எச்சரிக்கையை, அமெரிக்கா நிராகரித்து உள்ளது.
இதுபற்றி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பத்திரிகை தொடர்பு செயலாளர் ஜார்ஜ் லிட்டில் கூறுகையில்; வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைத்தன்மையை கருதி பாரசீக வளைகுடா பகுதியில் பல ஆண்டுகளாக அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன என்றும், இந்த நிலை தொடரும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் இருந்தும் உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்ப அந்த நாடு இவ்வாறு பேசி வருவதாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை பிரிவு செயலாளர் ஜே கார்னி கூறினார்.

Wednesday, 4 January 2012

சீனாவின் இவு பகுதியில் வியாபாரத் தொடர்பு கொள்ள வேண்டாம்: இந்திய வியாபாரிகளுக்குத் தூதரகம் எச்சரிக்கை

பெய்ஜிங், ஜன. 3:÷சீனாவின் இவு வர்த்தக மையத்தில் வியாபாரம் செய்ய வேண்டாம் என்று இந்திய வியாபாரிகளுக்கு சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 ஜிஜியாங் மாகாணம், இவு பகுதியில் செயல்பட்ட நிறுவனமொன்று நிலுவைத் தொகையை தராததால், அதில் பணியாற்றிய இந்தியர்கள் ஷியாம் சுந்தர் அகர்வால், தீபக் ரஹேஜா ஆகியோரை சீன வர்த்தகர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர். பின்னர், அவர்களை போலீஸôரிடம் ஒப்படைத்தனர்.
 இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றதைத் தொடர்ந்து, அவர்களை மீட்க கடந்த டிசம்பர் 31-ம் தேதி இந்திய தூதரக அதிகாரி பாலசந்திரன் சென்றார். அப்போது பாலசந்திரனை நீதிமன்ற வளாகத்தில் சீன வர்த்தகர்கள் தாக்கினர். காயமடைந்த பாலசந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 இதற்கிடையே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் இருவரின் பாதுகாப்பைக் கருதி, அவர்களை ஹோட்டல் ஒன்றில் போலீஸôர் தங்க வைத்துள்ளனர். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
 இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 எச்சரிக்கை:÷இந்த நிலையில், இவு பகுதிக்கு வியாபாரம் செய்யச் செல்லும் இந்தியர்களுக்கு, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:÷இவு பகுதியில் உள்ள சீன வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டு எந்த வியாபாரமும் செய்ய இந்தியர்கள் முயற்சிக்க வேண்டாம். இப்போது வியாபாரம் செய்து வருபவர்களும் தங்களது பணப் பரிவர்த்தனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 வர்த்தக ரீதியாக தகராறு ஏற்படும்போது, இந்திய வியாபாரிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கும் போக்கு அப்பகுதியில் உள்ளது. மேலும், கடுமையான தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர். இது போன்ற பிரச்னை எழும்போது, இந்திய வர்த்தகர்களுக்கு சட்டரீதியான உதவிகளைச் செய்வதில் சிக்கல் நிலவுகிறது. மேலும், இந்திய வியாபாரிகளுக்கு அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது'' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இவு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் தங்கியுள்ளனர் என்றும், கடந்த ஆண்டு பல கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் பொருள்களைக் கொள்முதல் செய்தனர் என்றும் கூறப்படுகிறது.

குழப்பத்தில் இந்தியப் பொருளாதாரம்

வளரும் பொருளாதார நாடுகள் வரிசையில் சீனா, இந்தியா, பிரேசில் முன்னணியிலும் பின்னர் வளைகுடா நாடுகள் இதர ஆசிய நாடுகள் பின்னணியிலும் உள்ளன. எல்லாமே ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் வளர்ச்சியுற்ற யூரோ நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனும் பின்னிப் பிணைந்துள்ள சூழ்நிலையில், ஐரோப்பிய - அமெரிக்க வீழ்ச்சி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் நிதிக்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 இப்படிப்பட்ட "குளோபல் குழப்பத்தில்' இந்தியப் பொருளாதாரம், யூரோ - அமெரிக்காவைவிட மோசமாயுள்ளதைப் புரிந்துகொள்வது நன்று. ஏற்றுமதியை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் எல்லாமே அவரவர் பணத்தை மதிப்பிழக்கச் செய்கின்றனர். இது பொதுவான நிலை. அமெரிக்காவிலும் யூரோ நாடுகளிலும் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. வாராத கடன் வரம்பு மீறிவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்துள்ளது.
 அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் 2009-ஐ விட 2010-ல் நிகழாண்டு பற்றாக்குறைக் கணக்குக் கூடியுள்ளது. எனினும் 2008 -09 வீழ்ச்சியைவிட சற்றுக் குறைவுதான். சுமார் 30 சதவிகிதம் குறைவுக்குப் பின்னரும் பற்றாக்குறை நீடிக்கிறது. சுமார் 2 ட்ரில்லியன் டாலர் அளவில் பற்றாக்குறை குறைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
 யூரோ நாடுகளின் நிலை இன்னமும் மோசம். டாலரின் வீழ்ச்சியைக் காட்டிலும் யூரோவின் வீழ்ச்சி ஏறத்தாழ 10 சதவிகிதம் அதிகம். இன்றைய இந்தியாவில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இன்னமும் மோசம். ஆகஸ்டு 2011-ல் ரூ. 44.04 விலைக்கு விற்ற டாலர் டிசம்பர் 13-ம் தேதி ரூ. 53.40 என்ற நிலை. அதாவது 5 மாத வீழ்ச்சி 21 சதம். ரூபாயோடு ஒப்பிடும்போது டாலர் பலமாயுள்ளது. பலவீனமான யூரோவுடன் ஒப்பிட்டால் ரூபாயின் நிலை யூரோவைவிடக் கீழே விழுந்துவிட்டது. சரி ரூபாயின் வீழ்ச்சியால் நிகழக்கூடிய விபரீதங்கள் ஒன்றா, இரண்டா எடுத்துச்சொல்ல.
 முதலாவது பணவீக்கம் தணியாது, விலைவாசி ஏறும் என்பன உள்ளூர்ப்பிரச்னை. ரூபாயின் வீழ்ச்சிக்குரிய காரணம் முதலீட்டாளர்கள் ரூபாயை நம்பாமல் டாலரை நம்பும் நிலையில் ரூபாய் மூலதனம் டாலராக மாறியவண்ணம் உள்ளது.
 இந்தியாவில் ரூபாய்க்கு ரிப்போ வட்டி அதிகம் என்பதால் இந்தியக் கார்ப்பரேட்டுகள் குறைந்த வட்டி அல்லது வட்டியே இல்லாத டாலர் ரொக்கக்கடனில் ஆர்வம் காண்பிக்கின்றனர். ஏற்றுமதிக்குரிய உற்பத்தியில் முதலீடு செய்து கஷ்டப்படுவதைவிடத் தங்கம் வாங்கும் போக்கும் உள்ளது.
 பணவீக்கம், விலைவாசி உயர்வு எல்லாம் பழக்கப்பட்டுவிட்ட நிலையில் எந்த நாடும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் போக்கு விசித்திரமாகத் தோன்றலாம். டாலரை வலிமைப்படுத்துவதற்காக ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்துவதற்கு மாறாக மேலும் மேலும் டாலர் ரொக்கப் புழக்கத்தை அள்ளிவிடுவதன் மூலமே பொருளாதாரம் சீராகும் என்று எண்ணுகின்றனர்போலும்! எந்த அளவில் ஒழுங்கற்ற கடன், முதலீட்டுக் கட்டுப்பாடு ஒருங்கிணையாமல் கீன்ஸ் வகுத்த முழு வேலைவாய்ப்பு இலக்கைத் தொட முடியும்?
 அமெரிக்கா யோசிக்க வேண்டிய கேள்வியைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஆனால், நாம் கவலைப்பட வேண்டிய விஷயம் அமெரிக்க ஏற்றுமதி பற்றியது. மலிவான டாலர் முதலீடுகளை அனுப்பி ரூபாயை விழவைத்த தந்திரம் கவலைப்பட வேண்டிய விஷயம் அல்லவா?
 டாலர் முதலீடுகள் வேண்டாம் என்று பிரேசில் மட்டும் குரல் கொடுக்கிறது. ஆனால், இந்தியாவோ வரவேற்கிறது. டாலர் முதலீடுகளே நம்மைக் காப்பாற்றும் என்ற அளவில் நிதியமைச்சரும் பிரதமரும் பேசி வருகின்றனர்.
 இந்தியாவுக்கு வரும் டாலர் முதலீடு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும். பரிவர்த்தனை விலை மதிப்பு காரணமாக நமது நாணயச் செலாவணி பற்றாக்குறை இப்போதே கூடுதலாகியுள்ளது. மேலும் மேலும் இது அதிகமாகும்போது ஏற்றுமதி லாபமாயிருக்காது. மற்றொரு சிக்கலை அதாவது, பொருளாதாரச் சீரழிவைக் கவனிக்கலாம்.
 தொழிலில் பணம் முதலீடு ஆகாமல் ரியல் எஸ்டேட், கட்டடக் கட்டுமானம், ஷேர் - ஸ்டாக் மார்க்கெட், தனிப்பட்ட நுகர்வு போன்றவை வேலைவாய்ப்புகளைத் தோற்றுவிக்காமல் பணவீக்கத்தையும், வாராத கடனால் ஏற்படும் பற்றாக்குறையையும் ஏற்படுத்தும்.
 அமெரிக்காவில் செய்வதையெல்லாம் நாம் செய்ய வேண்டும். அமெரிக்காவையே இங்கு கொண்டுவந்து வால்மார்ட் அழகை ரசிக்க நினைத்தால் அமெரிக்கா இந்தியாவை விழுங்கி விடாதா?
 ரூபாய் மதிப்பு விழுந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஏற்றுமதியாளர்களும், டாலர் பணம் வைத்துள்ளவர்களும் ரூபாயாக மாற்றிக்கொள்வதில் ஆர்வம் காண்பிக்க மாட்டார்கள்.
 இறக்குமதியாளர்கள் டாலரை வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பார்கள். ரூபாயைக் காப்பாற்றும் முயற்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் செயல்பாடுகளை நிதியமைச்சர் ஆதரிப்பதாகத் தெரியவில்லை.
 இந்தியாவின் நிதிக் கொள்கையை அதாவது, பணம் - வட்டிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வகுக்கும். பைனான்சியல் பாலிசி என்ற நிதிக்கொள்கையை நிதியமைச்சர் வகுத்தளித்தார்.
 ரூபாயைப் பலப்படுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் விரும்புகிறார். ரூபாயைப் பலவீனப்படுத்த பிரணாப் முகர்ஜி விரும்புகிறார். இவர்கள் இருவரும் ஒத்துப்போனால்தான் இந்தியா உருப்படும் என்று தோன்றுகிறது.
 ஏற்றுமதியை நம்பி உயர்ந்துவரும் முன்னேற்றப் பொருளாதாரம் என்று பீற்றிக்கொள்ளும் சீனா, இந்தியா, பிரேசில், ரஷிய நாடுகளுக்கு அமெரிக்கா எப்படிப் பொறி வைத்துள்ளது என்பதை அனைத்துலகப் பொருளியலில் அரிச்சுவடி படித்தவர்களுக்குப் புலனாகும். சீனாவின் வளர்ச்சி யூரோ - அமெரிக்க ஏற்றுமதியை நம்பியுள்ளது. சமையலறைக்குரிய மின்சாதனப் பொருள், கருவிகள் - ஃபிரிட்ஜ் உள்பட சாதனங்களின் உதிரிகளை வியட்நாம், கொரியா போன்ற பல சிறிய நாடுகளிடம் சீனா இறக்குமதி செய்து, அமெரிக்க ஏற்றுமதி நிகழ்கிறது.
 இந்தியாவிலிருந்து சர்வீஸ் எக்ஸ்போர்ட் சாஃப்ட்வேர், ஹார்டுவேர் போன்ற பல்வேறு கணினிப் பணிகள் ஏற்றுமதி. ரஷியாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி. பிரேசிலிலிருந்து வேளாண் விளைபொருள்கள், இன்று நிலவியுள்ள "குளோபல் குழப்பம்' - வால்ஸ்டீரிட் போராட்டம் ஆகிய காரணங்களால் பொருளாதாரத்தில் விரைந்து வளரும் நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும்போது வளர்ச்சியின் தேக்கமும் உலகளாவியிருக்கும். சீன ஏற்றுமதியை அமெரிக்கா தடை செய்தால் நஷ்டம் சீனாவுக்கு மட்டுமல்ல, சீன ஏற்றுமதியை நம்பி வாழும் கிழக்காசிய நாடுகளின் வளர்ச்சியும் தடையுறும்.
 நஷ்டம் என்றாலும் டாலர் யூரோ நாடுகளுக்கு ஏற்றுமதி வழங்கலைத் தொடர்வதைத் தவிர, வேறு வழியில்லை. அதேசமயம் அமெரிக்கா மதிப்பிழந்த டாலரை பொருளாதாரத்தில் விரைந்து வளரும் நாடுகளுக்கு முதலீடுகளாக அனுப்பித் தன் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவதற்கு ஏற்ப, அந்த நாடுகளை வீழ்த்தி டாலர் பரிவர்த்தனை விலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் போக்கையும் கவனிக்க வேண்டும். எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் அமெரிக்க - இந்திய உறவு என்றாலும் அமெரிக்க - சீன உறவு என்றாலும் ""நாயர் பிடித்த புலிவால்'' - கதைபோல் உள்ளது.
 இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து வருவது "குளோபல் குழப்பம்' மட்டுமே அல்ல. உள்ளூர்க்காரணிகள் நிறைய உண்டு. குளோபல் குழப்பத்தில் தத்தளிக்கும் நாட்டுப் பொருளாதாரத்தில் வந்தவரை லாபம் என்று கொள்ளையடிக்கும் திருட்டுக்கூட்டம் திருடிக்கொண்டே வாழ்கிறது. ஊழல் கூட்டம் ஊழல் செய்த வண்ணம் உள்ளது.
 அண்மையில் ஆடிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ள கறுப்புப்பணம் பற்றிய தகவல் துணுக்குறச் செய்கிறது. தேச வருமானத்துக்கு வரவு வைக்க வேண்டிய வருமான வரிப்பணத்தில் வரி கட்டாமல் ஏமாற்றும் 12 பெரிய நிறுவனங்களின் பங்கு 90 சதவிகிதமாம்.
 இப்படிப்பட்ட சூழ்நிலையில் உற்பத்தித் தன்மையுள்ள தொழில் - வேளாண்மையில் முதலீடு செய்யவேண்டிய அன்னிய டாலர் வணிகத்திலும், சர்வீஸ் துறையிலும் செலவாகும்போது பற்றாக்குறை பாரமாகி பணவீக்கம் தொடரும். விலைவாசி மேலும் மேலும் உயரும்.
 தொழில் உற்பத்தி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு இவற்றில் கவனம் செலுத்தாமல் கடைவிரித்து எலைட் அங்காடிகளைப் பெருக்குவதால் இந்தியப் பொருளாதாரம் சீரடையாது.
 உலகமயமாக்கல் குழப்பத்தால் இந்தியாவில் வரியை ஏமாற்றும் பணக்காரத் தொழிலதிபர்கள் கறுப்புப்பணத்தைப் பெருக்கியவண்ணம் உள்ளனர். நியாயமாகத் தொழில் செய்ய நினைக்கும் நல்லவர்கள் நசிந்து வருகின்றனர்.
 இந்தியத் தொழிலில் ஏகபோகமாக வளர்ந்துள்ள ஒரே தொழில் கந்துவட்டி. 2 வட்டி, 3 வட்டிக்கு நல்ல தொழில் செய்ய விரும்புவோருக்குக் கடன் கிடைக்கும். எவ்வளவு பாடுபட்டும் வட்டி கட்டியே வாழ்நாளைக் கடத்தும் நல்லவர்களுக்கு மலிவான கடன் கிட்டுவதில்லை.
 சீப் லிக்விடிட்டி, மொபைல் கேபிட்டல் என்று சொல்லப்படும் டாலர் பணம் உழைக்கும் தொழில் முனைவோருக்கும் விவசாயிகளுக்கும் எட்டாக் கனி. கந்து வட்டிக்கும், ரியல் எஸ்டேட்டுக்கும் டாலர் கிட்டலாம்.
 பாவம் இந்த குளோபல் குழப்பத்தில் லட்சம் லட்சமாகப் பணம் செலவழித்துப் பொறியியல் பட்டம், மென்பொருள் பயிற்சி பெற்றுள்ள இந்திய மாணவர்களின் காத்திருப்போர் பட்டியல் விரிவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் விசில் சப்தம் வராத பிரஷர் குக்கர் கொதிப்பதுபோல் உள்ளது. 

உள்நாட்டுப் போருக்கு ஒத்திகையா?

எதை விதைக்கிறோமோ அதுதானே முளைக்கும். இது அனைவருக்கும் தெரியும்; அன்பை விதைத்தால் அன்பே முளைக்கும்; வம்பை விதைத்தால் வம்புதானே விளையும். கேரள அரசாங்கம் தம் மக்களைத் தூண்டிவிட்டு வெறுப்பையும் வன்முறையையும் விதைத்துவிட்டு அறுவடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

 தமிழகத்தின் பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா! சாது மிரண்டால் காடு கொள்ளாது; தமிழ் மக்கள் மிகுந்த கோபம் கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்குக்கே கறுப்புக்கொடி காட்டும் அளவுக்குக் கோபம் உச்சநிலையை அடைந்துள்ளது. கட்டிக்காக்க வேண்டிய அரசே கொட்டி இறைத்தால் அதை பொறுப்புள்ள தலைமை என்று கூற முடியுமா?
 முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்கள் கொதிநிலையை அடைந்துள்ளனர். உறங்கிக் கிடந்த தமிழ் மக்களை உசுப்பிவிட்ட பெருமை கேரள அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையுமே சேரும். உச்ச நீதிமன்றத்தில் இருந்த விவகாரத்தை உள்ளூர் சண்டையாக உருமாற்றி விட்டார்கள்.
 ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு ஆய்வு மேற்கொண்டிருக்கும் நிலையில் இடுக்கி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாகவும், அணையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உயர்நிலைக் குழுவிடம் கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்களை வகுப்பதற்காக தனியான குழு ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் தலைமையிலான தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. இதைத் திரும்பப் பெறும்படி தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
 ""புதிய அணையைக் கட்டியே தீருவோம்'' என்று கொக்கரிக்கும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ""தமிழகத்துடன் பேசத் தயார்'' என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
 ""மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் கேரள அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. புதிய அணை கட்ட வேண்டும் என்ற முடிவை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்'' என்றும் கூறியுள்ளார்.
 வீண் சண்டைக்கு இழுத்து, சமாதானம் பேசும் கட்டப்பஞ்சாயத்து முறை இது. இதற்குத் தமிழகம் உடன்பட வேண்டுமா?
 "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகம் தனக்குள்ள உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காது' என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனித நாகரிக வரலாற்றை ஆய்வு செய்தாலும், நீரும் நீர் மேலாண்மையுமே மனித இனத்தின் அடிப்படை உரிமையாகிறது.
 "நீரின்றி அமையாது உலகு' என்று குறள் கூறுகிறது. மனித நாகரிக வரலாற்றில் வேளாண்மையே முதலிடம் வகிக்கிறது. இதற்குக் காரணமான தண்ணீரின் மேலாண்மையே மனிதர்களை நாகரிக மனிதர்களாக மாற்றின. பல நாகரிகங்கள் ஆற்றங்கரைகளில் உருவானதற்கும் இதுவே காரணமாகிறது.
 "நாகரிகத்தின் தொட்டில்கள்' என்று அழைக்கப்படும் நான்கு பெரும் நாகரிகங்களும் ஆற்றங்கரை நாகரிகங்களாகவே அமைந்தன. தலைசிறந்த எகிப்து நாகரிகம் நைல்நதியின் கரையிலேயே அமைந்திருந்தது. அதனால்தான் கிரேக்க வரலாற்றாசிரியர்கள் "எகிப்து என்பது நைல்நதியின் கொடை' என்று எழுதினர்.
 மனிதனுக்கும், தண்ணீருக்கும் உள்ள உறவை விளக்குவதற்கு எகிப்து நாகரிகமே சிறந்த எடுத்துக்காட்டாகும். எகிப்து நாட்டு மக்களின் வாழ்க்கையும் நைல்நதியையே நம்பியிருந்தது.
 இதே காலகட்டத்தில் மத்திய ஆசியாவில் உள்ள யூப்ரடிஸ் மற்றும் டைகரிஸ் என்ற இரு நதிகளுக்கிடையில் வளர்ந்த நாகரிகமே சுமேரிய நாகரிகம். இங்கும் வேளாண்மையும், பாசனமும் சிறந்து விளங்கின. சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட இந்த நாடு இப்போது இராக் என அழைக்கப்படுகிறது. இப்போது இது படும் பாடு உலகம் அறியும்.
 சுமேரிய நாகரிகத்தைப் போலவே சீனாவிலும் யாங்ட்úஸ மற்றும் ஹுவாங்ஹோ என்ற ஆற்றுப்படுகைகளிலும் பாசனமும், வேளாண்மையும் அதையொட்டிய நாகரிகமும் வளர்ந்திருந்தன. சுமேரியர்களைவிட அதிகமாக வெள்ளத்தின் துயரத்துக்கு ஆளானவர்கள் சீனமக்கள். கடந்த 3000 ஆண்டுகளில் 1500 முறை வெள்ளச்சேதம் விளைவித்த ஹுவாங்ஹோ நதியை "சீனாவின் துயரம்' என்றே வரலாறுகள் கூறுகின்றன.
 சிந்து நதியின் விளைவாக உருவானதால்தான் அது "சிந்து நதி நாகரிகம்' என்று அழைக்கப்பட்டது. மற்ற நாகரிகங்களை ஒப்பிட்டு நோக்கும்போது சிந்துவெளி நகரங்களின் அமைப்பு வியப்பூட்டுகிறது.
 மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னும் இரு நகரங்கள் வல்லுநர்களையே திக்குமுக்காட வைத்தது. சிந்து நதியின் பாசன வேளாண்மை சிறந்த நிலையில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
 உலகின் எல்லா நதிகளும் இதைப்போன்ற நாகரிகங்களை உருவாக்கிவிடவில்லை. ஆரம்பத்தில் மனிதர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபடுவதற்கு ஆறுகளில் பாசன வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.
 இந்தப் பெருமைமிக்க நீர்ப்பாசன முறையை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் வளர்த்தெடுத்தனர். அதற்கு எடுத்துக்காட்டே முல்லைப் பெரியாறு அணையும், மேட்டூர் அணையுமாகும். வறட்சிப் பிரதேசமாக இருந்த மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் மக்களை வாழ வைப்பதற்கு வைகை நதியால் முடியவில்லை. 1861 - 62-ம் ஆண்டுகளில் தொடர்ந்து கடும் பஞ்சம் ஏற்பட்டது. இப்பஞ்சத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்; பல்லாயிரக்கணக்கானவர்கள் பிழைப்புத் தேடி வெளியிடங்களுக்குப் போயினர்.
 வைகை நதி வறண்டுபோன காலங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் ஓடும் பெரியாறு ஏராளமான நீரை வீணாகக் கடலில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. அந்த நீரைப் பயன்படுத்தி அப்பகுதி மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதுதான் முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கமாகும்.
 1808-ல் சர் ஜேம்ஸ் கால்டுவெல் இத்திட்டத்தை ஆய்வு செய்தார். கர்னல் பென்னி குயிக் கடுமையான உழைப்பால் கட்டி முடித்தார். 1895 அக்டோபரில் ஆளுநர் வென்லாக் பிரபு முறைப்படி திறந்து வைத்தார். 999 ஆண்டுகளுக்கு திருவனந்தபுரம் அரசு சென்னை அரசுக்குக் குத்தகைக்கு விட்டது. 999 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது உடன்படிக்கை.
 இதன் மூலம் மிகவும் பின்தங்கியிருந்த மதுரை, இராமநாதபுரம் பகுதிகள் புதுவாழ்வு பெற்றன. 22 ஆயிரம் ஏக்கர் மட்டுமே விளைநிலமாக இருந்த இப்பகுதிகளுக்குப் பாசன வசதியளித்து 2 லட்சம் ஏக்கர் நிலப்பகுதியை விளைநிலமாக்கி, அப்பகுதி மக்களின் வாழ்வையே மாற்றியமைத்துவிட்டது. அதற்கும் இப்போது சோதனை வந்துவிட்டது; சொல்ல முடியாத வேதனையும் வந்துவிட்டது.
 ஆங்கிலேயரின் மனிதநேயம் நம் மக்களை வாழ வைத்தது. நம் அண்டை மாநில சகோதரர்களால் நம் வாழ்வாதாரங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணை கட்டப்பட்டு 116 ஆண்டுகளாகி விட்டதால் பழையதாகிவிட்டதாம். அணை பலவீனமாகி விட்டது. அது உடைந்தால் மக்களுக்கு பெருஞ்சேதம் விளையுமாம். அதனால் அணையை உடைப்போம் என்று கூக்குரல் எழுப்புகின்றனர். ஆனால், உடைவது அணை மட்டுமல்ல, இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதை மறந்துவிட்டனர். ஆத்திரத்தில் ஓர் அரசாங்கமே அறிவிழந்து போகலாமா?
 ""மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைக்கு தண்ணீர் காரணமாக இருக்கக் கூடாது. நதிநீர் காரணமாக உள்நாட்டுப் போர் ஏற்பட்டால் அதை நம் நாடு தாங்காது...'' என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எச்சரித்துள்ளார். இது தேசத்துக்குத் தேவையான நேரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அபாய அறிவிப்பு.
 நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம் ஆகியவை தேசிய அளவிலான அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அதேபோல் நாட்டின் நீர் ஆதாரத்தையும் நிர்வகிக்க தேசிய அளவிலான அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது அவர் கருத்து.
 அமெரிக்காவில் உள்ள மிசிசிபி ஆறு அந்நாட்டிலுள்ள 32 மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. ஆற்றுநீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே அங்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கடந்த 200 ஆண்டுகளாக மிசிசிபி ஆற்று நீர்ப் பங்கீடு, பராமரிப்பு அந்த நாட்டு ராணுவத்தின் பொறுப்பில் உள்ளது என்பதால் இதை ஏற்கத் தயக்கம் வேண்டியதில்லை.
 "இப்போது நம் நாட்டில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க நீர் ஆதாரங்களைத் தேசியமயமாக்க வேண்டும் என்றும், ஆறுகள், அணைகளை ராணுவம் அல்லது கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அதன் மூலம் நமது நாடு அமைதியாக வளர்ச்சிப் பாதையில் செல்லும்' என்றும் அப்துல் கலாம் இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற விவசாயம் தொடர்பான மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
 இது தக்க தருணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சரியான தீர்வாகும்; இதற்கு எந்த அரசியல் சாயமும் பூச வேண்டிய தேவையில்லை. நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் வரவேற்க வேண்டும்.
 "கங்கை - காவிரி இணைப்புத் திட்டம்' விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. தென்னக ஆறுகள் இணைப்புத் திட்டமும் பேச்சோடு போனது. இவை செயல்படுத்தப்பட்டிருக்குமானால் இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நதிநீர்ப் பிரச்னையையும் தவிர்க்கலாம். ஆனால், அரசாங்கம் இந்தத் திட்டங்களை மட்டுமல்ல, நாட்டு மக்களையும் கைவிட்டுவிட்டது.
 "அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான்' என்று அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்திய நாட்டில் நதிநீர் காரணமாக உள்நாட்டுப் போர் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரம் உள்நாட்டுப் போருக்கான ஒத்திகையாக இருக்கக் கூடாது.

பிரபஞ்சத்தின் பெருமை கூடங்குளம்

உயிர் வாழ்வதற்கு நீர் எப்படி அவசியமானதோ, அதே அளவுக்கு நமது அன்றாடத் தேவைக்கு மின்சாரமும் அவசியமானது. மின்சாரம் இல்லாமல் ஓரணுவும் அசையாத நிலை உருவாகிவிட்டது. ஆனால், மின்பற்றாக்குறையால் பல்வேறு மாநிலங்கள் திண்டாடி வருகின்றன.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மின் உற்பத்தியைப் பெருக்குவது ஒன்றே இதற்குத் தீர்வாக இருக்க முடியும்.
இந்தியாவில் நீர் மின் நிலையம், அனல் மின் நிலையம், அணு மின் நிலையம், காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின் உற்பத்திக்கு இத்தனை வழிகள் இருந்தும், நமது நாட்டில் 65 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரம், அனல் மின் நிலையங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால், நிரந்தர மின் உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, அனல் மற்றும் அணு மின் நிலையங்களை நாடியே ஆக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இதன் காரணமாக, ரூ.16 ஆயிரம் கோடி செலவில் கடந்த 10 ஆண்டு உழைப்பின் விளைவாக, நாட்டின் தென்கோடியில் உருவானது கூடங்குளம் அணுமின் நிலையம். இதற்குத்தான் போராட்டக்காரர்களால் சோதனை வந்துள்ளது.
அணுமின் நிலையத்தில் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால், பல கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும் மக்கள் மாண்டு போவார்களென, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயம்தான் போராட்டமாக வெடித்திருக்கிறது. இதற்கு காரணம், ஜப்பான் புகுஷிமா அணு உலையை சுனாமி தாக்கியதால் ஏற்பட்ட விளைவு. கூடங்குளம் அணுமின் நிலையம் மிகக் குறைந்த அளவிலான நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள அணு உலையும் முற்றிலும் அதிநவீனமானது. கடல்மட்டத்தில் இருந்து 8.7 மீட்டர் உயரத்தில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளதால் பூகம்பம், சுனாமி, குண்டுவெடிப்பு, விமான மோதல் போன்ற எந்தவித இயற்கை, செயற்கைத் தாக்குதல்களையும் அணு உலை தாங்கும்.
ஏதேனும் விபத்து நடந்தால், அணு எரிபொருள்கள் புவிஈர்ப்பு சக்தி மூலம் பூமிக்கு அடியில் சென்று தானாக மூடிக்கொள்ளும். அணுக்கசிவு ஏற்படாமல் தடுக்கவும் அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜப்பான் புகுஷிமா அணு உலையில் சுனாமி தாக்குதலால் தண்ணீர் சூடாகி, ஹைட்ரஜன் வாயு உருவாகி புகை மண்டலம் ஏற்பட்டது.
அதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் தடுக்க, அணு உலையில் உருவாகும் ஹைட்ரஜனைக் குளிர்வித்து நீராக மாற்றும் "ஹைட்ரஜன் மறு இணைப்பான்கள்' பொருத்தப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளில் பொருளாதார வல்லரசு நாடான அமெரிக்காவின் மக்கள் தொகை, உலக மக்கள்தொகையில் 4.48% மட்டுமே. ஆனால், அவர்கள் வைத்துள்ள அணு உலைகள் எண்ணிக்கை 120. அதன்மூலம் அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி அளவு 1,01,229 மெகாவாட். பிரான்ஸ் மக்கள்தொகை உலக மக்கள்தொகையில் 0.94% மட்டுமே. அணு உலைகள் எண்ணிக்கை 69; அதன்மூலம் அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் 63,236 மெகாவாட்.
சீன மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 19.2%. அணு உலைகள் எண்ணிக்கை 15; அதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் 11,078 மெகாவாட்.
பாகிஸ்தான் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 2.55%. அவர்கள் வைத்துள்ள அணு உலைகள் எண்ணிக்கை 2; அதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் 725 மெகாவாட்.
இந்திய மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 17.35%. அணு உலைகள் எண்ணிக்கை 20; இதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு வெறும் 4,780 மெகாவாட் என்ற நிலையில், உலக அளவில் 15-வது இடத்திலேயே உள்ளது.
மக்கள்தொகையில் இரட்டை இலக்க சதவிகிதத்தில் கூட வராத நாடுகள், அணுமின் உற்பத்தியில் லட்சம் மெகாவாட் உற்பத்தி செய்து, மின் மிகை நாடுகளாக உள்ளன. ஆனால், உலக மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிக்கும் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் அணுமின் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருக்கிறது.
உலக மக்கள்தொகையில் 4.48% மட்டுமே உள்ள அமெரிக்காவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மெகாவாட் மின்சாரம் தேவைப்படும்போது, உலக மக்கள்தொகையில் 17%க்கும் அதிகமாக உள்ள இந்தியாவுக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்?
இந்தியாவில் அணு உலைகள் எண்ணிக்கை குறைவு; ஆனால், மக்கள்தொகையும் மின்சாரத் தேவையும் அதிகம். இதன் காரணமாகவே அணுமின் நிலையம் இந்தியாவுக்கு மிகவும் அவசியமாகிறது. எந்தத் துறையிலும் ஆபத்து இல்லாமல் இல்லை.
அணுமின் நிலையம் அமைக்க, கூடங்குளத்தை தேர்ந்தெடுத்ததை அனைவரும் பெருமையாகக் கருத வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமாக கூடங்குளம் உருவெடுக்கும்; இதை இந்தப் பிரபஞ்சம் காணும்.